ஒவ்வொரு கணவன்மார்களும் தங்கள் கர்ப்பமான மனைவிக்கு உதவ வேண்டிய 10 மோசமான விஷயங்கள்

cover-image
ஒவ்வொரு கணவன்மார்களும் தங்கள் கர்ப்பமான மனைவிக்கு உதவ வேண்டிய 10 மோசமான விஷயங்கள்

நேற்றுதான் 28” ஜீன்ஸ் அவளுக்கு சரியாக இருந்ததுபோல் இருக்கிறது

இன்று அது பத்தவில்லை. அவள் அதைப்பார்த்து கோவப்படும்போது எனக்கு சிரிப்பு வருகிறது, ஆனால் சிரிக்கக்கூடாது.பின் அவள் படுக்கை விளிம்பில் படுப்பதை பார்த்தேன். சோர்வாக…அயர்வுடன்.படுக்கை முழுவதும் அவளுக்கு பொருந்தாத துணிகள். அது அவளை காயப்படுத்தியிருக்கும், ஏனென்றால் திடீறென நிறைய விஷயங்கள் அவளிடத்தில் மாறியிருக்கிறது. தரையிலிருந்து ஒரு பொருளை எடுப்பது அவ்வளவு பிரம்மப்ரயத்தனமாக இருக்கிறது.அப்போது தான் உணர்ந்தேன் அவளுக்கு ஏதாவது செய்யவேண்டுமென. அவளுக்கு தேவையானதெல்லாம் அரவணைப்பு.

 

அவர்கள் அசிங்கமாக இருப்பது போல் உணரலாம், உங்கள் கர்ப்பமான மனைவிக்கு நீங்கள் உதவ சில குறிப்புகள்.உங்கள் கர்ப்பமான மனைவிக்கு உதவ 10 விசித்திரமான விஷயங்கள்.

 

Source: creativebeautyhealth

 

  • 1.உடை அணிந்துகொள்ள உதவிடுங்கள்: இந்த நேரத்தில் உடல் விரைப்புடன் வலி மற்றும் தடுமாற்றமும் இருக்கும். ஆடை அணிய அவருக்கு உதவுவது அவளை மகிழவைக்கும்.

 

  • 2.புரண்டு படுக்க உதவுங்கள்: கேட்க கிறுக்குத்தனமாக இருந்தாலும் காரில் அல்லது கவுச்சில் உட்கார அவளுக்கு ஆதரவு கொடுப்பது நல்லது. தரையிலிருந்து பொருட்களை எடுத்துக்கொடுக்கலாம். குளியலறையிலும் அவளுக்கு உதவலாம்.  • 3.ஷூ/ சாக்ஸ் போட அவளுக்கு உதவலாம்: கால் வீக்கத்தினால் அவள் செருப்பு அணியலாம் அல்லது அது சேராமல் போகலாம். அவளால் ஷூ லேஸ் கட்ட குணிய முடியாமல் போகலாம்.

 

  • 4.கால்களை ஷேவ் செய்ய உதவிடுங்கள்: அவளால் குனிந்து சில இடங்களை அடைய முடியாமல் போகலாம். அந்த நேர போராட்டத்தின் போது ஹார்மோன் படுத்தும்பாட்டால் கோபம் கொந்தளிக்கும். அடிபட்டிருந்தால் கேட்கவே வேண்டாம். இன்னும் மோசம்.


Source: onlymyhealthx

 

  • 5.பெடிக்யூர் செய்து விடலாம்: ஒரு டப் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து அவள் கால்களை அதில் வைத்து மசாஜ் செய்தால் அவள் அதை விரும்பலாம்.

 

  • 6.கர்ப்பத்தின்போது அவள் சாப்பிட ஆசைப்படுவதை வாங்கிக்கொடுக்கவும்: இரவு 2 மணிக்கு சாக்லேட் வேண்டும் என்று அழலாம். அந்த நேரத்தில் கொடுக்க வாங்கி வைத்துவிடுங்கள். இது ஹார்மோனால் ஏற்படுவது.

 

  • 7. அவளின் வாயு தொல்லையை பொருத்திடுங்கள்: திடீரென வாயூ வெளியேறலாம், சத்தமாக. சிரிக்கவேண்டாம். இது அவள் உடலில் ஏற்படும் பல மாற்றங்களால்.

 

Source: acertainkindofwoman.tumblr

 

  • 8. மார்பகங்களிலிருந்து வரும் கசிவு: மார்பகங்கள் கசிவது குழந்தை பிறப்பின் அறிகுறியாகும். இதை அவள் கவனிக்காமல் இருக்கலாம். நீங்கள் அதை கவனித்து அவளிடம் சொல்லலாம்.

 

  • 9. படுக்கையில் புதுமையை புகுத்தலாம்: இந்த நேரத்தில் உடலளவில் இருவருக்கும் இடைவெளி வந்தது போல் உணரலாம். யோசித்திடுங்கள், கொஞ்சுவது, அணைத்துக்கொளவது போன்றவை அவளுக்கு ஆறுதல் அளிக்கும். அவளால் இந்த நேரத்தில் சமநிலையில் இருக்க முடியாது அதனால் அவளுக்கு உதவும் வகையில் நடந்து கொள்ளலாம்.

 

  • 10. மகப்பேறுக்குப் பின்னும் அவளுக்கு உதவவும்: இது குழந்தையை பார்த்துக்கொள்வது பற்றி அல்ல. மகப்பேறுக்கு பின் அவள் உணர்வுப்பூர்வமாக சோர்வாக உணரலாம். மகப்பேறுக்கு பி தையலின் வலி மற்றும் இரத்தக்கட்டினால் அவள் அவதியுரலாம். அதனால் அவள் மீண்டு வர அவளுக்கு உதவலாம்.கர்ப்பம் என்பது உங்கள் மனைவியின்  வயிற்றை தடவுவது மட்டுமல்ல. அவள் மனமுடையும்போதும் கடினமான சமையங்களில் அவளுக்கு உதவுவதில் தான் உள்ளது. அவள் உங்களிடம் உதவி கேட்க மாட்டாள் நீங்களாகதான் பார்த்து செய்யவேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!