மேம்பாட்டு மைல்கற்கள்: 13-18 மாதங்கள

மேம்பாட்டு மைல்கற்கள்: 13-18 மாதங்கள

15 Mar 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

மேம்பாட்டு மைல்கற்கள்13-18 மாதங்கள்

 

13 −18 மாதங்களில் குழந்தையின் வளர்ச்சிக் புரிந்துகொள்ளவேண்டி விஷயங்கள்

 

இந்த நேரத்தில், உங்கள் குழந்தை தனது முதல் பிறந்தநாளை கொண்டாடி முடிக்கிறது மற்றும் இப்போது ஒரு குறுநடை போடும் குழந்தையாக கருதப்படுகிறது. இந்த கட்டத்தில், குழந்தைகள் தங்கள் சூழலை நன்கு புரிந்துகொண்டு வழக்கத்திற்கு பழகிக் கொள்கிறார்கள். வளர்ந்து வரும் வயதுடன், அவர்கள் நம்பிக்கையை வளர்த்து தங்கள் திறன்களை அதிகரிக்கிறார்கள், அவர்கள் இப்போது சுதந்திரமாக விளையாட முடியும்.

 

இந்த கட்டத்தில் உருவாக்கப்பட்ட உடல் ரீதியான சாதனைகள் மற்றும் செயல்திறன்கள் யாவை?

 

இப்போது சிறு குழந்தைகள் வீட்டை சுற்றி நடக்க மற்றும் ஓடவும் தொடங்கியிருப்பதால், இது மிகத் தந்திரமான கட்டமாகும் மற்றும் அவர்கள் தங்களை காயப்படுத்திக் கொள்ளாதவாறு நீங்கள்  கவனமாக இருக்க வேண்டும். கூர்மையான விளிம்புகள் மற்றும் மேசை மூலைகள், நாற்காலிகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பது உங்கள் தினசரி வேலையில் ஒரு முக்கியமான பகுதியாகிறது. இந்த வயதில் உங்கள் பிள்ளை வளர்த்துக் கொள்ளும் மொத்த செயல்திறன்களின் பட்டியல் இங்கே.

 

 

 • தனியாக நிற்கவும், சொந்தமாக நிற்கும் நிலையை அடையவும் முடியும்

 

 • நடக்கும் போது பொம்மைகளை சேர்த்து இழுக்க முடியும்

 

 • சுதந்திரமாக ஓடத் தொடங்குகிறது

 

 • மாடிப்படியில் மெதுவாக ஊர்ந்து செல்ல முடியும்

 

 • தானாக உடையை கழற்ற முடியும் மற்றும் ஆடைகளை அணியவும் உதவ முடியும்

 

 • இந்த வயதில் உங்கள் குழந்தை வளர்த்துக் கொள்ளும் நல்ல செயல்திறன்களின் பட்டியல் இங்கே.

 

 • பைன்சர் பிடி முதிர்ச்சி அடைய தொடர்கிறது (ஆள் காட்டி விரல் மற்றும் கட்டைவிரலைப் பயன்படுத்தி சிறிய பொருள்களைப் பற்றி எடுக்கும் திறன்)

 

 • ஒரு ஸ்பூன் பயன்படுத்தி சுயமாக உண்ண முடியும்

 

 • உதவியுடன் ஒரு குவளையில் இருந்து பருக முடியும்

 

 • ஒரு புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புவார்

 

 • கைகளை தட்டுவார்

 

என் குழந்தையின் உடல்ரீதியான மற்றும் செயல்  திறங்களை மேம்படுத்துவது எப்படி?

