உங்களுக்கு தாய்- சேய் நலத்துடன் குழந்தை பிறக்கும் அனுபவத்தை உறுதி செய்ய 9 வழிகள்!

cover-image
உங்களுக்கு தாய்- சேய் நலத்துடன் குழந்தை பிறக்கும் அனுபவத்தை உறுதி செய்ய 9 வழிகள்!

தாய்-சேய் நலத்தை பாதுகாத்தல் இயற்கையாக ஆரோக்கியமாக பிரசவிக்க உதவும். இதனால் தேவையற்ற தீங்குவிளைவிக்கும் மருந்து மற்றும் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம். யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பும் இதை ஊக்குவிக்கிறது.

இந்த கோட்பாடுகளுக்கு இணங்க குழந்தை பிறப்பை அனுபவிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்கும் கைனகாலஜிஸ்ட் / சுகாதார பராமரிப்பு வழங்குனரை நீங்கள் தேடுவதே முதல் வேலையாக வேண்டும்.

 

1.மருத்துவர்கள் பிரசவத்தின்போதும் அதன் பின்னரும் தாய்க்கு குடும்பத்தினர் அளிக்க வேண்டிய ஆதரவினால் ஏற்படும் நன்மைகள் பற்றி குடும்பத்தினருக்கு விளக்கவேண்டும். அவளுக்கு ஆதரவளிப்பது அவளது கணவர், தாய், குடும்பத்தினர், நண்பர்கள், அல்லது உதவியாளராகவும் இருக்கலாம். தாய்க்கு ஆதரவளிப்பவர்களை அனுமதிக்காத பராமரிப்பு வழங்குனர்கள் நிச்சயமாக பாதுகப்பானவர்கள் அல்ல.

 

  1. மருந்தல்லாத வலி நிவாரணி முறைகளை அவர்கள் பரிந்துரைக்கவேண்டும், மேலும் மருந்தில்லாத பிரசவத்தால் தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் வாழ்நாள் முழுவதற்குமான அதன் பலன்களைப் பற்றி தாய்க்கு விளக்கவேண்டும். உதாரணமாக – ஒரு நேர்மறையான ஊக்கமளிக்கும் சூழல், ஹிப்னோ முறையில் பிரசவம், தண்ணீரில் பிரசவம், மசாஜ்ம் அரோமாதெரபி, சூடு ஒத்தடம், அமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சிகள்.

 

  1. அவர்கள் இயற்கையான, சான்று அடிப்படையிலான நடைமுறைகளை ஆதரித்து, தாயின் உடலின் இயற்கை தாளத்தை பின்பற்றுகிறார்கள். எடுத்துக்காட்டு - இயற்கையான (42 வாரங்கள் வரை) பிரசத்தை உற்சாகப்படுத்தவும், பிரசவம் ஆகும் வரை பொறுத்திருக்க ஊக்கப்படுத்துகிறது. உண்ணுதல், குடிப்பது, இயக்கம், ஓய்வெடுத்தல் மற்றும் மிகவும் வசதியான ஒரு நிலையில் பிரசவிப்பது ஆகியவற்றை உற்சாகப்படுத்துங்கள். தாய் பாதுகாப்பாக உணர்ந்தால், ஆதரவு கொடுத்து வசதியான முறையில், பிரசவம் மிகவும் எளிதாக முன்னேறும்.

 

  1. விவேகமானவர்கள் தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ள தேவையற்ற நடைமுறைகளைத் தவிர்க்கின்றனர். உதாரணமாக, கடைசி மூன்று மாதங்களின் சோனோக்ராஃபி, 42 வாரங்களுக்கு முன் பிரசவத்தை தொடங்குவது, செயற்கையாக பிரசவத்தை தூண்டுவது, குறித்தநேரத்தில் பிரசவத்தை தூண்டுவது, யோனி சோதனைகள், எபிசியோடமி, அழுத்தம், நரம்பிற்குள் ட்ரிப் ஏற்றுவது, முதுகுப்புறமாக தட்டையாக படுப்பது போன்றவை.

 

  1. அனைத்து பெண்களுக்கும் தரமான செவிலியர் சேவையை அவர்கள் வழங்குவார்கள். செவிலியர்கள் இதற்கென தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். இவர்கள் சுகபிரசவம் ஆக உதவி செய்வார்கள். போதுமான பயிற்சி பெற்ற செவிலியர்கள் கிடைப்பது கடினம், பொதுவாக மருத்துவமனைகளில் மருத்துவர் சொல்வதையே செவிலியர்கள் பின்பற்றுவர்.

 

  1. நல்ல கைனகாலஜிஸ்ட் தாய்ப்பால் ஊட்ட சிறந்த முறையை பின்பற்றி அதை செயல்முறைப்படுத்துவார். குழந்தை நலமின்றி இருந்தால், தாய் குழந்தையை கங்காரூ போல நெஞ்சில் அனைத்து வைத்து அரவணைப்பை கொடுக்க ஆதரிக்கவேண்டும். மற்ற தாய்மார்களிடம் கேட்டு லாக்டேஷன் கன்சல்டண்டை பார்க்கலாம்.

 

  1. அவர்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட திறமையான அவசர உதவியை வழங்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் பல பெண்கள் தேவையான அல்லது சரியான ஊழியர்கள் இல்லாத மருத்துவமனைகளில் நடைமுறைகள் அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கூடுதலாக, வீட்டில் பிரசவித்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு சரியான ஆதரவோ பின்னூட்ட உதவியோ இல்லை.

 

  1. எனவே, இந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் மருத்துவரை கண்டுபிடிக்கும் வரை தேடலை தொடரவும். வீட்டில் பிரசவிக்க விரும்பினால் சான்றளிக்கப்பட்ட செவிலியரின் துணைகொண்டு தௌலாவை வைத்து ஹிப்னோ முறையில் பிரசவிக்கலாம்.

 

  1. மிக முக்கியமாக, அனைத்து பராமரிப்பு வழங்குனர்களும் பெண்களை மரியாதையுடனும் மனித நேயத்துடனும் நடத்தவேண்டும்.  அவ்வாறு உங்களுக்கு சிகிச்சை வழங்கப்படவில்லையெனில், நீங்கள் சரியான இடத்தில் இல்லை என்று அர்த்தம்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!