நீங்கள் கவனிக்க வேண்டிய கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள்!

cover-image
நீங்கள் கவனிக்க வேண்டிய கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள்!

எப்போதும்போலல்லாமல் வித்தியாசமாக உணர்வது, என்ன வென்று சொல்லமுடியவில்லை?

வாழ்க்கையை மாற்றக்கூடிய செய்தியாக இருக்கலாம்! தள்ளிப்போன மாதவிடாய் தவிர வேறு ஏதும் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் இருக்கலாம். கவனமாக இருக்கவும். எதையும் தவறவிடவேண்டாம்.

 

1.ஸ்பாட்டிங் மற்றும் வலி:

கருவுற்ற 6-12 நாட்களில், கருவானது கர்பப்பையினில் தானாகவே ஒட்டிக்கொள்கிறது. இது இம்ப்ளாண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பிடிப்புடன் ஸ்பாட்டிங் ஏற்படலாம். பல பெண்கள் இதை மாதவிடாய் தொடங்குவதாக தவறாக எண்ணுகின்றனர். இது நீண்ட நேரம் நீடிப்பதில்லை, லேசாக தான் இருக்கும். சிலருக்கு ஸ்பாட்டிங் இருக்கலாம், சிலருக்கு பிடிப்பு மட்டும் இருக்கலாம், சிலர் எதையுமே உணராமல் இருக்கலாம்.

 

  1. சோர்வு அல்லது பலகீனம்:

இதுவே கர்ப்பத்தின் முதல் அறிகுறியாகும். ஹார்மோன்கள் மாற்றத்தினால் இது ஏற்படுகிறது. சில நேரங்களில் அதிக நேரம் உட்காரவோ அல்லது நிற்கவோ முடியாமல் இருக்கலாம். சில நேரம் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால், குறைந்த இரத்த சர்க்கரை அளவால் இருக்கலாம், இதுவும் சோர்வடைய செய்யும்.

 

  1. குமட்டல் மற்றும் வாந்தி:

காலை நேர நலமின்மை, இது காலையிலோ இரவிலோ ஏற்படலாம் (கருவுற்ற 2-9 வாரங்களுக்கிடையில்). இது மற்றுமொரு கர்ப்பகால அறிகுறியாகும். கர்ப்பத்தின்போது திடீரென ஹார்மோன் மாற்றம் ஏற்படுவதால் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். நீர்சத்துடன் புரதம் நிறைந்த உணவு உட்கொள்ளலாம். சில பெண்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர்களுக்கு குமட்டல் ஏற்படுவதே இல்லை, சிலருக்கு சில நேரங்களில் மட்டும் இருக்கலாம்.

 

  1. மயக்கம்:

சில பெண்களுக்கு கிறக்கமாக இருக்கலாம், சிலர் மயங்கி விழலாம். இது குறைந்த இரத்த அழுத்தத்தினால் கர்ப்பத்தின்போது ஏற்படுகிறது. மருத்துவரிடம் சோதிக்கவும். இரத்த சர்க்கரை அளவு குறைந்திருந்தால், 2-3 மணிநேரத்திற்கு ஒரு முறை சிறு உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். முதல் மூன்று மாதம் முடிந்தவுடல் பல பெண்கள் ஓரளவுக்கு நன்றாக உணர்வர்.

 

  1. மார்பக மாற்றங்கள்:

உங்கள் மார்பகம் கனமாக, மிருதுவாக வலியையும் உணரலாம். உங்கள் மார்பகங்களில் கர்ப்பத்தின் போது ஏற்படும் சுரப்பினால் மார்பகம் வீக்கத்துடன் வலி அல்லது தொட்டால் கூசலாம். மார்பக நுனி பெரிதாகவும் கருப்பாகவும் ஆகலாம். வழக்கமான ஹார்மோன் மாற்றம் தவிர, நீர் தக்கவைப்பால் வீக்கம் ஏற்படும். சரியான ப்ரா அணிந்துகொள்வது அவசியம்.

 

  1. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்:

அடிக்கடி கழிவறைக்கு செல்வது போல் உணரலாம். இது உங்கள் கர்பப்பை வளருவதாலும் அது சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் ஏற்படும் என்றாலும் உங்கள் சிறுநீரகங்கள் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யும்.

 

  1. மலச்சிக்கல்:

ப்ரோஜெஸ்டிரான் என்ற ஹார்மோன், கர்ப்பத்தின்போது மென்மையான தசைகளை அமைதிப்படுத்தும், இதன் விளைவாக ஜீரண அமைப்பு பாதிக்கப்பட்டு, சிறிது ஆற்றல் குறையும். இதனால் உணவானது குடலுக்கு மெதுவாக செல்லும். இதனால் மலச்சிக்கல் மற்றும் வாயு ஏற்படும். இதைத் தவிர, வளரும் கர்பப்பையானது நிறைய இடத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் குடல் இயக்கத்திற்கு சிறு இடமே இருக்கும். மேலும் இரும்புச்சத்துக்கான துணை உணவும் மலச்சிக்கலை தூண்டும். இரும்புச்சத்துக்கான துணை உணவை மாற்றித்தரும்படி மருத்துவரிடம் கேட்கலாம். அதிக நார்சத்து கொண்ட உணவை உட்கொண்டால் மலச்சிக்கல் குறையும்.

 

  1. சுவாசக் குறைவு:

கர்ப்பத்தின்போது உங்களுக்கு நிறைய பிரானவாயு தேவைப்படும். ப்ரோஜஸ்டிரான் ஹார்மோன் அதிகமாவது நுரையீர்லை பாதிக்கும். வளரும் கருவிற்கும் பிரானவாயு அதிகம் தேவைப்படுகிறது. இதனால் சுவாசக்குறைவை நீங்கள் உணரலாம்.

 

இந்த அறிகுறிகள் அனைத்தும் கர்ப்பத்தின் தனித்துவமானது அல்ல. இவை தொடர்ந்தால் மருத்துவரை நாடலாம்.  அதே நேரத்தில், இந்த அறிகுறிகள் இல்லாமல் சில பெண்கள் கர்ப்பமாக இருப்பர்.

 

மாதவிடாய் தள்ளிபோகும்வரை பொருமையாக இருக்கலாம், கர்ப்பப்பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். கர்ப்பம் என்று தெரிந்தவுடன், உங்கள் கர்ப்பகால பராமரிப்பை தொடங்கலாம்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!