• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பகாலத்தில் டெட்டன்னஸ் ஊசி தவிர்க்க இயலாதது
கர்ப்பகாலத்தில் டெட்டன்னஸ் ஊசி தவிர்க்க இயலாதது

கர்ப்பகாலத்தில் டெட்டன்னஸ் ஊசி தவிர்க்க இயலாதது

19 Mar 2019 | 1 min Read

sarika tendulkar

Author | 4 Articles

டெட்டனஸ் ஊசி கர்ப்ப காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

நீங்கள் எதிர்பார்க்கும் அம்மாவா? ஒரு ஏற்புவலி ஊக்கி(Tetanus Booster) உங்களுக்கு ஏன் நல்லது என்பதற்கான காரணம் இங்கே.

 

கர்ப்பம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மகிழ்ச்சியையும், சலுகைகளையும் தருகிறது, ஆனால் இது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரமும் கூட. உங்களிடையே நடக்கும் மாற்றங்களின் அளவைக் கொண்டு, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் சில சிக்கல்களுக்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன.

 

கர்ப்ப காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களில் ஒன்று ஏற்புவலி மூலம் ஏற்படும் தொற்று. ஒரு ஏற்புவலி தொற்று தாயிடமிருந்து அவளது பிறக்காத குழந்தைக்கு செல்லலாம் மற்றும் இருவருக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நேரத்திற்கு ஏற்ப ஏற்புவலிக்கு நீங்களே தடுப்பூசி பெற வேண்டியது அவசியம்.

 

ஏற்புவலி நோய் என்றால் என்ன மற்றும் அதன் அறிகுறிகள் யாவை?

 

ஏற்புவலி என்பது குளோஸ்டிரீடியம் டெட்டனி பாக்டீரியாவால் ஏற்படுகின்ற ஒரு நிலைமையாகும், மேலும் அது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இந்த பாக்டீரியா உடலில் உடலில் சிறிய கீறல் மூலம் நுழைகிறது. இது கடி, தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்களால் கூட நுழைய முடியும். பாக்டீரியா உடலில் உட்புகுந்தவுடன், அது டெடானஸ்பாஸ்மின் எனப்படும் ஒரு சாரத்தை உற்பத்தி செய்கிறது, இது இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படுகிறது. டெடனோஸ்பாஸ்மின் நரம்பு மண்டலத்தை தாக்குகிறது மற்றும் உடலின் தசைகளை மெதுவாக முடக்குகிறது, இது காலப்போக்கில் தீவிரமாக சிகிச்சை அளிக்காவிட்டால் மரணத்தை  ஏற்படுத்தலாம்.

 

அடைகாக்கும் காலத்திற்கு பிறகு அறிகுறிகள் தோன்றும், இது 3 முதல் 21 நாட்கள் வரை  மாறுபடும். ஒரு தீவிரமான ஏற்புவலி நோய்த்தொற்றின் சில முக்கிய அறிகுறிகள் கழுத்தில் விறைப்பு, இறுகிய தாடை, விழுங்குவதில் சிரமம், உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல் மற்றும் வியர்வை ஆகும்.

 

பிறந்த குழந்தைகளில், பிரசவத்தின் போது கிருமிநீக்கப்படாத கருவிகளின் பயன்படுத்தலில் இருந்து கூட ஏற்புவலி பாக்டீரியா உடலில் நுழைய முடியும். நீங்கள் நோய்த்தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்கள் குழந்தை பாதிக்கப்படலாம்.

 

கர்ப்பிணித் தாய்மார்க்கு தடுப்பூசிகள் மூலம் ஏற்புவலியை தடுக்க முடியும்.

 

கர்ப்ப காலத்தில் எப்போது ஏற்புவலி ஊசி போடப்படுகிறது?

 

பெரும்பாலான நாடுகளில் தாய்மார்களுக்கு உலகளாவிய தடுப்பூசி திட்டம் பின்பற்றப்படுகிறது. கருக்கலைப்புக்கு பிறகு சிக்கல்களை சந்திக்கும் பெண்கள், மற்றும் முந்தைய கருக்கலைப்பு நடைமுறைகளிலிருந்து பாக்டீரியாவை எடுத்துக் கொண்டவர்கள், ஏற்புவலி டோக்ஸாய்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

ஏற்புவலி ஊசியானது தொண்டைக்கரப்பான் மற்றும் கக்குவான் தடுப்பூசியுடன் இணைந்து கொடுக்கப்படுகிறது, அது  Tdap தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது அல்லது தொண்டைக்கரப்பானுடன் மட்டுமே கொடுக்கப்படுகிறது, அது TD தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது.

 

அனைத்து சுகாதார பராமரிப்பு வழங்குநர்களும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி கொடுக்கிறார்கள், அவர்கள் கடந்த காலத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டிருந்தாலும் கூட. குழந்தைக்கு ஆன்டிபாடி மாற்றத்திற்கான வாய்ப்பு இந்த காலத்தில் அதிகபட்சமாக இருப்பதால், டி.டி.ஏ.பி தடுப்பூசியை நிர்வகிக்க சிறந்த நேரம் கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில் ஆகும். இந்த காலப்பகுதியில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது, செயலற்ற எதிரணுவானது பரிமாற்றத்தை அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்ப காலத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள நீங்கள் தவறி விட்டால், நீங்கள் அதை பேற்றுக்குப்பின் கூட எடுத்துக்கொள்ளலாம்.

 

நீங்கள் ஏற்புவலிக்கு எதிராக இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய, நீங்கள் ஒரேசமயம் மூன்று டோஸ்கள் தடுப்பூசி பெற வேண்டும். நிலையான அட்டவணை என்பது 0, 4 வாரங்கள் மற்றும் 6 முதல் 12 மாதங்கள் ஆகும்.

 

தடுப்பூசி பற்றிய எந்த கவலையையும் உங்கள் மருத்துவரிடம் கூற தயங்காதீர்கள். ஆரோக்கியமாக மற்றும் எச்சரிக்கையாகவும் இருங்கள். காய்ச்சல் சிவந்து போதல், வீக்கம் போன்ற எந்த அறிகுறிகளும் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you