கர்ப்பத்தின்போது நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்

cover-image
கர்ப்பத்தின்போது நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான குழந்தைக்கு முக்கியம். இங்கே உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய 10 முக்கியமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன:

 

  1. முழு தானியங்கள்:

சுத்திகரிக்கப்படாத தானியங்களில் நார்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி இருப்பதால், அதை எடுத்துக்கொள்ளவும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். இதை சரியான அளவில் எடுத்துக்கொள்வதால் எடை கூடாது. முழு கோதுமை, ஓட்ஸ், நச்ஹ்னி, கம்பு, திணை, இவை அனைத்தும் சிறந்த தேர்வுகள்.

 

 

  1. காய்கறிகள்:

உங்களால் முடிந்த வரை அனைத்து வண்ணங்களில்ய்ம் உள்ள காய்கறியை எடுத்துக்கொள்வதால், கர்ப்பத்தின்போது முக்கிய ஊட்டச்சத்தை தக்கவைக்க உதவுகிறது. பசிக்கும்போது சிற்றுண்டிகளுக்கிடையில் காய்கறிகளை உண்ணலாம்.

 

 

  1. பழங்கள்:

புதிய, பருவகால பழங்களை மட்டும் உண்ணவும். பழச்சாறாக உட்கொள்வதை தவிர்க்கவும். இவை நார்சத்தை இழந்துவிடுகின்றன. இனிப்பிற்கு பதில் பழங்களை சாப்பிடலாம்.

 

 

  1. முட்டை:

முழுமையான புரதமாக முட்டை கருதப்படுகிறது. தினமும் காலை உணவில் முட்டையை (முக்கியமாக வெள்ளை கருவை) சேர்த்துக்கொள்ளவும்.

 

  1. பருப்புகள்:

சைவர்களுக்கு பருப்பு தான் சிறந்த புரத ஆதாரம். இரும்பு வழங்கலாம். புரோட்டின்கள் வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகளாகக் கருதப்படுகின்றன மற்றும் உங்கள் குழந்தையின் உயிரணு உருவாவதற்கு அவசியம்.

 

  1. நட்ஸ்:

புரதங்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக தினமும் கைநிறைய நட்ஸ் (பருப்புவகைகள்) எடுத்துக்கொள்ளவும். ஒரு சிற்றுண்டிக்காக உங்கள் பையில் எளிதில் எடுத்து செல்லக்கூடியது.

 

  1. விதைகள்:

தினமும் விதைகளின் கலவையை உண்ணலாம், குறிப்பாக ஆளி விதைகள். ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரமாகும், இது குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவும் முக்கிய ஊட்டச்சத்தாகும்.

 

 

  1. பால்:

பால் மற்றும் பால் பொருட்கள் புரதங்கள் மற்றும் கால்சியத்தை வழங்குகின்றன. உங்கள் குழந்தையின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். கர்ப்பிணிகளுக்கு கடைந்த அல்லது வெண்ணைய் நீக்கப்பட்ட பால் போதுமானது. இது எடை அதிகரிப்பின்றி அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது.

 

  1. கொழுப்புகள்:

வைட்டமின்களை உறிஞ்சி, மூட்டுகளை உயவூட்டுவதற்கு உடலுக்கு கொழுப்பு அவசியம். நமது உடலுக்கு இது மிகவும் சிறிய அளவில் தேவைப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், ஆளிவிதை விதை எண்ணெய் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் போன்ற தினமும் 2-3 தேக்கரண்டி நிறைவுறா கொழுப்பு  தேவைப்படுகிறது.

 

  1. தண்ணீர்:

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்ச உதவுவதில்  முக்கிய பங்கு வகிப்பதால் இது மிகவும் அவசியம். தேவையான அளவு தண்ணீர் உட்கொள்வதால் நீர்சத்து அற்ற நிலையை தடுக்கிறது, தினமும் 8-10 கோப்பைகள் நீரை அருந்தவும்.

 

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!