மகப்பேறிலிருந்து மீண்டு வருகிறீர்கள் – அறுவை சிகிச்சையில் பிறப்பு

cover-image
மகப்பேறிலிருந்து மீண்டு வருகிறீர்கள் – அறுவை சிகிச்சையில் பிறப்பு

உங்களுக்கு திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை அல்லது கடைசி நேரத்தில் திடீரென முடிவெடுக்கப்பட்ட சிசேரியனாக இருக்கலாம். எதுவாகினும், வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு தருணத்தை கடந்திருப்பீர்கள் – பொறுப்பான தாயாக!

 

உங்களுக்கு திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சையாக இருந்தால் மனதளவிலும் உணர்வுப்பூர்வமாகவும் நீங்கள் தயாராக முடியும் என்றாலும் கடைசி நேர சிசேரியன் என்றால் நினைத்தது போல் நடக்கவில்லை என்று மனம் தளர்ந்துவிடும்! அது இயற்கையே.எதுவாக இருந்தாலும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். இது தாய் மற்றும் சேயின் நலத்திற்காகவே மேற்கொள்ளப்படுவதாகும். ஆரோக்கியமான சந்தோஷமான குழந்தை தானே நமது குறிக்கோள்!

 

அறுவைசிகிச்சைக்கு பின் நீங்கள் எதிப்பார்க்கவேண்டியவை மற்றும் சீக்கிரம் குணமாவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

 

  • மகப்பேறுக்கு பின் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். அறுவை சிகிச்சை 30 – 45 நிமிடங்கள் எடுக்கும். உங்களுக்கு நிறைய வலி நிவாரணி கொடுக்கப்பட்டிருக்கும். அமைதியாக மருத்துவர் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
  • 24 மணிநேரத்திற்கு அப்படியே படுத்து இருக்குமாறு மருத்துவர் கூறுவார். சிறுநீர் கழிக்க ஒரு கத்தீட்டரும், ஐவி ஊட்டமளிக்கவும் போடப்பட்டிருக்கும்.
  • 24 மணிநேரத்தில், செவிலியர் உங்களை மெல்ல நடக்கச்சொல்வார்கள். இது மீள உதவும், கடினமாக இருந்தாலும் சிறிது முயற்சித்து நடக்கவும்.
  • வாய்வழியாக உணவோ அல்லது தண்ணீரோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சைக்கு பி 12 மணி நேரம் கழித்து தண்ணீர் எடுத்துக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார். 24 மணி நேரத்தில் நீர்த்த உணவும் 48 மணி நேரம் கழித்து முழு உணவும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள்.
  • அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்தவர்களுக்கென தனித்துவமான வயிற்றுக்கு ஆதரவு கொடுக்கும் பெல்டுகள் உள்ளன. நீங்கள் சிரிக்கும்போது, இருமல் அல்லது தும்மும்போது இது உங்கள் தையலுக்கு ஆதரவாக இருக்கும்.
  • முடிந்தவரை கனுக்கால் மற்றும் கால் தசைகளுக்கு நீட்டி நெளிக்கும் பயிற்சியை அளிக்கலாம். இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் மேலும் இரத்தக்கட்டு ஏற்படுவதை தவிர்க்கும்.
  • செவிலியர் உதவியுடன் கண்டிப்பாக தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுங்கள். அறுவை சிகிச்சையின்போது கொடுக்கப்பட்ட மருந்துக்களால் தாய்ப்பால் பாதிக்கப்படுவதில்லை.
  • உங்களுக்கு போடப்பட்ட தையல் குணமாக 3-4 வாரங்கள் எடுக்கலாம். அதிக சிட்ரிக் தன்மை கொண்ட உணவுகளை இந்த காலத்தில் உண்பதை தவிர்க்கவும். மற்ற உணவுகள் மிதமாக எடுத்துக்கொள்ளலாம்.
  • அறுவை சிகிச்சை செய்து ஒரு மாதம் கழித்து பெரும்பாலான தாய்மார்கள் மெதுவாக நடக்க தொடங்கிவிடுவார்கள். சிறிது உடற்பயிற்சியும் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யலாம்.

 

கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் நீங்களும்  உங்கள் குழந்தையும் மீண்டு வருவதுதான். குடும்பத்தினர் நண்பர்களிடமிருந்து தேவையான உதவியை பெற்றிடுங்கள் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம், தவறில்லை.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!