20 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பெரும்பாலான கர்ப்பங்கள் எளிமையாக சிக்கலின்றி அமைகின்றன. ஆனால் தவறாக போகாது என்று அர்த்தமில்லை, ஏதாவது அசாதாரணமாக நீங்கள் கவனித்தால் அல்லது உணர்ந்தால், முன்னமே அதை கண்டுபிடித்து தக்க சிகிச்சையை எடுத்துக்கொள்வதால் மேற்கொண்டு ஏற்படும் சிக்கலை தவிர்க்கலாம். குழந்தை உண்டாகும் முன் முழுமையான உடல் ஆரோக்கியத்தை சரிபாத்துக்கொள்வது சிறந்த யோசனையாகும். அதனால் இரத்த சோகை, தைராய்டு சமநிலை இல்லாமை ஆகியவற்றை கர்ப்பமாகும் முன் சரி செய்து கொள்வதால் சிக்கல்களை தவிர்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் நீங்கள் கவனிக்கவேண்டிய சில கர்ப்பகால சிலவற்றை இங்கே காணலாம்…
1.கர்ப்பகாலத்தின் ஆரம்ப நிலைகளில் இரத்தப்போக்கு:
கர்ப்பகாலத்தின் ஆரம்ப நிலைகளில் லேசான இரத்தப்போக்கு இயல்பானதே. இது கௌ கருப்பைக்குள் ஒட்டுவதால் ஏற்படுவது. ஒருவேளை இது யோனி அல்லது கர்ப்பவாய் நோய் தொற்று அல்லது பாலிப்பாக இருந்தால் எளிதாக சிகிச்சையளிக்கலாம். சிலநேரங்களில், குறைந்த ப்ரோஜஸ்டிரான் அளவுகளாலும் முதல் மூன்று மாதங்களில் இரத்தப்போக்கு ஏற்படும். இது ஹார்மோன் சத்துக்களை கொடுப்பதால் கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால் இதைப்பற்றி மருத்துவரிடம் கூறுவது அவசியம். அதோடு, கர்ப்பம் கலைந்துவிடும் என்று அச்சப்படவேண்டாம், அவ்வாறு கலைந்தால் தாங்கமுடியாத வலி, அதிக இரத்தப்போக்கில் இரத்தக்கட்டு அதிகமாக வெளியேறும்.
ட்யூபல் கர்ப்பம் என்றும் அழைக்கப்படும் எக்டோபிக் கர்ப்பத்தில், கருவானது கர்ப்பப்பைக்கு வெளியே ஃபெலோபியன் குழாயில் வளரத்தொடங்குகிறது. இந்த வகை கர்ப்பத்தில் இரத்தப்போக்கு மற்றும் அதீத வயிறு மற்றும் / அல்லது முதுகு வலி ஆகியவை இருக்கும். உடனடியாக இந்த கருவினை கலைக்க வேண்டும். இந்த நிலையை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய வேண்டும், ஏனெனில் கரு வளரும்போது, இந்த குழாய் வெடித்து உள்ளுக்குள் பெரும் இரத்தக்கசிவு ஏற்படுத்தி மரணத்திற்கு வழிவகுக்கும். ஆரம்பகால கர்ப்ப ஸ்கேன், அல்லது இரத்த பரிசோதனை ஆகியவை ஹெச் சி ஜி அளவுகளை எளிதில் கண்டறிய உதவும்.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பை வாய் பலவீனமாகி குழந்தை முழுமையாக வளர்வதற்கு முன் மிகவும் மெல்லியதாக ஆகும் போது, அது தகுதியற்ற கருப்பை வாய் என அறியப்படுகிறது. குழந்தை வளரும் போது, அது கீழ்நோக்கி தள்ளுவதைத் தொடங்குகிறது, மேலும் இது குறை பிரசவ வலி காரணமாக இருக்கலாம். இந்த நிலை உடல் பரிசோதனை மூலம் கண்டறியப்படலாம், மேலும் படுக்கையில் ஓய்வு பரிந்துரைக்கப்படுகிறது. சில மோசமான சந்தர்ப்பங்களில் கர்ப்பப்பை வாய் தைக்கப்பட்டு, 38 ஆவது வாரத்தில் பிரிக்கப்படும்.
இந்த நிலையில், நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையில் கீழிறங்கி இருக்கிறது, சில நேரங்களில் பகுதியாகவும் அல்லது முழுமையாகவும் கருப்பை வாயை மூடுகிறது. கர்ப்பத்தின் பிற்பகுதியில், இது இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம், மேலும் பிற சிக்கல்களுக்கும் வழிவகுப்பதோடு குழந்தை குறைபிரசவமாக பிறக்கவும் வாய்ப்புள்ளது. இது உடற்பரிசோதனையில் அல்லது கர்ப்பத்தின்போது எடுக்கப்படும் அல்ட்ராசவுண்டில் கண்டறியப்படுகிறது.