 

உங்கள் குழந்தையின் மொத்த செயல்திறனை அதிகரிக்க, மொத்த செயல் நடவடிக்கைகளின் பட்டியல் இங்கே:

 

 • உங்கள் பிள்ளைக்கு பக்கங்களில் துளைகள் கொண்ட ஒரு பெரிய பெட்டியை வழங்கவும். பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் அவர் சென்று விளையாடி மகிழ்வர்

 

 • உங்கள் குழந்தையுடன் பந்துகளை பயன்படுத்தி விளையாடவும், அவருக்கு ஒரு பந்தை எப்படி  எறிவது அல்லது எப்படி உதைப்பது என்று காட்டவும், அவர் நிச்சயம் உங்களைப் பின்பற்றுவர்

 

 • உங்கள் சிறு குழந்தைக்கு இழுத்துச் செல்லக் கூடிய பொம்மைகளை வழங்குங்கள்

 

 • அவர்களுடன் நடனமாடுங்கள்

 

உங்கள் சிறு குழந்தைகளில் நல்ல செயல்திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும் நல்ல செயல் நடவடிக்கைகளின் பட்டியல் இங்கே:

 

 

 • உங்கள் குழந்தைக்கு நல்ல கையாளுதல் திறன்களை வளர்ப்பதற்காக ஜிக்சா புதிர்களை வழங்குங்கள்

 

 • உங்கள் குழந்தைக்கு எழுத மற்றும் வரைய காகிதம் மற்றும் கிரயான்ஸ் கொடுங்கள், கிரயான்ஸை எப்படி பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு காட்டுங்கள்

 

 • கைதட்டல் மற்றும் கை விளையாட்டுகளை விளையாடவும்

 

 • உங்கள் குழந்தையுடன் சில நேரம் செலவழிக்கவும் மற்றும் கட்டிடம் கட்டும் விளையாட்டுகளை விளையாடவும்

 

 • பெட்டியை எடுத்து அதில் சில பொருள்களை வைக்கவும். அவர் எல்லா பொருட்களையும் வெளியே கொட்டிவிட்டு அவற்றை நிரப்ப விரும்புவார்

 

இந்த கட்டத்தில் நடக்கும் அறிவாற்றல் மற்றும் மொழி வளர்ச்சிகள் எது?

 

இந்த கட்டத்தின் போது அறிவாற்றல் வளர்ச்சி பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

 

 • பல் துலக்குதல், மொபைல் போன், ஸ்பூன் போன்ற சாதாரண விஷயங்களை அறிந்துகொள்ளவும்.

 

 • பொம்மைகளில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பொம்மைகளின் துணிகளை மாற்றுவதை போன்ற நிஜ வாழ்க்கையுடன் அவற்றை தொடர்புப்படுத்தவும்

 

 • உடல் உறுப்புகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் அடையாளம் காணலாம்

 

 • சுதந்திரமாக கிறுக்குவார்கள்

 

 • “நில்” போன்ற எளிமையான வாய்மொழி கட்டளைகளைப் பின்பற்றுவார்கள்

 

இந்த கட்டத்தின்போது மொழியியல் வளர்ச்சியும் அடங்கும்:

 

 • அவர் இப்போது பல ஒற்றை வார்த்தைகளை சொல்வதற்கு முயற்சிபார்கள்

 

 • சில வார்த்தைகளை பின்பற்ற முயற்சி செய்வார்கள்

 

 • ‘இல்லை’ என்றோ அல்லது தலையை ஆட்டுவர்

 

 • ‘ஹாய்’ அல்லது கையை அசைவுகளை செய்வர்

 

 • ஒரு வார்த்தை சுட்டிக்காட்டுவது அல்லது பயன்படுத்துவதன் மூலம் ஏதாவது கேட்பர்

 

 • விலங்கு ஒலியை உருவாக்குவர்

 

எனது குழந்தை தனது அறிவாற்றல் மற்றும் மொழி திறன்களை மேம்படுத்துவதற்கு நான் என்ன செய்ய முடியும்?

