உங்கள் குழந்தை தாய் மொழியில் கற்பிக்க வேண்டுமா?

cover-image
உங்கள் குழந்தை தாய் மொழியில் கற்பிக்க வேண்டுமா?

உங்கள் பிள்ளை தன் தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டுமா?

 

நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்கள் வீட்டில் நீங்கள் எந்த மொழியில் பேசினீர்கள்? நீங்கள் ஒரு ஆங்கில மொழி பள்ளியில் படித்திருக்கலாம் என்றாலும், அது உங்கள் தாய் மொழியாக இருக்கும் என்பதை நான் பந்தயம் செய்கிறேன்.

 

நான் அகமதாபாத்தில் ஆங்கிலம் நடுத்தரப் பள்ளியில் படித்தேன், ஆனால் பள்ளி தவிர, வீட்டில் அல்லது நண்பர்களுடன் நாங்கள் அரிதாகத்தான் ஆங்கிலத்தில் உரையாடினோம். ஹிந்தி என் தாய்மொழி, நான் பெரும்பாலும் ஹிந்தியில் தான் பேசினேன். என் குஜராத்தி நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரோடு, நான் குஜராத்தில் பேசினேன், அந்த மொழியை கற்றுக்கொண்டவுடன், அது எனக்கு நினைவில் உள்ளது நான் மிகவும் சீக்கிரத்தில் கற்றுக்கொண்டேன்.

 

ஒரு குழந்தையாக ஹிந்தி மொழியில் பேசுவதால் என் மொழி கற்றல் திறன் பாதிக்கப்படவில்லை. ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் பிரஞ்சு மொழிகளில் நான் படிக்கவும், எழுதவும், பேசவும் முடிந்தது. மேலும், மார்வாரி மற்றும் மராத்தி மொழிகலையும் நான் புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும், நான் ஆங்கிலத்தில் மிகவும் வசதியாக பேசினாலும், சில சமயங்களில் நான் பேசுவது கட்டப்படுகிறது அல்லது உரையாடும் போது தயக்கமாக உணர்கிறேன். அது என் முதல் மொழியாக இல்லை என்ற உண்மை கூட ஒருவேளை காரணமாக இருக்கலாம்.

 

என் குழந்தை என் கர்ப்பத்தில் இருந்த சமயத்திலே அவளுடன் ஆங்கிலத்தில் பேச எனக்கு உந்துதலாக இருந்ததில் இது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அவள் ஆங்கிலத்தில் சரளமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அதுவே பள்ளியில் பயிற்று விக்கும் மொழியாக இருப்பதால் அதை பேசுவதில் தயங்காது இருக்க வேண்டும். அவள் ஆங்கிலத்தில் சரளமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன் பின்னர் அவள் ஹிந்தியில் சரளமாக இருக்கலாம் என்று (ஹிந்தி வீட்டில் பேசப்படும் மொழியாக இருப்பதால், இயல்பாகவே அவளுக்கு வரும் என்று நினைத்தேன்).

 

எனவே, என் 6 வயது மகள் ஆங்கிலத்தில் பேசுவது மட்டும் இன்றி, மேலும் சிந்திப்பதும், செயல்படுவதும் ஆங்கிலத்தில் தான். சில நேரங்களில் அவள் தூக்கத்தில் முணுமுணுபாள், அதுவும் ஆங்கிலத்தில். ஆங்கிலம் அவளது முதல் மொழி மற்றும் அவளது தாய்மொழி ஆகும். தாய்மொழி ஒரு மிக குழப்பமான சொல்லாக இருக்கலாம். ஒரு தாய்மொழியானது ஒரு குழந்தை தனது தாயின் மடியில் கற்றுக்கொள்ளும் ஒரு மொழியாகும், அந்த மொழி அவளது தாய் அல்லது குடும்பத்தினர் பேசும் முதன்மை மொழியாக இல்லாவிட்டாலும் கூட. அதே சமயத்தில், வீடு, சமூகம், மழலையர் பள்ளி அல்லது பள்ளியில் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு முதலில் வெளிப்படும் மொழியே முதல் அல்லது முதன்மை மொழியாக இருக்கும். அவை சிலநேரங்களில் வேறுபட்டிருக்கலாம், குறிப்பாக இந்தியா போன்ற பன்மொழி நாடுகளில்.