கர்ப்பிணிக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் புரதம் இருக்கும் இந்த நிலை, கர்ப்பத்தின் பிற்பகுதியில் ஏற்படுகிறது. தீவிர தலைவலி, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி, வீக்கம் மற்றும் கண்பார்வை கோளறுகள் ஆகியவை ஏற்படலாம். அதிக எடை அல்லது நீரழிவு கொண்ட 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இது இயல்பாக ஏற்படுகிறது. கடுமையான ப்ரீக்ளம்சியா மிகவும் ஆபத்தானது, இதனால் தாய் மற்றும் குழந்தையின் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ப்ரீக்ளம்சியா கண்டறியப்பட்டால், உடனடியாக குழந்தை பிரசவிக்கப்படவேண்டும்.
இந்த வகையான நீரழிவு 2-10 சதவிகித பெண்களில் கர்ப்பகாலத்தின்போது ஏற்படுவதாகும். பொதுவான சில கர்ப்பகால பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும். எந்த அறிகுறியும் இதற்கில்லை, வழக்கமான க்ளுகோஸ் பரிசோதனையில் 24-28 வாரங்களுக்கிடையில் கண்டறியப்படுகிறது. கட்டுப்பாடற்ற கர்ப்பகால நீரழிவினால் பிறப்பு குழாயில் பொருந்தாத அளவுக்கு குழந்தையின் எடை மிக அதிகமாக அதிகரிப்பதோடு சிசேரியன் மூலமே பிரசவம் ஆகும். தாய்க்கும் பிற்காலத்தில் நீரழிவு ஏற்படலாம். கர்ப்பகால நீரழிவு உடற்பயிற்சியின் மூலமும் சிறந்த உணவு கட்டுப்பாட்டின் மூலமும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்.
அம்னியோடிக் திரவம் என்பது வயிற்றில் குழந்தை இருக்கும் அம்னியோடிக் பையில் குழந்தைக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் நிரைந்திருக்கும் திரவமாகும். சில கர்ப்பிணிப்பெண்களில், இந்த திரவம் குறைகிறது, அதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கர்ப்பமான பெண்ணிற்கு திரவம் கசிந்தால் அல்லது குழந்தையின் இயக்கத்தை உணரமுடியவில்லை என்றால், மருத்துவட் அம்னியோடிக் திரவ அளவை சோதிக்கிறார். திரவத்தின் அளவு மிகவும் குறைந்திருந்தால், கர்ப்பத்தை கண்காணிக்கவேண்டும். குறித்த பிரசவ தேதிக்கருகில் இருந்தால், பிரசவவலி தூண்டப்படலாம்.
தாய் Rh நெகடிவாகவும் குழந்தை Rh பாஸிடிவாகவும் இருந்தால் இந்த நிலை ஏற்படுகிறது. கர்ப்பத்தின்போது, சிசுவின் சிறிதளவு இரத்தம் நஞ்சுக்கொடியிலிருந்து கசிந்து தாயின் இரத்தத்துடன் கலக்கிறது. உடனே தாயின் நோயெதிர்பு சக்தி, குழந்தையின் Rh காரணிக்கு எதிராக ஆண்டிபாடிகளை உடனடியாக உருவாக்குகிறது. முதல் குழந்தை பொதுவாக பாதிக்கப்படுவதில்லை, ஆனால் இரண்டாவது குழந்தைக்கு அபாயம் அதிகம். இரண்டாவது கர்ப்பத்தில் தாயின் ஆண்டிபாடிகள் சிசுவின் செகளோடு போராடி அதை அழிக்க தொடங்குகிறது. இதனால் ‘எரித்ரோப்லாஸ்டோசிஸ்’ என்னும் நிலைமை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கு மரண ஆபத்து ஏற்படுகிறது. ஒரு சாதாரண இரத்த பரிசோதனையில் தாய் மற்றும் தந்தையின் இரத்தவகைகள் உறுதிசெய்யப்படுகின்றன. தாய் Rh நெகடிவாகவும் தந்தை Rh பாஸிடிவாகவும் இருந்தால், குழந்தை பாஸிடிவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. தாயின் உடம்பு குழந்தைக்கு எதிராக செயல்படுவதை தடுக்க ஒரு சிறப்பு மருந்து 28 வாரங்களிலும், பின் இன்னொன்று பிரசவத்தின்போதும் உட்செலுத்தப்படும்.
இந்த தகவலால் நீங்கள் அதிகம் யோசிக்கவேண்டாம். இந்த சிக்கல்கள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை, மேலும், மருத்துவம் இப்போது முன்னேறியிருப்பதால் எளிதில் கட்டுப்படுத்தலாம்.கர்ப்பகாலத்தில் உங்கள் மருத்துவரிடம் வழக்கமான செக்-அப்களை சரிவர செய்து, அனைத்து இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன்களை மேற்கொள்ளவும். ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் இருப்பின் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும். உங்கள் கர்ப்பம் சுமூகமாக இருக்கும்!
A