தண்டுவடத்தின் வால் பகுதியில் மயக்க மருந்து போடப்பட்டு பிரசவத்திற்கு செல்கிறீர்களா? இங்கே அதன் உண்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

cover-image
தண்டுவடத்தின் வால் பகுதியில் மயக்க மருந்து போடப்பட்டு பிரசவத்திற்கு செல்கிறீர்களா? இங்கே அதன் உண்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பிரசவத்தின் போது எபிடரல் மயக்க மருந்து எடுத்துக்கொள்வது என்ன என்பதை பற்றி டாக்டர் ராகுல் மன்சந்த விளக்குகிறார்.

 

எபிட்யூரல் மயக்க மருந்து:

 

பிரசவத்தின்போது வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான முறையாகும். இது கீழ் முதுகுத்தண்டு பிரிவுகளில் உள்ள நரம்பு தூண்டுதலை தடுக்கும் பகுதி மயக்க மருந்தாகும், உங்கள் உடலின் கீழ் பகுதி இதனால் மறத்து போய் வலி உணர்வு குறைகிறது.

எபிட்யூரல் மயக்கத்தின் நன்மைகள்:

 • பிற வலி நிவாரணிகளை விட உயர்ந்த வலி நிவாரணம்.
 • பிரசவம் நீடித்தால் தாய் ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.
 • பிரசவத்தின் அசௌகரியத்தை குறைப்பதன் மூலம் தாயிடம் நல்ல நேர்மறையான பிரசவ அனுபவம் ஏற்படுகிறது.
 • முழு பிரசவத்தின்போதும் தாய் விழிப்புடன் இருக்க உதவுகிறது
 • அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றால், தனியாக மயக்க மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை மேலும் பிரசாத்திற்கு பின் திறம்பட வலி நிவாரணம் அளிக்கிறது.

 

எபிட்யூரல் மயக்க மருந்தின் அபாயங்கள்:

தாய்க்கு:

 

 • இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி.
 • முதுகுத் தண்டு திரவம் கசிவதால் கடுமையான தலைவலி. 1% க்கும் குறைவான பெண்களில் காணப்படுகிறது.
 • பக்க விளைவுகள்: அரிப்பு, காய்ச்சல், நடுக்கம், காதுகளில் ரீங்காரம், முதுகுவலி, புண், குமட்டல்,  சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
 • நடக்க சிரமம்.
 • பல மணி நேரமாக தொடரும் பிரசவ வலி (இரண்டாம் கட்டம்)
 • கருவி பயன்படுத்தி பிரசவம் மற்றும் சிசேரியன் செய்யும் வாய்ப்பு அதிகம்
 • பிரசவத்திற்கு பிறகு, கீழ் பாதி உடலில் சில மணி நேரத்திற்கு உணர்வின்மை .
 • அரிதான நிகழ்வுகளில், எபிட்யூரல் தளத்தில் தொற்று, இரத்தக்கட்டி, நிரந்தர நரம்பு பாதிப்பு ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு:

 • எபிட்யூரல் மயக்க மருந்துகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் சுவாச தளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தையின் இதய வீதத்தை குறைப்பதாகவும் அறியப்படுகிறது.
 • சிசு மந்தமாக ஆவதோடு பிரசவத்திற்கான நிலை சிக்கலாகும்

சில குழந்தைகளில், தாய்ப்பாலூட்டுவதில் சிரமம் ஏற்படலாம்.

தாய்க்கு எபிட்யூரல் மயக்க மருந்து எப்படி வழங்கப்படுகிறது

ஒரு எபிட்யூரல் காதெட்டர் வைப்பதால் குறைந்த அசௌகர்யமே ஏற்படுகிறது. 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். நோயாளி உட்கார்ந்த நிலையில் அல்லது பக்கவாட்டில் படுத்த நிலையில் இருக்க வேண்டும். இதன் பிறகு, காத்திடர் உள்செலுத்தப்பட்டு நோயாளிக்கு டேப் ஒட்டியிருப்பது மட்டுமே உணர்வு இருக்கும்.

மரத்து போதல் சில நேரங்களில் தொடங்கும். 10-20 நிமிடங்களில் முழுவதும் மறத்து விடும். ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு அந்த மருந்தின் சக்தி போக ஆரம்பித்தவுடன் கொடுக்கப்படும்.

 

மேலும் எபிட்யூரல், கர்ப்பிணிக்கு வலி வந்தவுடன் மட்டுமே கொடுக்கப்படும்.

செயல்திறன்:

 

பெரும்பாலான பெண்களுக்கு எபிட்யூரல் கொடுக்கப்பட்டதும் வலியிலிருந்து நிவாரணத்தை உணர்கின்றனர். அவர்களால் அந்த சூழலை சமாளிக்க முடிகிறது. பின்னர் யோனியிலும் ஆசனவாயிலும் அழுத்தம் இருப்பது போல் உணரலாம். முழுவதும் மறத்துவிடுவது நல்லதல்ல, ஏனெனில் பிரசவத்தின் போது எப்போது எங்கே அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தெரியாமல் போகலாம். எப்போதாவது (5%) வலி நிவாரணம் ஒரு பக்கமாக அல்லது ஆங்காங்கே இருக்கலாம். அப்படி நடந்தால் உங்கள் மயக்க மருந்து நிபுணர் அதிக மருந்தளவை தரலாம் அல்லது கத்தீட்டர் நிலையை மாற்றலாம். அதுவும் வேலை செய்யவில்லை என்றால், இந்த செயல்முறை மீண்டும் செய்யப்படவேண்டும்.

 

எபிட்யூரல் எப்போது கொடுக்கப்படக்கூடாது:

 

 • இதய நோயாளிகளுக்கு.
 • குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைகள்
 • கடுமையான இரத்தப்போக்கு அல்லது அதிர்ச்சி கொண்ட நோயாளி
 • முதுகில் தொற்றுநோய்
 • இரத்த தொற்று இருந்தால்
 • நரம்பியல் நோய்
 • முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்த வரலாறு

 

எனவே, எபிட்யூரல் அனெல்ஜெசியா அல்லது அனஸ்தீஷியா என்பது பெண்களுக்கு பிரசவத்தின் போது பயன்படுத்தப்படும் வலியற்ற பிரசவத்தின் மிகவும் பிரபலமான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். நுட்பம் செலவு குறைந்ததாக மட்டுமல்லாமல், பிரசவத்தின்போது தாங்க முடியாத வலியில் இருந்து நிவாரணம்  அளிக்கிறது.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!