22 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
அறிமுகம்: பிசியோதெரபிஸ்ட் மற்றும் குழந்தை பிறப்பு கல்வியாளர், ரிதி கதாரியா கர்ப்பகாலத்தின் போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிய பயங்களை தாய்மார்களுடன் கலந்து பேசி அதை தெளிவித்தார்.
கே. பிரசவ வலி தொடங்க ஆரம்பித்ததும் மருத்துவமனை செல்ல சரியான நேரம் எது?
உங்களுக்கு பிரசவ வலி தொடங்க ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு செல்ல பின்வரும் காரணங்களில் ஏதேனும் ஒன்று இருக்கலாம் – 1) உங்களுக்கு வலியானது 30-45 நிமிடங்களுக்கு ஒருமுறை குறைந்தது நிமிடம் நீடிக்கும் படி இருந்தால். 2) உங்களுக்கு இரத்தப்போக்கு அல்லது யோனி வெளியேற்றம் பழுப்பு நிறத்தில் இருந்தால். 3) உதைப்பதை நீங்கள் உணரும்போது, எனினும் வீட்டில் சமாளிக்க உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் மருத்துவமனைக்கு செல்லலாம்.
கே. நான் கர்ப்பமாகி 30 வாரங்கள் ஆகின்றன. இரு சக்கர வாகனத்தில் சிறு தூரத்தை கடக்க பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
மூன்றாவது மூன்று மாதங்களில் இரு சக்கர வாகனத்தை தவிர்ப்பது நல்லது. சிறிது தூரம் செல்ல நடைப்பது சிறந்தது.
கே.நான் கர்ப்பமாகி 38 வாரங்கள் ஆகின்றது. எனக்கு ஏதோ வலி ஏற்படுகிறது, மேலும் பெரிய அளவில் திரவம் வெளியேறவில்லை, நான் என்ன செய்வது? என் அடிவயிற்றில் பாரமாக உணர்கிறேன். என் கைனகாலஜிஸ்ட் மூன்று நான்கு முறை விரல்களை உள்ளே விட்டு சோதனை செய்துள்ளார். இது பாதுகாப்பானதா?
இந்த வலி முதுகு அல்லது யோனி அல்லது அடிவயிற்றை சுற்றி உள்ளது என்றால், இது சாதாரனமானதே. இது குழந்தையின் தலையின் நிலை மற்றும் அழுத்தத்தினால் ஏற்படுவதாகும். உங்கள் அடிவயிற்றில் இருக்கும் பாரமான உணர்வு சில காரணங்களால் இருக்கலாம். அடர்த்தியாக வெள்ளையான திரவம் வருவது இயற்கையே. எனினும் அது நீர்த்து, தெளிவான வெள்ளை அல்லாத வேறு நிறத்தில் இருந்தால், சரிபார்த்துக்கொள்வது நல்லது. கைனகாலஜிஸ்ட் அவ்வாறு செய்வது பரவாயில்லை. அவர் செர்விக்ஸ்-ஐ (கருப்பையின் வாய்) சோதித்து குழந்தை தலையின் நிலை எவ்வாறு உள்ளது மேலும் எப்போது பிரசவ வலி ஏற்படலாம் என்பதை அறிந்து உங்களுக்கு உதவவே அவ்வாறு செய்கிறார்.
முதுகு, யோனி அல்லது அடி வயிற்றில் ஏதேனும் வலி அல்லது அசௌகரியத்தை நீங்கள் உணர்ந்தால், எழுந்து நடக்கலாம். வலி குறைந்தால் அன்றாட வேலையை தொடரலாம், அல்லது நீடித்தால் அல்லது அப்படியே இருந்தால் அல்லது அதிகரித்தால், மருத்துவரிடம் செல்லலாம்.
கே என் OS மூடி, தலை-1 நிலையில் உள்ளது. இதன் அடிப்படையில் குழந்தையை பிரசவிப்பேன் என்று நீங்கள் கூறமுடியுமா?
குழந்தை, கர்ப்பப்பை மற்றும் உடம்பு பிரசவத்திற்கு தயாரானதும் வலி ஏற்படுகிறது. குழந்தை தலையின் நிலை மற்றும் கர்ப்பப்பை வாயின் நிலை ஆகியவற்றை வைத்து மட்டும் நாம் பிரசவத்தை கணிக்க முடியாது. பாரமாக உணர்வது அல்லது யோனியில் வலி, குழந்தை உதைப்பது போன்றவை அறிகுறிகளாகும்.
கே.நான் இரண்டாவது மாடியில் வசிக்கிறேன். தினமும் மாடிப்படி ஏறி இறங்குகிறேன். இது பாதுகாப்பானதா? இது தவிர்க்க முடியாது என்றாலும் எனக்கோ குழந்தைக்கோ ஆபத்தை ஏற்படுத்துமா என்று நான் அறியவேண்டும்?
கர்ப்பகாலத்தில் படி ஏறுவது நல்ல உடற்பயிற்சி. மூச்சு தினறல் இல்லாத வரை இது பாதுகாப்பானதே. படி ஏறும் போது மூச்சுத்தினரல் இருந்தால், வாய்வழியாக மூச்சு விடவும் (பிறந்தநாளின்போது மெழுகுவர்த்தியை ஊதுவது போல்) சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் ஏறவும்.