 

அவளுடைய வயதுக்கு, மிக நீண்ட காலமாக, ஆங்கிலத்தில் ஒரு சிறப்பான பயிற்சி பெற்றபோதும், அவளுடைய ஹிந்தி நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவள் ஹிந்தியில் பேச அதிக முயற்சி தேவை என்று அதில் பேச தயக்கம் காட்டினால், அவள் அவளது வசதியான கட்டத்துக்குள் இருந்து வெளி வரத் தயாராக இல்லை. ஹிந்தியில் பேசிய அனைவரிடமும் அவள் பேச மறுத்துவிட்டால். அவள், அவளது தாத்தா பாட்டி அல்லது நண்பர்களிடம் கூட பேசவில்லை ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால். இது எனக்கு கவலையாக இருந்தது. நான் அவள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று விரும்பினேன், ஆனால், குடும்பம் மற்றும் தேசிய மொழியாகிய ஹிந்தியை மறந்து அல்ல. என்னுடைய சொந்தக் கைகளில் விஷயங்களை எடுத்துக் கொள்ளும் நேரம் இது என்று முடிவு எடுத்தேன். அப்போழுது தான் நான் அவளுக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்தேன். இப்போது, இரண்டு வருடங்கள் கழித்து, அவளால் ஹிந்தியில் படிக்கவும், எழுதவும், பேசவும் முடியும். அது இன்னும் அவள் ஆங்கிலம் அளவிற்கு நன்றாக வராவிட்டாலும், ஆனால் அவள் விரைவில் அதை கற்றுக் கொள்வாள். குஜராத்தி, பஞ்சாபி மற்றும் மராத்தி போன்ற பிற மொழிகலும் அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவள் மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்வதைப் பற்றி எனக்கு கவலை இல்லை, இந்தியாவில் வசிக்கின்ற ஒரு குழந்தை பல மொழிகளின் அணுகல் காரணமாக இருமொழி அல்லது பன்மொழியில் பேசுவது மிகவும் எளிதானது.

 

ஒரு மாதத்திற்கு முன்னால், சிறிய குழந்தைகள் தங்கள் தாய் மொழி / குடும்ப மொழியில் பேசுவதற்கு ஊக்கப்படுத்தப் பட வேண்டும் என்ற ஒரு கட்டுரையை நான் பார்த்தேன். ஆர்வமாகி, நான் ஆழமாகச் சென்று, தாய் மொழியில் முதன்முதலில் கற்றல் உங்கள் பிள்ளையின் வெற்றியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை தெளிவாக கூறுகின்ற பல கட்டுரைகளைச் பார்த்தேன். பல நன்மைகளை மேற்கோள் காட்டியது. அதில் நான் மிகவும் தகுதியானதாக உணர்ந்த, சிலவற்றை முன்வைக்கிறேன்:

 

  • ஒரு நபர் அவனது/ அவளது தாய் மொழியில் விஷயங்களை புரிந்து கொள்ள சிறந்த திறன் கொண்டிருப்பார்கள்.

 

  • அவள்/ அவன் தொடர்புடைய மொழிகளை வேகமாக அறிந்து கொள்ள முடியும். கொங்கனி தெரிந்த ஒரு நபர், மராத்தி, மலையாளம் மொழிகளை தேர்ந்தெடுக்க முடியும். அதேபோல், இந்தி பேசும் மக்கள் குஜராத்தி, மார்வாரி மொழிகளை எழிதாக கற்றுக்கொள்ளவார்கள்.

