19 Mar 2019 | 1 min Read
Dr Trupti Kaji
Author | 7 Articles
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது என்பது படிப்படியானது மற்றும் எதிர்பார்க்கப்படும் செயல்முறையாகும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியுடன், உங்கள் உடல் வளர்ச்சி பெற்று மற்றும் மாறியும் வருகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களில் எவ்வளவு எடை அதிகரிப்பு தேவை என்பதை ஒரு எதிர்பார்ப்பாளரான தாய் அறிய வேண்டியது அவசியம்.
கர்ப்ப கால எடை அதிகரிப்பு தாயின் ஆரோக்கியத்திலும், வளரும் குழந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் கர்ப்பத்தின் தொடக்கத்தில் உங்கள் உடல் நிறை குறியீட்டை (BMI) சரிபார்த்து, போதுமான அளவு எடையை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.
முன்கூட்டிய பிரசவத்தின் BMI ( | ஒட்டுமொத்த கர்ப்ப கால எடை அதிகரிப்பு வரம்பு |
குறைந்த எடை | 12.5 – 18 கிலோ |
சராசரியான எடை (18.5 – 24.9 கிலோ / மீ 2) | 11.5 – 16 கிலோ |
அதிக எடை (25.0 – 29.9 கிலோ / மீ 2) | 7 கிலோ – 11.5 கிலோ |
பருமனான (> 30.0 கிலோ / மீ 2) | 5 கிலோ – 9 கிலோ |
கர்ப்ப காலத்தில், BMI அடிப்படையில் சராசரியான எடை அதிகரிப்பின் அளவு 12 கிலோ (8-16 கிலோ) இருக்கும். இது குழந்தையின் எடையை மட்டும் கணக்கில் கொண்டு அல்ல, ஆனால் அம்மோனோடிக் திரவம், நஞ்சுக்கொடி, அதிக கொழுப்பு சேகரிப்புகள், இரத்தம், முதலியனவும் சேர்த்து. சராசரியான கர்ப்ப கால எடை எப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை இங்கே காணலாம்:
எந்த மக்களுக்கும் ஒரே மாதிரியான உடல் மற்றும் அதே எடை இருப்பது இல்லை அது போலவே,
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு என்பது தனிப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுடன் வேறுபடுகிறது. கர்ப்ப காலத்தில் முதல் 20 வாரங்களில் சாதாரண எடை அதிகரிப்பு என்பது 2-3 கிலோ வரை அதிகரிக்கிறது, பின்னர் ஒவ்வொரு வாரமும் 0.5 கிலோ அதிகரிக்கிறது, குழந்தை பிறக்கும் வரை. கர்ப்ப காலத்தின் முழுமையான காலப்பகுதியில், சராசரியான எடை அதிகரிப்பு என்பது 12-16 கிலோ வரை எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது யதார்தத்தில் கர்ப்ப கால அறிகுறிகள், உடல் வகை, தனிப்பட்ட வாழ்க்கை முறை, கலாச்சார வேறுபாடுகள், முதலியனவற்றின் காரணமாக வேறுபடுகிறது.
கர்ப்ப கால எடை அதிகரிப்பு விளக்கப்படம்
ட்ரீம்ஸ்ட்டர்ஸ் |
வாரங்கள் |
எடை அதிகரிப்பு (கிலோ) |
முதல் மூன்று மாதங்கள் |
0-10 வாரங்கள் |
எடை அதிகரிப்பு இல்லை |
10-14 வாரங்கள் |
1.5 கிலோ | |
இரண்டாவது மூன்று மாதங்கள் |
14-20 வாரங்கள் |
2.5 கிலோ |
20-30 வாரங்கள் |
4.5 கிலோ | |
மூன்றாவது மூன்று மாதங்கள் |
30-36 வாரங்கள் |
2.7 கிலோ |
36-38 வாரங்கள் |
1.0 கிலோ | |
38-40 வாரங்கள் |
கிட்டத்தட்ட எந்த எடை அதிகரிப்பும் இல்லை | |
மொத்தம் |
12-14 கிலோ |
கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிப்பு விளக்கப்படம்
எதிர்பார்ப்புக்குரிய தாயைப் போல, வளரும் குழந்தைக்கும் வெவ்வேறு விகிதத்தில் எடை அதிகரிக்கிறது. எனினும், ஒரு குழந்தையின் கரு வாழ்நாளில் சராசரியான உடல் எடை அதிகரிப்பு பின்வருமாறு உள்ளது:
பிரசவ வாரம் |
தலை முதல் பிட்டப்பகுதி வரையிலான சராசரி நீளம் (செ.மீ) |
சராசரி எடை (கிராம்) |
8 வாரங்கள் |
1.6 செ.மீ |
1 கிராம் |
9 வாரங்கள் |
2.3 செ.மீ |
2 கிராம் |
10 வாரங்கள் |
3.1 செ.மீ |
4 கிராம் |
11 வாரங்கள் |
