அனோமலி ஸ்கேன்: குழந்தை பிறக்கும் முன் குறைபாடுகளை கண்டறியும் ஒரு திறன்வாய்ந்த கருவி

cover-image
அனோமலி ஸ்கேன்: குழந்தை பிறக்கும் முன் குறைபாடுகளை கண்டறியும் ஒரு திறன்வாய்ந்த கருவி

Anomaly Scan பிறந்த குழந்தைக்கு குறைபாடுகள் கண்டறியும் ஒரு பயனுள்ள கருவி

 

அனோமலி ஸ்கேன் என்பது, கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் பிறவி குறைபாடுகளை கண்டறிகிறது.

 

அனோமலி ஸ்கேன்: இது என்ன?

 

ஃபீட்டல் அனோமலி ஸ்கேன் அல்லது நிலை 2 அனோமலி ஸ்கேன் என்றும் அழைக்கப்படும், அல்லது கருவில் இருக்கும் சிக்கலை இலக்காகக் கொண்டு படம் எடுக்கும் ஒரு அல்ட்ரா ஸவுண்ட் ஸ்கேன், அனோமலி ஸ்கேன் ஆகும். இது இரண்டாவது மூன்று மாதத்தில் எடுக்கப்படுகிறது. பொதுவாக இது கர்ப்பத்தின் 18 முதல் 23 வாரங்களுக்கிடையில் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மதிப்பீடு செய்ய எடுக்கப்படுகிறது. இரண்டாவது மூன்று மாதத்தை அடையும்போது குழந்தையின் உறுப்பு வளர்ச்சி முழுமை பெறுகிறது. இந்த காலகட்டத்தில், சிசுவின் அனைத்து உறுப்புகளும் தெளிவாக அனோமலி ஸ்கேனில் தெரிகிறது.

 

அனோமலி ஸ்கேன் எதற்கு செய்ய வேண்டும்?

 

பிறப்பு குறைபாடு ஏதும் உள்ளதா என்பதை அறிவதற்கும், தேவைப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் குழந்தை பிறக்கும் முன் அனோமலி ஸ்கேன் செய்வது அவசியம்,

பின்வரும் முக்கிய குறைபாடுகளை அனோமலி ஸ்கேன் கண்டறியும்:

 

 • ஸ்பைனா பிஃபிடா (திறந்த முதுகுத் தண்டு)

 

 • அனென்செஃபலி (குழந்தையின் தலையில் குறைபாடு), மண்டை ஓடு

 

 • அசாதாரணமான கைகள் மற்றும் கால்கள்

 

 • வயிறு, சிறுநீரகம், இதயம் (பிறப்பு இதய குறைபாடுகள்) போன்ற உறுப்புகளில் குறைபாடுகள்.

 

 • டயஃபிராம் குறைபாடுகள் (டயஃபிராமில் ஹர்னியா), மார்பு மற்றும் அடிவயிற்றை பிரிக்கும் ஒரு தசை

 

 • மூளையின் அதிகப்படியான திரவம் சேகரிக்கப்படுவது (ஹைட்ரோசெஃபலஸ்)

 

 • முகம் மற்றும் வாயில் குறைபாடு (பிளவுபட்ட உதடு)

 

 • ஆட்டிஸம், செரிப்ரல் பால்சி போன்ற குறிப்பிட்ட மரபனு முரண்பாடுகள் கர்ப்பத்தின்போது அனோமலி ஸ்கேனில் கண்டறியப்படவில்லை.

 

 • டவுன்ஸ் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் மற்றொரு குரோமோசோமால் / மரபணு பிறப்புப் பற்றாக்குறை என்பது பொதுவாக இதயத்திலும் அடிவயிற்றில் உள்ள குறைபாடுகளாலும் தொடர்புடையது. இருப்பினும், அம்னியோசெண்டசிஸ், கோரியானிக் வில்லஸ் ஸாம்ப்லிங் மற்றும் பிற நான் – இன்வேஸிவ் (உள்நுழைக்கப்படாத) ப்ரீனேட்டல் சோதனை போன்ற பிற சிறப்பு மரபணு பரிசோதனைகள் செய்யப்படுவதன் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.

 

மூல: cdc.gov

 

வளரும் குழந்தையின் உடல் குறைபாடுகளை அடையாளம் காணுவதைத் தவிர, அனோமலி ஸ்கேன் அறிக்கை பின்வருவனவற்றையும் குறிப்பிடுகிறது:

 

 1. நஞ்சுக்கொடி

 

 • நஞ்சுக்கொடியானது கருப்பையின் முன் சுவரில் (முன்பக்கமாக வைக்கப்படும்) அல்லது பின்புற சுவரில் (பின்னோக்கி வைக்கப்படும்), அல்லது கருப்பையின் மேற்புறத்தில் அமைந்திருக்கும்.

 

 • கருப்பையின் கழுத்தை சுற்றி, கீழிறங்கி இருக்கும். அப்படி இருந்தால், 20 வாரத்திற்கு பின் அல்லது வளரும் குழந்தையின் இயக்கங்களுக்கு ஏற்ப தன் நிலையை நஞ்சுக்கொடி மாற்றும்போது மூன்றாவது மூன்று மாதத்தில் அனோமலி ஸ்கேனை மீண்டும் செய்யுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

 

 1. குழந்தையின் பாலினம்

 

 • குழந்தையின் பாலினம் அனோமலி ஸ்கேன் மூலம் கண்டறியலாம். எனினும், இந்தியாவில் பாலினம் கண்டறிவதால் சட்டவிரோதமாக கருகலைப்பு நடைபெறுவதால், குழந்தையின் பாலினம் கண்டறிவது சட்டப்படி குற்றமாகும். பிறக்காத குழந்தையின் பாலினம் கண்டறிய இந்த ஸ்கேன் பயன்படுத்தப்படுவதில்லை.

