18 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
குழந்தையை வளர்ப்பதில் ஒரு தாயின் மிகப்பெரிய பணி என்ன என்பதை கேளுங்கள் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பதில் எப்போதும் – குழந்தையை நன்றாக சாப்பிட வைப்பது என்பதாகும். குழந்தைகள் சாப்பிடாமல் இருப்பது அல்லது போதியளவு சாப்பிடாதது, அல்லது தவறான உணவுகளை உட்கொள்வது அல்லது ஒரு உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்வது பற்றி அம்மாக்கள் எப்பொழுதும் கவலை அடைகின்றனர், இந்த கதைகள் முடிவில்லாதவை. அனுபவத்திலிருந்தும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான அம்மாக்களை பார்த்தும், நாங்கள் குழந்தையின் ஆரம்பத்திலிருந்து, குழந்தை பருவத்தில் சரியான உணவு சாப்பிடுவது, குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதில் பின்வரும் உத்திகளைக் குறிப்பிட்டுள்ளோம். இந்த நல்ல உணவு பழக்கம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
எனவே உங்களை அமைதிப்படுத்தி, குறைந்தபட்சம் ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்கு இதை கண்டிப்பாக பின்பற்றவும் மற்றும் உங்கள் குழந்தையின் உணவு பழக்கத்தில் வியத்தகு மாற்றத்தை பார்க்கவும்.
சில சமயங்களில் குழந்தையை இரண்டு முறை சாப்பிடும்படி கேளுங்கள். அவன் / அவள் தொடர்ந்து மறுத்தால், அவன் / அவளை சாப்பிட வர்புறுத்தாதீர்கள் அல்லது வலிக்கட்டாயமாக ஊட்டாதீர்கள். அவன் / அவளை விட்டு விடுங்கள். இறுதியில், குழந்தை 1-2 மணி நேரத்திற்கு பிறகு பசி உணர்கிறது மற்றும் உணவு வேண்டும் போது, நீங்கள் முன்பு வழங்கிய அதே உணவை வழங்கவும். இவ்வழியில், குழந்தை வீட்டு உணவிலிருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு பழகிவிடும். இந்த கட்டத்தில் சாப்பாட்டுக்கு பதிலாக சிப்ஸ் / பிஸ்கட் / குக்கீகள் / ரொட்டி / உடனடி நூடுல்ஸ் முதலியவற்றால் மாற்றியமைக்க வேண்டாம். இது மிகவும் முக்கியமானது. குழந்தை ஒரு ஜோடி உணவுக்கு கோபம் காட்டலாம், ஆனால் ஒரு வாரத்திற்குள், நிம்மதி உறுதி. குடும்பத்தாரோடு, வீட்டில் தயாரிக்கப்பட்ட, எல்லா உணவையும் அவர் சாப்பிட கற்றுக் கொள்வார்.
. நீங்கள் குழந்தைகளுடன் கண்டிப்பாக இருக்கும்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக தாத்தா பாட்டியை, ஒத்துழைக்கும்படி கேளுங்கள். குழந்தைக்கு அவர்களுடைய அன்பு அவளது / அவரது உணவு பழக்கங்களைக் கெடுக்கும் வகையில் தவறாக வழிநடத்தப்படக்கூடாது.
இதை முயற்சி செய்து என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள்!
A