 

 

அறிவாற்றல் மற்றும் மொழி திறன்களை விரிவுபடுத்துதல் ஒருவருக்கொருவர் மாறுகிறது, இவ்வாறு இது போன்ற நடவடிக்கைகள் அவர்களின் மொழி மற்றும் புலனுணர்வு திறன்களை கூர்மைப்படுத்துகின்றன:

 

 • உங்கள் குழந்தையுடன் பேசவும், மேலும் அவள் / அவருடன் நர்ஸரி ரைம்ஸை பயிற்சியை செய்யவும்

 

 • ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு உங்கள் குழந்தையுடன் ஒரு புத்தகத்தைப் படியுங்கள்

 

 • இசைக்குச் செவிசாயுங்கள், மேலும் குழந்தையுடன் நடனமாட முயற்சிக்கவும்

 

 • வடிவங்கள் மற்றும் எண்களைப் பற்றி கற்பிக்கவும்

 

 • உங்கள் குழந்தைக்கு அவனது/அவளது உடல் பாகங்களைப் பற்றி கற்றுக்கொடுங்கள்

 

 • எளிய வழிமுறைகளை அவர்களுக்கு வழங்கவும் மேலும் எப்படி அவற்றை பின்பற்றுவது என்பதை அவர்களுக்கு காட்டவும், எ.கா. அவர்களை அமர சொல்லவும் மற்றும் அதை எப்படி செய்வது என்று காட்டவும், இறுதியில் அவர்கள் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதற்கு அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்

 

13 மாத குழந்தைகளில் என்ன சமூக முன்னேற்றங்கள் நடக்கிறது?

 

உங்கள் குழந்தை 13 மாதங்கள் அல்லது அதற்கு மேல் இருந்தால், இவை தான  நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சமூக முன்னேற்றங்கள் :

 

 • அவரது பொம்மைகளை காட்டுகிறது அல்லது வழங்குகிறது

 

 • முரட்டுத்தனமான கோபத்தை காட்டுகின்றனர்

 

 • பெரியவர்களுடன் விளையாடுவதைக் விரும்புவார், அவர்களின் கவனிப்புக்காக அழுவர்

 

 • அம்மா அல்லது கவனிப்பு கொடுப்பாளருடன்,பற்றுகொள்ளுதல்

 

 • அந்நியரிடம் பயம், யாரிடமும் செல்லமாட்டார்கள்.

 

 • தரை அல்லது மேஜைகளை துடைப்பது போன்ற முன்மாதிரி நடவடிக்கைகள்

 

 • அவர் விரும்பும் விஷயங்களில் அல்லது அவரது தெரிந்த ஆசைகளை செய்வதற்கான குறிப்புகள்

 

எனது குழந்தையின் சமூக மற்றும் உணர்ச்சி நடவடிக்கைகளை  நான் எவ்வாறு உயர்த்துவது?

 

குழந்தைகள்  இந்த வயதில் மற்ற குழந்தைகளுடன் அல்லது அந்நியர்களுடன் விளையாடுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் சமூக வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதற்கான சில நடவடிக்கைகளின் பட்டியல் இங்கே:

 

 • உங்கள் குழந்தையுடன் நெருக்கமாக படுக்கவும், அவரை அணைத்துக்கொண்டு மற்றும் முத்தங்கள் கொடுங்கள்

 

 • விளையாட்டு மற்றும் விளையாடுவதற்கான நேரத்தை உருவாக்குங்கள்

 

 • அவருடன் மற்றும் அவரது வயதில் மற்ற குழந்தையினருடன் ஒரே நேரத்தில் விளையாடவும், மற்றும் மற்ற தளர்ந்து நடப்பவர்களுடன் தனது பொம்மைகளை வழங்க அல்லது பகிர்ந்து கொள்ள அவருக்கு கற்பிக்கவும்.

 

 • உங்கள் தொலைதூர உறவினர்களிடம் அவரை அறிமுகப்படுத்தி அவர்களுடன் விளையாடும் போது அவரை பாதுகாப்பாக உணர செய்யவும்.

 

 • அவனது பொம்மை பெட்டியில் பொம்மைகளை ஒழுங்குபடுத்துவது போன்ற நேர்மைறையான வலுவூட்டலை கொடுங்கள் அல்லது அவனது சிறிய சாதனைகளை கொண்டாடுங்கள்

 

மறுப்பு: கட்டுரையின் தகவலானது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சையளிப்பதற்காக ஒரு மாற்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை அல்லது உட்படுத்தவில்லை. எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைத் தேடுங்கள்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you