20 Mar 2019 | 1 min Read
Baby 360 Degrees
Author | 62 Articles
பல தாய்மார்களுக்கு நடு இரவில் தான் பிரசவவலி ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் உடம்பு இரவில் அமைதியாகவும் ஓய்வில் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். தாய் எவ்வளவுக்கெவ்வளவு அமைதியாக இருக்கிறாரோ அவ்வளவு வேகமாக பிரசவம் ஆகும்.
பிரசவம் தொடங்கும்போது தாய் உறங்கிக்கொண்டிருப்பதால் முதலில் தெரியாது. ஆரம்பத்தில் மாதவிடாயின்போது வயிற்றில் வலி ஏற்படுவது போல் இருக்கும். கீழ் அல்லது மேல் வயிற்றில் இதை உணரலாம். பிடிப்பு போல் அவள் அதை உணரலாம். யோனியில் எந்த திரவமும் வரவில்லையென்றால், வீட்டில் இருக்கலாம். ஏனென்றால் வீட்டில் அவள் அமைதியாக இருக்கக்கூடும்.எனினும், அவள் ஈரமானது போல் உணர்ந்தால் ஆம்னியோடிக் திரவம் கசிந்திருக்கலாம், அல்லது இரத்தக்கசிவு இருக்கலாம். உடனடியாக மருத்துவமனைக்குச்செல்லவும்.
மருத்துவமனைக்கு அழைத்து வரலாமா என்று கேட்டால் மருத்துவர் இந்த மூன்று கேள்விகளை கேட்பார் – எவ்வளவு அடிக்கடி வலி வருகிறது, எவ்வளவு நேரம் இருக்கிறது மற்றும் கசிவு இருக்கிறதா. இதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.
ஃப்ரீக்வன்சி – எவ்வளவு அடிக்கடி வலி வருகிறது, சுருங்கி விரிவதன் காரணமாக ஏற்படும் வலி. இது ஒரு முறை சுருங்கி விரிந்து மறுமுறை சுருங்கி விரிவது வரையிலான நேரம். முதலில், அவ்வப்போது இருக்கலாம் பின் நேரம் செல்லச்செல்ல அதிகரிக்கும்.
ட்யூரேஷன்: அந்த சுருங்கி விரியும் காலம் எவ்வளவு நேரம் நீடித்திருக்கிறது. பிரசவம் தொடங்கும்போது இந்த நேரம் சிறிதாகவும் பிரசவம் நெருங்கும்போது வெகுநேரத்திற்கும் இருக்கும்.
லீக்கிங்: கசிவது, இயற்கையாக னியோடிக் திரவம் வெளிப்படுதல். உங்கள் குழந்தை நோய் கிருமி அற்ற சூழலில் இருக்கும், கசிய ஆரம்பித்தவுடன் உங்கள் குழந்தையும் தொற்றுக்கு ஆளாகலாம். அதனால் தான் மருத்துவர் வலி ஏற்படச்செய்து பிரசவத்தை ஊக்குவிக்கிறார்.
மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் மருத்துவமனைக்கு அனைத்து ரிப்போர்டுகளையும் கவனமாக மறந்துவிடாமல் எடுத்துவைக்கவும். மருத்துவர் அதை கேட்கலாம்.
A