கே.குழந்தை பிரசவமாக போகிறது என்பதை நாம் எப்போது, எப்படி தெரிந்துகொள்வது?
பாரமாக இருப்பது அல்லது முதுகில் அல்லது யோனியில் வலி, தொடர்ந்து அல்லது நாள் பொழுதில் பெரும்பாலான நேரத்தில், குமட்டல் அல்லது வாந்தி, அடிக்கடி முதுகு வலி, மனநிலையில் மாற்றம், வலி அல்லது யோனியில் இழுக்கும் உணர்வு, மாதவிடாய் நேரத்தில் இருப்பது போல் வயிறு பிடிப்பது ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.
பிரசவத்திற்குப் பின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யலாமா?
ஆம். கர்ப்பத்தின் 36 ஆவது வாரம் கடந்த பின் உங்கள் கைனகாலஜிஸ்ட்டுடன் குடும்ப கட்டுப்பாடு பற்றி கலந்தாலோசித்து, பின் அதற்கேற்ற நேரம் அமையும் போது செய்து கொள்ளலாம்.
கே. நான் கர்ப்பத்தின் 36 வது வாரத்தில் இருக்கிறேன். கால் வீக்கத்திற்கு மருந்து ஏதும் பரிந்துரைக்கமுடியுமா?
36 வாரங்களுக்கு மேல் கால் வீக்கம் இருப்பது குழந்தையின் தலை கொடுக்கும் அழுத்தத்தினால் பாதிக்கப்படும் சுழற்சியின் காரணமாக இருக்கலாம். இதற்கான சில நிவாரண முறைகள் – 1) தூங்கும்போது அல்லது உட்காரும்போது காலுக்கடியில் தலையனை வைத்து காலை அதன் மேல் தூக்கி வைத்த நிலையில் இருக்கவும். 2) நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையோ அல்லது நிற்பதையோ தவிர்க்கவும். 3) திரவமாக உட்கொள்வதை அதிகரிக்கவும் அதே நேரத்தில் உப்பு எடுத்துக்கொள்ளும் அளவையும் சரிபார்த்துக்கொள்ளவும். 4) குளிர்ந்த முட்டைகோஸ் இலையை மஸ்லின் துணிகொண்டு மூடி அதை பாதத்தில் வைத்து குளிரை நீங்கள் உணரும் வரை கட்டிக்கொள்ளலாம். 5) வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு சேர்த்து அதில் உங்கள் பாதத்தை முக்கி வைக்கலாம்.
கே.என் 5 ஆவது மாத ஸ்கேன் படி எனக்கு குறைந்த நஞ்சுக்கொடி இருந்தது. மருத்துவர் என்னை 7 வது மாதம் வரை காத்திருக்கச்சொன்னார். எந்த மாற்றமும் இல்லையென்றால் சுகப்பிரசவம் ஆக வாய்ப்புண்டா??
5 ஆவது மாதத்தில் நஞ்சுக்கொடி கீழிறங்கி இருப்பது பரவாயில்லை. குழந்தை வளர வளர அதன் நிலை உயரும் அல்லது சரியான நிலைக்கு வரும். உங்கள் நஞ்சுக்கொடி சரியான நிலைக்கு வருவதற்கு, நீங்கள் முன்பக்கம் குனிவதை தவிர்க்கவும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் அதோடு மன அழுத்தத்தை குறைக்கவும். சுகப்பிரசவத்தை பொறுத்தவரை, பிரசவ வலி ஏற்படும் வரை யாராலும் அதை கணிக்க முடியாது. இப்போதே பிரசவத்தைப்பற்றி கவலை கொள்ளவேண்டாம். 39 வாரம் வரை நிறைய மாற்றங்கள் இருக்கும்.
கே. ஒரு சிசேரியனுக்கு பிறகு அடுத்த பிரசவம் சுகப்பிரசவமாக இருக்கும் வாய்ப்பு குறைவு என்பது உண்மையா?
ஒரு சிசேரியனுக்கு பிறகு அடுத்த பிரசவம் சுகப்பிரசவமாக இருக்கும் வாய்ப்பு குறையாது. ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது அதனால் 9 மாதங்கள் கர்ப்பம் எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்தே ஒவ்வொரு பிரசவமும் இருக்கும்.
கே.நான் கர்ப்பமாகி 25 வாரங்கள் ஆகின்றது, இப்போதிலிருந்து சில உடற்பயிற்சிகளை தொடங்கலாமா?
கர்ப்பமாகி 14 வாரங்கள் முதலே உடற்பயிற்சிகளை தொடங்குவது சிறந்தது. முதல் மூன்று மாதங்களில் ஸ்பாட்டிங் அல்லது இரத்தக்கசிவு இருந்தால் 20 வாரத்திற்கு மேல் எடுக்கப்படும் அனாமலி ஸ்கேன் செய்தபிறகு தொடங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், உடற்பயிற்சியை தொடங்கும்முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். நடைப்பயிற்சியை தவிர்த்து இரண்டாவது மூன்று மாதத்தில் வாரத்திற்கு மூன்று முறையும் மூன்றாவது மூன்று மாதத்தில் வாரத்திற்கு 5 முறையும் செய்யலாம்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.