8 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்ப காலத்தில் பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் என்ன சொல்கின்றன?
கர்ப்ப காலத்தில் வரும் ஒவ்வொரு சுருங்குதலும் இறுதி காலத்தில் வருவதுப் போன்று உணரச் செய்யும். நீங்கள் தொடர்ந்து சிந்திப்பீற்கள், ‘இது தானா’, என்று, அது இல்லை என்பதை மட்டுமே புரிந்துக் கொள்ள வேண்டும். அனைத்து கர்ப்பிணி பெண்களும் டாக்டர் ஜான் பிராக்ஸ்டன் ஹிக்ஸ் நன்றி சொல்ல வேண்டும், இந்த குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும் மற்றும் அனைவருக்காகவும்.
பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் என்றால் என்ன?
பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள், விட்டுவிட்டு வரும் சுருக்கங்கள் ஆகும், இது முதல் மூன்று மாதங்களில் தொடங்கும், ஆனால் இரண்டாவது மூன்று மாதங்கள் வரை அதை நீங்கள் உணரக் கூட முடியாது. சில பெண்கள் அவற்றை அனுபவித்திருக்க கூட மாட்டார்கள். முதன்முதலாக 1872 ஆம் ஆண்டில் இந்த அறிகுறிகளை விவரித்த டாக்டர் ஹிக்ஸ் முதலில் அறிமுகப்படுத்தினார். இந்த சுருக்கங்கள் போது, உங்கள் கருப்பை தசைகள் 30 முதல் 60 வினாடிகள் அல்லது 2 நிமிடங்கள் வரை கூட சுருங்கும் அல்லது இறுகும். அவைகள் உண்மையான பிரசவத்திற்கு உங்களை தயார்படுத்துகிறதால், ‘பயிற்சி பிரசவம்’ அல்லது ‘பயிற்சி சுருக்கங்கள்’ என்று சில நேரங்களில் அவைகள் அறியப்படுகின்றன.
ஒரு பிராக்ஸ்டன் ஹிக்ஸ் எப்படி உணரப்படுகிறது?
எந்த வகையான கருப்பைச் சுருக்கத்திலும், உங்கள் கருப்பை, இடுப்பு, மற்றும் தாழ்ந்த அடிவயிற்று பகுதி இறுகுவது மற்றும் தளர்வதை நீங்கள் உணர்வீர்கள். பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் பிரசவ வலிகள் போலல்லாமல், விட்டுவிட்டும் மற்றும் ஒழுங்கற்றும் நிகழும். அவைகள் பொதுவாக வலியற்றதும், கணிக்க இயலாததும், தாள இல்லாமலும், தீவிரத்தில் ஒழுங்கற்றும், இருக்கும் ஆனால், சில நேரங்களில் அவைகள் ஒரு சின்ன அசெளகரியமாக இருக்கும்.
இந்த வீடியோவில் பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்பதை அறியவும்.
எனக்கு இருப்பது பிராக்ஸ்டன் ஹிக்ஸ்சா அல்லது பிரசவ வலியா என்பது எனக்கு எப்படி தெரியும்?
குறிப்பிட்ட தேதிக்கு ஒரு சில நாட்கள் முன்பு அல்லது உண்மையான பிரசவம் தொடங்குவதற்கு முன், உங்கள் சுருக்கங்கள் மிகவும் தாளமாக மாறும் மேலும் குறுகிய இடைவெளியில் தொன்றும். சில நேரங்களில் அவைகள் வலியை கூட ஏற்படுத்தலாம், உங்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக உங்களை முட்டாளாக்கலாம். அமைதியாக இருங்கள், அவைகள் இன்னும் பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் தான், இது போலியான பிரசவ வலி என்று அழைக்கப்படுகிறது.
உண்மையான பிரசவ வலியின் போது, உங்கள் சுருக்கங்கள் வலுவானதாவும், நீண்டதாவும், மற்றும் வழக்கமான இடைவெளிகளில் மீண்டும் தொடரும், அவற்றில் இருந்து விடுப்பட நீங்கள் என்ன முயற்சி செய்தாலும். இந்த வலிகளுடன் சேர்ந்து, கருப்பை வாயில் மாற்றங்கள் காணப்படும், இது குழந்தை வெளியேற போவதற்கு ஒரு தெளிவான அறிகுறியாகும்.
நீங்கள் உங்கள் சுருக்கங்கள் எந்த வழியில் மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்தால், அவைகள் இன்னும் பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்களாக தான் இருக்கும்.
பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் மிகவும் வலி மிகுந்ததாக மாறிவிட்டால் நான் கவலைப்பட வேண்டுமா?
நான் என்ன செய்ய வேண்டும்?
பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் வலி ஏற்படுத்தாது என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் லேசான அசவுகரியம் இருக்கலாம். உங்கள் நிலையை மாற்ற முயற்சி செய்யலாம் அல்லது சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் அவைகள் அறிகுறிகளை நிவர்த்தி செய்ய உதவுவதால். அசௌகரியத்தை எளிதாக்க ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது சில மூலிகை தேநீர் எடுத்து கொள்ளலாம், சில சமயங்களில் நடைபயிற்சியும் நிவாரணமளிக்கிறது. நீங்கள் உண்மையான பிரசவ வலியில் இருந்தால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல், அறிகுறிகள் தொடரும்.
நான் எப்போது அவசர எண்ணை அழைக்க வேண்டும்?
கீழ்க்காணும் ஒன்றுடன் சேர்த்து, நீங்கள் இன்னும் தாள, வலுவான மற்றும் அடிக்கடி ஏற்படும் சுருக்கங்களை அனுபவிக்கவில்லை என்றால், இது முந்தைய பிரசவத்திற்கான அறிகுறியாகவும் இருக்கலாம், உங்கள் உடல்நல பராமரிப்பு வழங்குனரை அழைக்க வேண்டியதாக இருக்கும்.
வழக்கமான சுருக்கங்கள்
மாதவிடாய் போது வரும் முதுகெலும்பு வலி போன்று
அடிவயிற்று வலி
யோனி இரத்தப்போக்கு
இடுப்புப் பகுதியில், கீழே தள்ளுவது போல் ஒரு உணர்வு (குழந்தை வெளியே வருவது போல)
மந்தமான அல்லது தாள முதுகு வலி
நீங்கள் 37 வாரங்கள் கடந்துவிட்டபிறகு, உங்களுக்கு சுருக்கங்கள் இருந்தால் உங்கள் உடல்நல பராமரிப்பு வழங்குனருக்கு தெரிவிக்க வேண்டும். உங்கள் தண்ணீர் குடம் உடைந்துவிட்டால் அல்லது உங்கள் சுருக்கங்கள் 5 நிமிட இடைவெளியில் மீண்டும் வந்தால், நீங்கள் கடுமையான வலியைக் கொண்டிருந்தால், மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.