19 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இந்த உணவுவகைகளை சாப்பிடவும்
கர்ப்ப காலத்தில் – தொப்பை, வளர்வது ,சோர்வாக இருப்பது, மனநிலை ஊசலாடுவது, குறிப்பிட்ட உணவுகள் மட்டும் பிடிப்பது, இவை அனைத்தும் சாதாரண, தற்காலிக, மற்றும் பாதிப்பில்லாத மாற்றங்கள். இருப்பினும் உங்கள் இதயத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டு மாற்றங்கள் உள்ளன; அதாவது:
கர்ப்பத்தின்போது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்.
கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் “ப்ரிக்லேம்ப்ஸியா” என்று அழைக்கப்படுகிறது, கர்ப்பம் தொடர்பான நீரிழிவு நோய் “கெஸ்டேஷனல் டையபட்டீஸ்” என அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் வழக்கமான உயர் இரத்த அழுத்தம் மற்றும் வழக்கமான நீரிழிவு நோயிலிருந்து வேறுபடுகின்றன, ஏனெனில் அவை பிரசவத்திற்கு பின் “குணமடைகிறது”.
உங்களுக்கு கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்ப்ஸியா அல்லது கர்ப்பகால நீரழிவு ஏற்பட்டால், மருத்துவர் உங்களின் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை வழக்கமாக சோதித்து உங்களையும் அதை அவ்வப்போது செய்யச்சொல்வார்.
மேற்கூறப்பட்ட ஆபத்துகள் இரண்டையும் நிர்வகிக்க உதவுவதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதைப் பற்றி பார்க்கலாம்…
உணவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்
கால்சியம்
கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்ட பெண்களுக்கு தினசரி 1000 மில்லிகிராம் கால்சியம் சத்துக்கள், டையஸ்டோலிக் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கர்ப்பகாலத்தின் போது கால்சியம் சத்துக்கள், கர்ப்பத்தின்போது ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கலாம். உங்கள் உணவில் கூடுதல் துணை உணவினை சேர்ப்பதற்கு முன்னர் உங்கள் மருத்துவர் அல்லது ந்யூட்ரிஷியன்களுடன் கலந்து பேசுங்கள்.
சோடியம் வழிகாட்டுதல்கள்
உங்களுக்கு எடிமா மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா அல்லது எக்ளாம்ப்சியா இருப்பது கண்டறியப்பட்டால், உப்பு அளவை ஒரு நாளைக்கு 2 கிராம்கள் என்று குறைத்துக்கொள்வதால் வீக்கம் குறையும்.
கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்பு சத்து
உங்கள் கர்ப்பம் முழுவதும் போதுமான கலோரி மற்றும் புரதத்துடன் ஒரு சீரான உணவை பராமரிப்பது அவசியம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்ப்பகாலத்தில், உணவினால் ஏற்படும் நோய்க்கு பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். லிஸ்டீரியாவால் அசுத்தமடைந்த ப்ரீ, ஃபெட்டா மற்றும் மெக்சிகன் சாஃப்ட் சீஸ் மற்றும் டெலி இறைச்சிகள் போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள்.
சால்மோனெல்லாவை தடுக்க பச்சை அல்லது அரைவேக்காட்டில் முட்டை, இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற உணவை தவிர்க்கவும். திமிங்கிலம், வாள் மீன் மற்றும் மாக்கரெல் போன்ற பாதரசம் அதிகமுள்ள மீன் உட்கொள்ளவேண்டாம், ஏனெனில் பாதரசம் குழந்தையின் வளரும் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பதப்படுத்தப்படாத ஜூஸ்கள் மற்றும் பச்சை முளைகட்டிய பயிர்கள் உணவினால் ஏற்படும் நோய்களை ஏற்படுத்தலாம்.
கர்ப்பகால நீரழிவிற்கான உணவுமுறை
உங்கள் இரத்த சர்க்கரைகளை கட்டுப்படுத்துவதால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்களை கணிசமாக குறைக்கலாம். முறையான உணவு திட்டமிடல் உங்களுக்கு சமச்சீரான உணவை கொடுக்க உதவும். ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பழங்களை குழுக்களாக பிரித்து, உங்கள் கலோரி தேவைகளுக்கேற்ப ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவு உணவினைச் சாப்பிடலாம்.
கார்போஹைட்ரேட்
சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு, உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை உங்கள் மொத்த கலோரி தேவைகளில் 35 முதல் 40 சதவிகிதமாக குறைக்கலாம். குளிர்பானங்களில் போன்ற பதப்படுத்தப்பட்ட சர்க்கரை கொண்டவைகளில் மட்டுமே கார்போஹைட்ரேட் இருப்பதாக அர்த்தமல்ல, இயற்கையான சர்க்கரை கொண்ட பால், பழங்கள், தயிர் போன்றவற்றிலும் உள்ளது.
வெள்ளை ரொட்டி அல்லது நூடுல்ஸ் போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, முழு தானியம் மற்றும் கம்பு போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும். மேலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடவும்.
