20 Mar 2019 | 1 min Read
Lina Duncan
Author | 12 Articles
உறுதி செய்வதற்காக மூன்று முறை சிறுநீர் சோதனை நீங்கள் செய்தாகிவிட்டது, அடுத்தது என்ன?
உங்கள் தாயோ பாட்டியோ சென்ற அதே மருத்துவரிடம் அல்லது நீங்கள் விரும்பும் ஆன்லைன் பரிந்துரைத்த மருத்துவரிடம் செல்வதற்கு முன்… சிறிது ஆராய்ந்து பொறுமையாக மருத்துவரை தேர்ந்தெடுக்கவும்.கர்ப்பம் ஒரு குறைபாடு அல்ல – இது உங்கள் வாழ்வில் மற்றும் அன்பில் ஒரு புதிய சிறிய நபரை வரவேற்கும் உற்சாகமான அத்தியாயமாகும்.
உங்கள் வழக்கமான வாழ்க்கைமுறை என்ன? வாய்ப்பு கிடைக்கும்போது கிடைத்ததை உண்ணும் பிசியான வேலைபார்க்கும் நபரா நீங்கள்? கரகரப்பான சிற்றுண்டிகள் விருப்பமா? ஆர்கானிக் உணவுகள் மற்றும் யோகா செய்பவரா? சிறிய வியாதிக்கும் மாத்திரையை சாப்பிட்டு மருத்துவரை நாடுபவரா?
நீங்கள் உங்கள் கர்ப்பத்தை எடுத்துக் கொள்ள விரும்பும் கோணத்தைக் கவனிக்க வேண்டும், அதில் முக்கியமான பகுதியாக நீங்கள் பயணம் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் ஆப்பிரிக்காவிற்கு ஒரு பயணம் செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒவ்வொரு மூலையிலும் சுகவீனத்தையும் ஆபத்தையும் உண்டாக்குவீர்கள் என்று நீங்கள் நினைப்பீர்களா? அல்லது நீங்கள் நிலத்தின் அழகு மற்றும் வன விலங்குகளின் அதிசயங்களைக் காண்பிக்கும் மக்களுடன் நீங்கள் போயிருப்பீர்களா?
நீங்கள் புத்தகத்தில் அல்லது ஆன்லைனில் டாக்டர். கூகிளில் படித்தது, டிவி யில் பார்த்ததில், கவனம் செலுத்துவதால் மன அழுத்தமும் ஆர்வமுமே அதிகரிக்கும்.
எந்தவித ஆரோக்கிய சிக்கல் அல்லது அசாதாரணமான சூழ்நிலை இருந்தால் அன்றி அவசரப்பட்டு யோனி வழி அல்ட்ராசவுண்ட் எடுத்து உங்களையும் உங்கள் குழந்தையையும் அனாவசியமாக மருந்து மற்றும் இயந்திரங்களுக்கு வெளிப்படுத்தவேண்டாம். பேபி சக்ரா கம்யூனிட்டி மற்றும் அது போன்ற பிற ஆன்லைன் வளங்களை ஆராயவும். பயமில்லாமல் பெரும்பாலும் வீட்டில் பிரசவித்த பாட்டியை கேளுங்கள். மக்கள் அவர்களின் பயமுறுத்தும் கதைகளை உங்களிடம் சொல்ல அனுமதிக்கவேண்டாம். உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து / ஆலோசனையில் உங்களுக்கேதும் சந்தேகம் இருந்தால், வேறொரு மருத்துவரிடம் இரண்டாவது ஆலோசனை கேட்பது தவறல்ல.
எதிர்ப்பார்க்கப்படும் பிரசவ தேதியை கணக்கிட ஒரு எளிய வழி. உங்கள் கடைசி மாதவிடாயின் முதல் தேதியை எடுத்துக்கொள்ளவும் அதிலிருந்து 3 மாதங்களை கழிக்கவும். பின் 7 நாட்களை கூட்டவும். உங்கள் கடைசி மாதவிடாய் தேதி 2015 ஏப்ரல் 1 என்றால், உங்கள் எதிர்ப்பார்க்கப்படும் பிரசவ தேதி தோராயமாக 2016, ஜனவரி 8 ஆகும்.
எதிர்ப்பார்க்கப்படும் பிரசவ தேதி – என்பது வெறும் எதிர்ப்பார்க்கப்படும் கணக்கு மட்டுமே. உங்களுக்கு பிரசவ தேதி ஜனவரி தொடக்கத்தில் என்றால், நண்பர்களிடம் ஜனவரி கடைசியில் என்று சொல்லலாம். அப்போது அவர்கள் உங்களை நச்சரிக்கமாட்டார்கள், உங்கள் பிரசவத்திற்கு இன்னும் நாளிருப்பதாக நினைத்துக் கொள்வர்.
A