 

 1. தொப்புள் கொடி

 

 • தொப்புள் கொடியில் முடிச்சுகள் மற்றும் இரத்த நாளங்களின் மொத்த எண்ணிக்கையை ஸ்கேன் கண்டறிகிறது.

 

 1. ஆம்னியோடிக் திரவம்

 

 • குழந்தையின் வளர்ச்சி மற்றும் பிரசவ தேதியை நிர்ணயிப்பதில் குழந்தை மிதக்கும் ஆம்னியோடிக் திரவத்தின் அளவு முக்கிய பங்கு வகிக்கின்றது.

 

 1. EDD (பிரசவம் எதிர்ப்பார்க்கப்படுகின்ற தேதி)

 

 • பல்வேறு உறுப்புகளின் வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து, குழந்தையின் வயதை ஸ்கேன் கணக்கிடுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, பிரசவம் எதிர்ப்பார்க்கப்படுகின்ற தேதியை அல்லது குழந்தை பிறக்கும் தேதியை வழங்க உதவுகிறது.

 

அனோமலி ஸ்கேன் வடிவம்(Format)

 

பொதுவாக, வளரும் குழந்தையில் சில காரணிகளை அளக்க முன்விவரிக்கப்பட்ட வழி முறைகளை கொண்டுள்ளது. அந்த வழிமுறைகளில் உள்ளது போல் வயதுக்கேற்ப குழந்தையின் அளவீடுகள் இருக்கவேண்டும். அந்த காரணிகளில் உள்ளடங்குபவை:

 

 • தலை சுற்றளவு (HC)
 • பை பரைட்டல் விட்டம் (BPD)
 • வயிற்று சுற்றளவு (AC)
 • தொடை எலும்பு நீளம் (FL)

 

அல்ட்ராசவுண்ட் சாஃப்ட் மார்க்கரஸ்

இரண்டாவது மூன்று மாத அனோமலி ஸ்கேனின்போது குறிப்பிட்ட வேறுபாடுகள் அல்லது சின்ன மாற்றங்கள் இருக்கலாம். இவை குழந்தையில் எந்த சிக்கலையும் பிரதிபலிப்பதில்லை. இது அல்ட்ராசவுண்ட் சாஃப்ட் மார்க்கரஸ் என்று அழைக்கப்படுகின்றன.

 

ஒற்றை அல்லது மிகவும் சிறிய மாற்றங்கள் பொதுவாக ஒரு சாதாரண குழந்தைகளில் காணப்படுகின்றன மேலும் அசாதாரணமாக கருதப்படுவதில்லை.

 

ஸ்கேனில்  ஒன்று அல்லது இரண்டு முக்கிய சாஃப்ட் மார்க்கரஸ் காணப்படுகையில், அது குரோமோசோமல் குறைபாடுகளின் சந்தேகத்தை அதிகரிக்கிறது.

 

ஒரு மரபணு அசாதாரணத்தை கண்டறியும் போது அல்ட்ராசவுண்ட் சாஃப்ட் மார்க்கரஸ் கருதப்படுபவை பின்வருமாறு:

 

 • நச்சல் மடிப்பு தடித்தல் (குழந்தையின் கழுத்தின் பின் புறத்தில் திரவ சேகரிப்பு)

 

 • குரோயிட் பிளெக்ஸஸ் நீர்க்கட்டி (மூளையில் உள்ள நீர்க்கட்டி)

 

 • ரீனல் பெல்விக் டைலடேஷன் (சிறுநீரகத்தில் சிக்கல்)

 

 • ஈகோஜெனிக் ஃபோசை (அடிவயிறு அல்லது இதயத்திற்கு அருகில் ஆம்னியோடிக் திரவத்தின் சேகரிப்பு)

 

 • தொப்புள்கொடியில் உள்ள ஒற்றை தமனி- பொதுவாக தொப்புள் தண்டு இரு தமனிகள் மற்றும் ஒரு நரம்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

 • ஹைட்ரோசெஃபலஸ் (மூளையில் திரவ சேகரிப்பு)

 

 

சாதாரண நிலைமைகளின் கீழ், அல்ட்ராசவுண்ட்  சாஃப்ட் மார்க்கரஸ் வழக்கமாக தற்காலிகமாகக் காணப்படுகின்றன, மேலும் 33 வாரங்களில் செய்யப்படும் அனோமலி ஸ்கேனில் அது மறைந்துவிடுகிறது.

 

டவுன்’ஸ் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாட்டின் அனோமலி ஸ்கேனில் நூச்சல் ஃபோல்ட், நன்கு வளராத மூக்கின் எலும்புகள், குறுகிய கை கால்கள், வளைந்த சிறு விரல், சிறுநீரக இடுப்பு சிதைவு போன்றவை இருப்பதை காட்டுகின்றன.

 

பொறுப்பாகாமை(Disclaimer)

 

இந்த கட்டுரையில் இருக்கும் தகவல்கள் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனை, கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டதாக குறிக்கப்படவில்லை. எப்போதும் மருத்துவரின் ஆலோசனையை  பெறவும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!