 

  • அவனின்/ அவளின் நல்ல கருத்துக்களையும், உணர்வுகளையும் அவனது / அவளது தாய் மொழியில்   வெளிப்படுத்த முடியும்.

 

  • இது அவளது / அவனது சமுதாயத்தால் (நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்) எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழி என்பதால், அவளால்/அவனால், அவளது / அவனது சமூக திறன்களை அபிவிருத்தி செய்யவும், அவளது / அவனது சொந்த சமூக சமுதாயத்தை உருவாக்கவும்  முடியும்.

 

  • புதிய மற்றும் சொந்த கருத்துக்கள் பிறப்பதும், வடிவமைக்கப்படுவதும் ஒருவரின் சொந்த தாய் மொழியில் மட்டுமே, மிகப்பெரிய எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழியில் பெரும் இலக்கியங்களை உருவாக்க முடிந்திருக்கிறது என்று சில கட்டுரைகள் கூறுகின்றது.

 

  • நீங்கள் உங்கள் தாய்மொழியில் இலக்கண மற்றும் தொடரியல் பற்றி ஒரு நல்ல புரிதலைப் பெற்றிருப்பதால், வெளிநாட்டு மொழியைக் கற்கும் அதே வேளையில் அந்த அறிவைப் பயன்படுத்தி மேலும் அதை வேகமாக புரிந்துக் கொள்ளலாம்.

 

அந்த கட்டுரைகளை படித்து நான் உணர்ந்தது, என் மகளை நான் முதலில் ஹிந்திக்கு அறிமுகப்படுத்தியிருந்தால் வாழ்க்கை கடுமையாக இருக்காது. நான் செய்ததைப் போல அவளும் அதை சமாளித்திருப்பாள். நாம் முதலில் நமது தாய் மொழிகளையே கற்றுக்கொண்டோம், அது எந்த விதத்திலும் எங்கள் வளர்ச்சியைத் தடுக்கவில்லை அல்லது எங்களுக்கு எந்தவித வெற்றிக் குறைவும் தரவில்லை. ஆங்கிலம் ஒரு தாய் மொழியாக இல்லாத பல முக்கிய இந்திய எழுத்தாளர்கள், இன்னும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்.

 

இது குறிப்பாக பெற்றோருக்கு நன்மை பயக்கும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான மொழியாக நினைப்பதால் முற்றிலும் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

 

  • முதல் நாளிலிருந்து ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதற்கு கட்டாயப்படுத்த தேவை இல்லை என்பது இதன் பொருள் ஆகும்.

 

  • அதாவது, எமது குழந்தை அண்டை விட்டு குழந்தை போன்ற குறைபாடற்ற ஆங்கில மொழியை எப்படிப் பேச முடியும் என்பதை பற்றி நாம் தூக்கமில்லாமல் இரவுகள் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

 

  • இது ஒரு 'பெரியதை விட குறைவான' சொல்லகராதி மற்றும் வரையறுக்கப்பட்ட தொடர்பு திறன்கள் கொண்டிருந்தாலும் நமது குழந்தைகள் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பது இதன் அர்த்தம்.

 

மறுபுறம், என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு ஏற்கனவே தாய்மொழிக்கு பதிலாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியவர்கள், இதயத்தை இழக்காதீர்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன், முதலில் தாய் மொழியைக் கற்றுக்கொள்ளாத மக்கள் அவர்களது  எதிர்கால வாழ்வில் நன்றாக இருப்பதில்லை. அது உறுதியளிக்கிறது, இல்லையா?

இருப்பினும், புதிதாக பெற்றோர் ஆனவர்கள், அவன் /  அவளுக்கு முதல் மொழியாக இருக்க வேண்டும் என்று, தங்கள் குழந்தைக்கு அறிமுகப் படுத்த நினைக்கும் மொழியில் அவர்கள் ஒரு பூஜ்ஜியம் ஆவதற்கு முன்பு தங்கள் ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!