பழங்கள் மற்றும் காய்கறிச்சாறுகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரை நிறைய இருப்பதால் எடுத்துக்கொள்ளும் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும்.
கர்ப்பகால நீரிழிவின் போது பால் மற்றும் பால் பொருட்கள் கூட உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய நல்ல கார்போஹைட்ரேட்களை கொண்டுள்ளன. மோர், புதிதாக உரைக்குத்தப்பட்ட தயிர் அல்லது பழச் சாறுகள் போன்றவற்றை அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவிற்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
புரதங்கள்
முட்டை, பீன்ஸ், சோயா மற்றும் டோஃபுவுடன் சேர்த்து லேசான இறைச்சிகள், கோழி மற்றும் மீன் ஆகியவற்றைத் தேர்ந்தெடுங்கள். அவை நல்ல புரத தேர்வுகள். பால் பொருட்கள் மற்றும் சீஸ் கூட சேர்க்க முடியும். அதிக எடை அதிகரிப்பு உள்ளது என்றால் குறைந்த கொழுப்பு உள்ளவற்றை தேர்ந்தெடுக்கவும். கொழுப்பு இறைச்சி, மீன், கடல் உணவு மற்றும் கடல் கானாங்கெளுத்தி போன்ற உயர் பாதரசம் அளவு கொண்டவை தவிர்க்க வேண்டிய அல்லது குறைக்கவேண்டிய புரத உணவுகள் ஆகும்.
கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள்
கர்ப்பகால நீரழிவுக்கான உணவு முறையில் 35 முதல் 40 சதவிகிதம் வரை கொழுப்பை கொண்டிருக்கவேண்டும். உங்கள் உணவில் அதிக கொழுப்பு இருப்பதால், மொத்த கொழுப்பை குறைக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ளவும். பருப்புகள், அவகோடா, கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது.
மொத்த கலோரியில் 10 சதவிகிதமே சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்டதாக இருக்க வேண்டும். இவை இனிப்புகள், டெசர்ட்கள், பால், பேக்கன், சாசேஜ், க்ரீம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றில் காணப்படுகிறது. குறிப்புக்களை படிப்பது அவசியம் – “பார்ஷியலி ஹைட்ரோஜினேட்டட் ஆயில்” என்று இருக்கும் பொருட்களை தவிர்க்கவும்.
உணவு நேரங்கள்
கர்ப்பகால நீரழிவை நீங்கள் கொண்டிருக்கையில், சரியான நேரத்தில் நீங்கள் உணவை உட்கொள்ளாமல் இருப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு, மூன்று வழக்கமான உணவுடன் நான்கிலிருந்து ஐந்து சிற்றுண்டிகள் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளவும். நாட்பொழுதில் உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டாம். ஒவ்வொரு உணவு அல்லது சிற்றுண்டியிலும் கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்பு சமச்சீராக இருக்கவேண்டும்.
நினைவிருக்கட்டும், கர்ப்பகால நீரழிவின்போது காலை நேரத்தில் இரத்தசர்க்கரை அளவு எப்போதும் அதிகமாக இருக்கும். அதனால் காலை உணவில் மற்றும் சிற்றுண்டியில் கார்போஹைட்ரேட்டை குறைக்கவேண்டுமா என்று மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
மாதிரி மெனு
காலை உணவு: ஒரு வறுக்கப்பட்ட முழு கோதுமை ரொட்டி 2 தேக்கரண்டி வெண்ணெயை, இரண்டு துருவப்பட்ட முட்டையின் வெள்ளை கரு / ஒரு கிண்ணம் அவல் உப்புமா கேரட், தக்காளி மற்றும் வெங்காயம் மற்றும் 1 கப் வெண்ணை நீக்கப்பட்ட பால்.
மதிய உணவு: ஒரு கிண்ணம் பருப்பு அல்லது சிக்கன் / மட்டன் கறி, இரண்டு முழு தானிய ரொட்டிகள் / திணை அடை, காய்கறி சாலட், சிறு கிண்ணத்தில் வெண்ணையற்ற, சர்க்கரை அல்லாத தயிர்.
மதியம் சிற்றுண்டி: குறைந்த கொழுப்பு கொண்ட யோகர்ட் டிப்பில் கொழுப்பல்லாத காக்ரா மற்றும் 2 மேசைக்கரண்டி உலர் திராட்சை.
இரவு உணவு: சமைத்த சிகப்பரிசியுடன் க்ரில் செய்யப்பட்ட மீன் / சிக்கன் / பருப்பு சிறிய பகுதி, 1 கப் சமைத்த கீரை, ஒரு சிறிய ஆரஞ்சு.
மாலை ஸ்னக்: 1 கப் கொழுப்பகற்றப்பட்ட பால் மற்றும் ஒரு பழம்
வீட்டில் ஆரோக்கியமான உணவை சரியான இடைவேளையில் உட்கொள்வதால் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுதத்தை கட்டுப்படுத்தலாம்.
A