• Home  /  
  • Learn  /  
  • உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 32
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 32

உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 32

12 Mar 2019 | 1 min Read

Sonali Shivlani

Author | 213 Articles

வாரம் 32 இல், உங்கள் கர்ப்ப வாரா வார விளக்கப்படம் உங்கள் குழந்தை 17 அங்குல நீளம் மற்றும் சுமார் 1900 கிராம் எடையை கொண்டுள்ளதைக் குறிக்கிறது. இந்த வாரம் முதல், உங்கள் குழந்தை விரைவாக வளர்ந்து, பிறப்பு நேரம் வரை வாரத்திற்கு 100-150 கிராம் பெறும். அவளது / அவனது நுரையீரல்கள் இன்னும் முதிர்ச்சியடையாமல் இருக்கின்றன, அதாவது அவள் / அவன் உங்கள் கருப்பையின்  வெளிப்புறத்தில் உயிர் வாழ இன்னும் தயாராக இல்லை என்று அர்த்தம். இந்த வளரும் சூழலில் இன்னும் சில வாரங்கள் இருப்பது வெளி உலகிற்கு  உங்கள் குழந்தையை தயார் செய்ய உதவும்.

உங்கள் குழந்தையின் துணிகளை ஒழுங்குபடுத்துவதற்கு இந்த வாரம் சிறந்தது. புதிதாகவோ அல்லது பிறர் கொடுத்ததாகவோ இருந்தாலும், அனைத்து துணிகளும் சூடான நீரில் மற்றும் மென்மையான சோப்புடன் கழுவப்பட வேண்டும், பின்னர் அனைத்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த இஸ்திரி செய்ய வேண்டும். இப்போது இருந்து செய்ய நிறைய சலவை இருக்க போகிறது என்பதால் அனைத்து சிறிய துணிகள், துணி நாப்பீஸ், சுற்றிப் போர்த்தும் துணி, தொப்பிகள் மற்றும் சாக்ஸ் சிறிய மூட்டைகளாக வரிசைப்படுத்தவும்.

 

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 

இப்போது உங்கள் கருப்பை இறுக்குவதையும், பின்னர் இடைப்பட்ட இடைவெளியில் ஓய்வெடுப்பதையும் நீங்கள் காணலாம். இவை பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் சுருக்கங்கள் மற்றும் அவை நாள் முழுவதும் தோராயமாக நடக்கும். வேலையில் பிஸியாக இருக்கும் சில அம்மாக்கள் இந்த சுருக்கங்களை கவனிக்காமல் போகலாம். இது உங்கள் கருப்பை பிரசவத்திற்காக பயிற்சி மற்றும் தயார் செய்வதாகும். பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் சுருக்கங்கள் லேசானவை, சிறியவை, அவ்வப்போது தோன்றுபவை மற்றும் வலியற்றவை மேலும் கருப்பை வாய் மீது எந்த விளைவையும் கொண்டிருக்காது.

மூச்சுத்திணறல், பசியின்மை, அமிலத்தன்மை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அனைத்தும் இந்த வாரம் நீங்கள் அனுபவிக்கக் கூடிய ஆரம்ப அறிகுறிகளாகும். இவை அனைத்தும் உங்களுக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கலாம் ஆனால் பொருத்துக் கொள்ளூங்கள் இது ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும்.

கனமான உணர்வதும், சில முதுகுவலி அனுபவிப்பதும் இயற்கையானது. ஒரு நல்ல நிலைக்காக ஒரு C வடிவத் தலையணையில் உட்கார முயற்சிக்கவும்.

 

இந்த கட்டத்தில், தூக்கம் நாசி நெரிசல் காரணமாக கடினமாக இருக்கலாம். மூக்கடைப்பு நெரிசலைக் குறைப்பதாலும் கருப்பைக்கு இரத்த ஒட்டத்தை அழுத்தாது என்பதாலும் பாதி உட்கார்ந்த நிலையில் தூங்குவது உங்களுக்கு வசதியாக இருக்கலாம்.

 

உணர்ச்சி மாற்றங்கள்

 

உங்கள் கர்ப்பத்தில் நீங்கள் வாரா வாரம் முன்னேறும் போது, நீங்கள் பிள்ளைப்பேறு வலி மற்றும் பிறப்பு பற்றியும் கவலை அனுபவிக்க கூடும், அதை எளிதாக்க, சில சாதகமான உறுதிமொழிகளை எழுதுங்கள். உங்கள் பிரசவத்தைப் பற்றி பாசிடிவ்வாக இருப்பது அவசியம் எனவே உங்களை சுற்றி பாசிடிவ்வான, மகிழ்ச்சியான மக்களை வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். நீங்கள் எதிர்மறை அனுபவங்களைக் கேட்டால், அவற்றை புறக்கணிக்கவும்!

 

சிவப்புக் கொடிகள்

 

ஒரு மணி நேரத்தில் 4 க்கு மேல் பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் சுருக்கங்களை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ‘குறைப் பிரசவத்தில்’ இருக்கலாம், மேலும் உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். கூடுதலாக, எந்தவொரு மாதவிடாய் போன்ற பிடிப்புகள்,  திரவம் அல்லது இரத்தக்கசிவு வெளியேற்றம் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் தெரிவிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல முறை, சரியான நேரத்தில் அறிவித்தால், குறைப்பிரசவம் கையாளப்பட முடியும் மேலும் உங்கள் மருத்துவர் உங்கள் குழந்தையை கர்ப்பப்பையில் இன்னும் சில வாரங்களுக்கு வைத்திருக்க முடியும்.

 

பாட்டி கதைகள்

 

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பத்தின் முடிவில் வழக்கமான குளியல் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்படி ஊக்கம் பெறுகின்றனர்,  ஏனெனில் குளியல் முன்கூட்டிய பிரசவத்தைக் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மை இல்லை. ஒரு வழக்கமான குளியல் உங்களை புத்துணர்ச்சியாக மற்றும் கிருமி அடையாமலும் வைத்திருக்கிறது. கருப்பை வெப்பநிலையை பராமரிக்க மிகவும் சூடான தண்ணீர் குளியல் தவிர்க்கப்பட வேண்டும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you