22 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கே.கர்ப்பகாலத்தின்போது எவ்வளவு எடை அதிகரிக்க வேண்டும், மேலும் கடைசி மாதத்தில் எவ்வளவு எடை கூடியிருக்கவேண்டும்? கடைசி மாதத்தில் எவ்வளவு கூடும்?
ப. உங்கள் உயரம் மற்றும் உங்கள் பி எம் ஐ க்கு ஏற்றவாறு எடை அதிகரிக்கவேண்டும். 10-14 கிலோ அதிகரிக்கலாம். ஒன்பதாவது மாதத்தில் 1.5 முதல் 2 கிலோ எடை அதிகரிக்கலாம்.
கே. நான் தற்போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் இருக்கின்றேன். எந்த உணவுகளை நான் சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது?
ப. ஆரோக்கியமான சமச்சீரான உணவை உண்ணுங்கள். சில நேரங்களில் அதிக உணவு எடுத்துக்கொள்வது கடினமாக இருக்கும் அல்லது பிடிக்காமல் இருக்கலாம். அதனால் சிறிது சிறிதாக ஆரோக்கியமான சிற்றுண்டியை சாப்பிடலாம். இந்த நேரங்களில் பழங்கள், டோஸ்ட், அவித்த காய்கறிகள் மற்றும் சில்லென்ற உணவுகள் சாப்பிட நன்றாக இருக்கும்.
கே. ஒரு தாய்க்கு என்ன சாப்பிடுவதென்று எப்படி தெரியும்? உதாரணமாக, பப்பாளி சாப்பிடக்கூடாது என்று சொல்வர். இது கதையா அல்லது உண்மையா? இதனால் என்ன ஆபத்து நேரிடும்?
ப. மது மற்றும் போதை பொருட்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. புகைப்பிடிப்பதையும் புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பதையும் தவிர்க்குமாறு நாங்கள் பரிந்துரைப்போம். மென்மையான சீஸ், பதப்படுத்தாத பால், பச்சை முட்டை, பச்சை மீன், சிப்பி கொண்ட சுஷி மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். சிறிதளவு பழுத்த பப்பாளி சாப்பிடலாம்.
கே. சரியான் உணவு உட்கொள்வதால் காலை நேர நோய் குறையுமா? அப்படியென்றால் என்ன உணவு எடுத்துக்கொள்வது?
ப. காலை நேர சுகவீனம் ஹார்மோன்களால் ஏற்படுபவை. இதை சரிசெய்ய கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக: உலர் டோஸ்ட், ரொட்டி, க்ராக்கர்கள். சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.
கே. பிரசவத்திற்கு பின் எப்போதிலிருந்து தாய் கால்சியம் கொண்ட துணை உணவினை எடுத்துக்கொள்ளலாம்? அதை தொடரவேண்டுமா? வைட்டமின் பி மற்றும் டி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாமா?
ப. கால்சியம் துணைஉணவுகள் பிரத்யேகமாக பாலூட்டும் சமையத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
கே. கர்ப்பகாலத்தில் டையட் இருக்கலாமா ஏனென்றால் நான் எடை அதிகரித்துவிட்டேன். நான் இப்போது இரண்டாவது மூன்று மாதத்தில் இருக்கிறேன். மிகவும் கவலையாக உள்ளது. எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. கர்ப்பகாலத்தில் என் எடையை நிர்வகிக்கும்படியான எந்த உணவை நான் எடுத்துக்கொள்வது?
ப. கர்ப்பகாலத்தில் உணவை கட்டுப்படுத்துவது நல்ல யோசனை அல்ல. எனினும், சரியான உணவை எடுத்துக்கொள்ளவேண்டும் அதோடு வறுத்த மற்றும் சர்க்கரை அதிகமுள்ள சிற்றுண்டிகளை தவிர்க்கவேண்டும். மிதமான அளவில் சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ளலாம். தைராய்டு மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தது போல் தயவுசெய்து எடுத்துக்கொள்ளவும். சோயா, வேற்கடலை, வால்நட்டுகள் முடிந்தால், காலிஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றை தவிர்க்கவும்.
