க்ரஹணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வந்தால் பாதகமான விளைவுகள் ஏது ஏற்படுமா?

cover-image
க்ரஹணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வந்தால் பாதகமான விளைவுகள் ஏது ஏற்படுமா?

கர்ப்பமாக இருக்கும்போது கிரகணத்தை காண்பது தவறா?

 

பல நூறாண்டுகளாக, இந்திய பெண்கள் கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் கிரகணம் ஏற்படும்போது வெளியில் செல்வதையோ அல்லது பார்க்கவோ கூடாது என்று அறிவுருத்தப்படுகிறார்கள். அதனால் குழந்தைக்கு பிளவுபட்ட உதடு, அன்னம் போன்ற பிறப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது நம்பிக்கை. இது உண்மையா?

கர்ப்பத்தின் மீது கிரகணத்தினால் ஏற்படும் தீமைகள் என்ன?

 

இந்தியாவில் பொதுவாக கேள்விப்படும் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தைப்பற்றிய நம்பிக்கைகளில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

 

 • சூரியன் அல்லது சந்திரனை நேரடியாக பார்க்க வேண்டாம்
 • வீட்டினுள்ளே இருக்கவும்
 • கிரகணத்தின் போது சாப்பிட, குடிக்க அல்லது சமைக்கக் கூடாது
 • முடிந்தவரை வேலையை தவிர்க்கவும்
 • எந்தவொரு கூர்மையான பொருள்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், குழந்தை பிறப்பு குறைபாடுகளை இது உருவாக்கலாம்
 • கிரகணக் கதிர்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தவிர்ப்பதற்காக ஜன்னல்களுக்கு திரையிடலாம்
 • கிரகணம் முடிந்தவுடன் குளிப்பது

 

கர்ப்பத்தின் மீது கிரகணத்தின் விளைவு ஒரு கற்பனையா?

விஞ்ஞானமும், மருத்துவமும் கர்ப்பத்தின் போது கிரகண விளைவுகளை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

 

 • நேரடியாக சூரியனைப் பார்ப்பது

 

ஆமாம், கர்ப்பமாக இல்லையென்றாலும் இது பொருந்தும் உண்மை. சூரிய ஒளியை நேரடியாக பார்ப்பதால் கருவிழியை அது நேரடியாக பாதிக்கின்றது. கருவிழியில் உள்ள ராட் மற்றும் கோன்கள் இதனால் பாதிக்கப்படும். இவை ஒளிக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. அதனால் கர்ப்பமாக இருந்தாலும் இல்லையென்றாலும், சூரிய கிரகணத்தை கண்ணாடி இல்லாமல் நேரடியாக பார்த்தால் ‘எக்லிப்ஸ் ப்ளைண்ட்னெஸ்’ எனப்படும் கிரகணத்தினால் கண் பார்வையை இழக்கக்கூடும்.

 

 • கிரகணத்தின் போது சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது சமைக்கவோ கூடாது.

இதுவு உண்மையே. ஏனெனில்:

 

 1. சூரிய ஒளி என்பது வாழ்வாதாரமானது. சூரிய ஒளி இல்லையென்றால் நுண்கிருமிகள் சூழலில் வளர வழிவகுக்கும், குறிப்பாக உணவில். கிரகணத்தின்போது, சூரிய ஒளி சந்திரனால் மறைக்கப்படுகிறது.
 2. இதனால் வெப்பநிலை குறைகிறது. இது கெட்டுப்போகும் உணவு பதார்த்தத்தில் நுண்கிருமிகள் வளர வழிவகுக்கின்றது.
 3. அதனால் வயிற்றில் தொற்று உருவாகும் என்பதால் சூரிய கிரகணத்தின்போது சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது சமைக்கவோ வேண்டாம் என அறிவுருத்தப்படுகிறது.

 

கிரகணத்திற்கு முன்பு சமைத்த உணவை அநேக மக்கள் தூர எறிந்துவிடுகின்றனர், இது பாக்டீரியாவில் அதிகரிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக மாசுபடுதல் அல்லது கெட்டுப்போவதை தவிர்க்கவே.மற்ற நம்பிக்கைகளில், எந்த உண்மையான அறிவியல் ஆதரவு அடிப்படையில் அல்ல. உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்ற அச்சம் இல்லாமல், வெளியில் செல்லவோ, வேலை செய்யவோ, கத்திகளையும் பிற கூர்மையான கருவிகளையும் பயன்படுத்தலாம். நீங்கள் என்ன செய்தாலும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

 

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ளவேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

 

பிரபலமான நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் இருந்தாலும், சில தீங்கற்ற மரபுகளை பின்பற்றப்படலாம். மேலும், புராணங்களில் பெரும்பாலானவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இரத்தக் குளுக்கோஸ் அளவு குறைவதை தவிர்க்க கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின் போது பேக்செய்யப்பட்ட உணவை உண்ணலாம்.

கர்ப்பிணிப் பெண் மீது சந்திர கிரகணத்தின் பாதகமான விளைவுகளை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை, ஆனால் அவற்றை ஆதரிக்க விஞ்ஞான ஆய்வுகள் எதுவும் இல்லை.

 

குறித்த பொறுப்புதுறுப்பு: இந்த கட்டுரையில்  இருக்கும் தகவல்கள் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனை, கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டதாக குறிக்கப்படவில்லை. எப்போதும் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!