தாய்ப்பாலை தவிர மற்ற உணவுகளை பழக்கும் தொடக்க வழிகாட்டி

cover-image
தாய்ப்பாலை தவிர மற்ற உணவுகளை பழக்கும் தொடக்க வழிகாட்டி

உங்கள் குழந்தை கிட்டத்தட்ட அரை வயது நிறம்பி இருந்தால், இது நீங்கள் தாய்ப்பாலை மறக்கடிப்பதற்கு தயாராவதற்கான நேரம்! இந்த ஆரம்பகால சுவைகளில் சில அவருடன் வாழ்நால் முழுக்க தங்கியிருக்கும் என்பதால் இது முக்கியம்.

 

உங்கள் குழந்தையின் சுவை உணர்வு கர்ப்பப்பையில் அம்னியோடிக் திரவத்தின் வழியாக தொடங்குகிறது மற்றும் வெளியே உங்கள் தாய்ப்பால் மூலம் தொடர்கிறது. நீங்கள் கர்ப்பமாக மற்றும் தாய்ப்பால் ஊட்டும்போது என்ன சாப்பிட்டீர்கள் என்பதன் மூலம் உங்கள் குழந்தை சற்று வித்தியாசமான உணவுகளை அறிந்துள்ளது. பெரும்பாலான குழந்தைகளுக்கு 4 முதல் 7 மாதங்கள் இடையில் பல் தோன்ற ஆரம்பிக்கும் மற்றும் கிட்டத்தட்ட அதே நேரத்தில், அவர்கள் உட்காரத் தொடங்குவார்கள். உங்கள் உணவு நேரத்தில் குழந்தை உங்களைச் சுற்றி இருக்கட்டும், அவள் நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் போது அவள் வாயில் நீர் ஊறலாம், அது திட உணவை அறிமுகப்படுத்துவதற்கான நேரம் என்பதற்கான ஒரு அறிகுறியாகும். உங்கள் குழந்தை வெளியிடும் உமிழ்நீர் திட உணவுகளை ஜீரணிக்க தேவையான முக்கியமான செரிமான நொதிகள் கொண்டுள்ளது. நீங்கள் உங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்கச்செய்ய தொடங்குவதற்கு முன் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியது அவசியம். குழந்தையின் செரிமானப் படிவம் படிப்படியாக முதிர்ச்சியடைகிறது மற்றும் திடஉணவுகளை ஜீரணிக்க தயாராகிறது. எனவே 4 மாதங்களுக்கு முன்னர் நீங்கள் திடீரென திடஉணவுகளை அறிமுகப்படுத்தினால், அது ஒவ்வாமைக்கு வழிவகுக்கக்கூடும்.

 

பழங்கள் ஜீரணிக்க மிகவும் எளிதானது, எனவே பிசைந்த வாழைப்பழங்களைத் கொடுக்கத் தொடங்குவது நல்ல யோசனை. பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்கள் தாய்ப்பாலுக்கு மிகவும் உகந்தது.

 

வெளிப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை பிசைந்த வாழைப்பழங்களுடன் கலந்து கொடுப்பது  குழந்தைக்கு மிகுந்த திருப்திகரமான சிற்றுண்டியாக மாறும். உங்கள் குழந்தைக்கு சில உணவுகளில் ஒவ்வாமை இருக்கிறதா என்று கண்டுபிடிக்க இது சிறந்த நேரம், அதனால் ஒரு நேரத்தில் ஒரு உணவு அறிமுகப்படுத்துவது மற்றும் அடுத்த உணவுக்கு முன் 2 முதல் 3 நாட்கள் வரை காத்திருப்பது நல்லதாகும்.

 

பப்பாளி, சிக்கோஸ், ஆப்பிள், பேரிக்காய் போன்ற அனைத்து அடிப்படை பழங்களையும் ஒன்று ஒன்றாக முயற்சி செய்யுங்கள் பின்னர் நீங்கள் இரண்டு பழங்கள் கலந்து கொடுக்கத் தொடங்கலாம். மெதுவாக சுரைக்காய், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூசணி, பட்டாணி போன்ற அனைத்து காய்கறிகளையும் ஒரு நேரத்தில் ஒன்று என அறிமுகப்படுத்துங்கள். அவை வேகவைத்து மற்றும் பிசைந்து குழந்தைக்கு வழங்கப்படலாம்.

 

வேகவைத்தல் ஊட்டச்சத்தை பாதுகாக்க உதவும் அதேநேரம் காய்கறிகளை குக்கரில் கொதிக்க வைப்பது மிகுதியான ஊட்டச்சத்தை அழித்துவிடும். வேகவைப்பதற்கும் மசிப்பதற்கும் சந்தையில் பல்வேறு சாதனங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் முயற்சி செய்யலாம். உள்ளூர், பருவகால மற்றும் கரிம பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேந்தெடுக்கவும். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளால் படிப்படியாக விரல் உணவுகள் போல், கடிக்கும் அளவிலான துண்டுகளாக நறுக்கப்பட்டு வழங்கப்படலாம். இது அவர்களுக்கு பைன்சர் பிடியை உருவாக்க உதவுகிறது.

 

பழங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, பருப்புகள் மற்றும் பழுப்பு அரிசி, கம்பு, கோதுமை போன்ற தானியங்கள் 6 முதல் 8 மாதங்கள் இடையில் அறிமுகப்படுத்தப்படலாம். அவை காய்கறிகளுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படலாம் ஆனால் உங்கள் குழந்தை காய்கறிகளை நன்கு சாப்பிடுவதற்கு பிறகு செய்வது சிறந்தது.

 

பல்வேறு உணவுகளை வெவ்வேறு இழைமங்களில், புதிய மூலிகைகள் கொண்டு பதப்படுத்தப்படுத்தி அறிமுகப்படுத்துவது குழந்தைக்கு உணவில் உள்ள ஆர்வத்தை தக்கவைக்கும் மற்றும் அவரது சுவை மொட்டுகளை ஆராயச் செய்யும் மேலும் அவரது தட்டில் சுவை அதிகரிக்கும். தினமும் ஒரே உணவை சாப்பிட விரும்புவீர்களா? இல்லை, பின் ஏன் குழந்தைக்கு அதே பழைய கிச்சடியைக் கொடுத்து சலிப்படையச் செய்ய வேண்டும்?

 

அவர் திட உணவை உட்கொள்ள துவங்கியதும்,  உங்கள் உணவில் குழந்தையை சேர்க்கவும். நீங்கள் உண்ணும் போது, குழந்தையை உங்கள் மடியில்  அல்லது உங்களுக்கு அருகில் உட்கார வைக்கலாம். அவர் / அவள் உங்கள் தட்டில் இருந்து அவர் விரும்பும் உணவை எடுத்து தனது வாயில் வைக்க அனுமதியுங்கள். இது குளறுபடியாகக் கூடும் ஆனால் உங்கள் குழந்தையை குடும்ப உணவுக்கு அறிமுகப்படுத்துகிறது மற்றும் குழந்தை உணவிலிருந்து பெரியவர் உணவிற்கு  உங்களுக்காக அவள் / அவரை மென்மையாக மாற்றிவிடும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!