கே. எனக்கு 32 வயதாகிறது, நான் கர்ப்பத்தின் 30 வது வாரத்தில் இருக்கின்றேன். எனக்கு தைராய்டு இருக்கிறது. கர்ப்பபை வாய் சிறிது திறந்து இருப்பதால் மருத்துவர் என்னை முழுவதும் படுக்கையில் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். குறைப்பிரசவம் ஆகிவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. எனது எடையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் நான் ப்ரோடீன் கொண்ட பழங்கள் மற்றும் உலர் கொட்டைகளை சாப்பிட தொடங்கிவிட்டேன். இது போதுமா?
ப. முதலில் அமைதியாக மன அழுத்தம் இல்லாமல் இருங்கள், அப்படி இருப்பது கர்ப்பத்தின் போது நல்லதல்ல. உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றவும். குழந்தை நன்றாக வளர்ந்து மருத்துவர் ஏதும் கவலைப்படும்படி சொல்லவில்லையெனில் எடை கூடுவதை பற்றி கவலை கொள்ளவேண்டாம்.
கே. நான் கர்ப்பமாக இருக்கிறேன். இப்போதெல்லாம் எனக்கு சளி மற்றும் இருமல் இருக்கிறது, இதனால் அறுவை சிகிச்சையின்போது எனக்கு சிக்கல் ஏற்படுமா. வெதுவெதுப்பான நீர், தேன், இஞ்சி போன்ற வீட்டு வைத்தியத்தை பின்பற்றுகிறேன். முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது பிரச்சனை இருந்ததால் சில்லென சாப்பிடுவதை தவிர்க்கிறேன். எனக்கு உதவுமாறு ஏதாவது பரிந்துரைக்கமுடியுமா. அதேபோல் கர்ப்பகாலத்தில் க்ரீன் டீ அருந்தலாமா?
ப. கஃபீன் இருப்பதால் க்ரீன் டீயை தவிர்க்கலாம். உங்களுக்கு வரட்டு இருமல் இருந்தால் பூண்டும் தேனும் முயற்சிக்கலாம். மற்றொரு வீட்டு வைத்தியமானது வெதுவெதுப்பான நீரில் சிறிது மஞ்சள் மற்றும் கருமிளகு சேர்த்து அருந்துவது.
கே.நான் இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்க்கிறேன். 22 வாரத்தில் ஓஜிசிடி சோதனை செய்யப்பட்டு அதில் என்னுடைய சர்க்கரை அளவு 145 ஆக இருந்தது. 10 நாட்களுக்கு எனக்கு உணவு முறையை கூறி அதை பின்பற்றுமாறும் அதன் பின் மீண்டும் சோதனை செய்ய மருத்துவர் கூறியுள்ளார். அதிக சர்க்கரை அளவு இருக்க என்ன காரணம். சோதனை செய்வதற்கு முந்தைய நாள் நான் பெரிய சாக்லேட் சாப்பிட்டேன். அதுதான் பிரச்சனையா?
ப.சில நேரங்களில் சர்க்கரை அளவுகள் உயர்ந்தால், இது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக இருக்கலாம். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டபடி சிக்கலான கார்ப்கள் மற்றும் நல்ல தரமான புரதங்களுடன் சமநிலையான உணவை தொடரவும், சோதனை மீண்டும் செய்யவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சரியான உணவுடன் GD கட்டுப்படுத்த முடியும். உங்கள் கர்ப்பம் முழுவதும் உண்ணும் முறைகளில் சமச்சீர் உணவு உட்கொள்ளுதல் நல்லது. நீங்கள் இனிப்பு சாப்பிட்டாலும் சிறிய அளவில் உட்கொள்ளவும். இறைச்சி நல்ல தரமான புரதமாக கருதப்படுவதால் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
கே. என் அனாமலி ஸ்கேனில் குழந்தையின் லேட்ரல் வெண்ட்ரிக்கல் சிறிதளவு பெரிதாகியிருப்பதாக காட்டுகிறது. இந்த ஸ்கேனை மீண்டும் செய்யுமாறு கூறுகிறார்கள். நான் ஆராய்ந்ததை வைத்து பார்க்கையில் சிறிது நாள் கழித்து இது சரியாகிவிடலாம். கவலைக்கொள்ளவேண்டாம் என்று என் மருத்துவரும் கூறுகிறார். அடுத்த ஸ்கேன் எடுக்கும் வரை எனக்கு கவலையாக உள்ளது
ப. உத்தரவாதம் கிடைக்காத வரை நீங்கள் கவலைப்படுவது இயற்கை. சிறிதளவு பெரிதாகியிருப்பது பொதுவாக மூன்றாவது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும்.
A