4.1 செ.மீ |
7 கிராம் |
12 வாரங்கள் |
5.4 செ.மீ |
14 கிராம் |
13 வாரங்கள் |
7.4 செ.மீ |
23 கிராம் |
14 வாரங்கள் |
8.7 செ.மீ |
43 கிராம் |
15 வாரங்கள் |
10.1 செ.மீ |
70 கிராம் |
16 வாரங்கள் |
11.6 செ.மீ |
100 கிராம் |
17 வாரங்கள் |
13 செ.மீ |
140 கிராம் |
18 வாரங்கள் |
14.2 செ.மீ |
190 கிராம் |
19 வாரங்கள் |
15.3 செ.மீ |
240 கிராம் |
தலை முதல் கால் வரை | ||
20 வாரங்கள் |
25.6 செ.மீ |
300 கிராம் |
21 வாரங்கள் |
26.7 செ.மீ |
360 கிராம் |
22 வாரங்கள் |
27.8 செ.மீ |
430 கிராம் |
23 வாரங்கள் |
28.9 செ.மீ |
501 கிராம் |
24 வாரங்கள் |
30 செ.மீ |
600 கிராம் |
25 வாரங்கள் |
34.6 செ.மீ |
660 கிராம் |
26 வாரங்கள் |
35.6 செ.மீ |
760 கிராம் |
27 வாரங்கள் |
36.6 செ.மீ |
875 கிராம் |
28 வாரங்கள் |
37.6 செ.மீ |
1 கிராம் |
29 வாரங்கள் |
38.6 செ.மீ |
1.2 கிராம் |
30 வாரங்கள் |
39.9 செ.மீ |
1.3 கிராம் |
31 வாரங்கள் |
41.1 செ.மீ |
1.5 கிராம் |
32 வாரங்கள் |
42.4 செ.மீ |
1.7 கிராம் |
33 வாரங்கள் |
43.7 செ.மீ |
1.9 கிராம் |
34 வாரங்கள் |
45 செ.மீ |
2.1 கிராம் |
35 வாரங்கள் |
46.2 செ.மீ |
2.4 கிராம் |
36 வாரங்கள் |
47.4 செ.மீ |
2.6 கிராம் |
37 வாரங்கள் |
48.6 செ.மீ |
2.9 கிராம் |
38 வாரங்கள் |
49.8 செ.மீ |
3.1 கிராம் |
39 வாரங்கள் |
50.7 செ.மீ |
3.3 கிராம் |
40 வாரங்கள் |
51.2 செ.மீ |
3.5 கிராம் |
கர்ப்ப காலத்தில் ஒரு ஆரோக்கியமான உடல் எடையைப் பெறுதல்
ஒரு ஆரோக்கியமான கர்ப்ப எடை அதிகரிப்புக்கு, ஒரு சீரான உணவு உட்கொள்வது மற்றும் வழக்கமான லேசான உடற்பயிற்சி அவசியம். உலக சுகாதார அமைப்பின் (WHO) படி கர்ப்ப காலத்தின் ஆரோக்கியமான உணவுக்கு, தினமும் உட்கொள்ளும் சாதாரண கலோரிகளை விட 200-300 கலோரி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவில் போதுமான எரிசக்தி, புரதம், ஃபோலிக் அமிலம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை இருக்க வேண்டும். இவை பச்சை காய்கறிகள், பழங்கள், இறைச்சி மற்றும் மீன் போன்ற பல்வேறு உணவுகள் மூலம் பெறப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் குழந்தை உடல் எடையை அதிகரிக்க 7 ஆரோக்கியமான உணவுகள்
கர்ப்பத்திற்கு முன்னால் அதிக எடை கொண்ட பெண்களுக்கு அவர்கள் எடையின் அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும், உங்கள் உணவை கட்டுப்படுத்த நீங்கள் அழுத்தமாக வலியுறுத்தப் பட வேண்டும். முதல் மூன்று மாதங்களில் அதிக எடை கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவு என்பது, தாய் அல்லது குழந்தை இருவருக்கும் உதவாது. அதற்கு பதிலாக, யோகா அல்லது தியானம் போன்ற வழக்கமான உடற்பயிற்சியுடன் சிறந்த கர்ப்ப கால உணவை சேர்ப்பத்து, ஒரு ஆரோக்கியமான கர்ப்ப எடை அதிகரிப்பு மற்றும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற உதவுகிறது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் எடை குறைவாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் சாதாரண எடையைப் பெற முயற்சிக்கவும்.
கர்ப்ப காலத்தில் நீங்கள் பெறும் சில கூடுதல் எடைக் குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டாம்! இது எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமானது. எனினும், மிக அதிகமாக அல்லது மிக குறைவாக எடை போடுவது பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதன் காரணம் கண்டறிய மற்றும் அதை கையாள உங்கள் மருத்துவரை அணுகவும்.
A