நீங்கள் “கர்பா சன்ஸ்கார்” பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

cover-image
நீங்கள் “கர்பா சன்ஸ்கார்” பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

’கர்ப்பா’ என்பதற்கு கர்ப்பப்பை, ‘சன்ஸ்கார்’ என்பது மதிப்புள்ள கல்வி என்றும் பொருள்படும். அதனால் ‘கர்ப்பா சன்ஸ்கார்’ என்பது கருப்பைக்குள் கல்வி என்ற அர்த்தம் கொள்கிறது.

 

இதன் பின்னால் இருக்கும் உண்மைகள்:

 

  • இந்திய வரலாறு:

 

நமது ஆயுர்வேதத்தில், ‘சுப்ரஜா ஜனன்’ என்று அழைப்பர், இதில் தம்பதியர் குழந்தைக்கு எந்த விதமான கல்வியை பயிற்றுவிப்பது என்பதை முன்னமே திட்டமிடலாம் (துல்லியமாக மூன்று மாதங்கள் முன்கூட்டியே). ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்பது நல்ல மனநிலையில் – உணர்வுப்பூர்வமாக, தெய்வீகமாக மற்றும் உடல் ரீதியாக இருப்பது. இது பல காலமாக பாரம்பரியமான இந்திய குடும்பங்களில் கடைபிடிக்கப்படுகிறது, ஆனால் இப்போது மேற்கு நாடுகளும் இந்த கலாசாரத்தை வெகுவாக பின்பற்றி வருகின்றனர்.

 

  • இதன் பின்னால் இருக்கும் அறிவியல்:

 

குழந்தையின் 60% மூளை தாயின் கருவில் அவன்/அவள் இருக்கும்போதே வளர்கிறது. தாயின் மனநிலைப்படியே குழந்தையின் மூளை வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தாய் அவள் மனதுக்கு பிடித்தவாறு படிப்பதுபோலான காரியங்களை செய்து மகிழ்ச்சியாக இருந்தால், அது சிசுவிற்கும் போய்ச்சேர்கிறது.

 

  • புராண கதைகள்:

 

'கர்ப்பா சன்ஸ்கர்' தொடர்பான இந்திய புரான கதைகள் நிறைய இருக்கிறது. புகழ்பெற்ற மகாபாரதத்தில் இளவரசன் அபிமன்யுவின் கதை புகழ் பெற்றது. அர்ஜுனரின் மனைவி மகன் அபிமன்யுவை கர்ப்பத்தில் சுமந்திருந்தார். ’சக்கரவியூகம்’ (போரில் எதிரிகளால் படை வீரர்கள் ஏற்பாடு செய்யப்படுவது) ஊடுருவிச் செல்வதற்கான மூலோபாயத்தை அர்ஜூனர் அவரிடம் கூறுகிறார். அவர் வெளியேறும் செயல்முறையினை விவரிக்கும் போது அவர் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அபிமன்யு, இளவரசரானதும் ’சக்கரவியூகம்’  இருக்கும் போர் சூழ்நிலையில் இருந்தார். இந்த நுட்பத்தைப் பற்றி முறையான பயிற்சி இல்லாவிட்டாலும், அவர் அதை கண்டுபிடித்து விட்டார், ஆனால் எப்படி வெளியேற வேண்டும் என்று தெரியவில்லை, (அவரது தாயின் வயிற்றில் கூட அரை கதையை மட்டும் கேட்டிருந்தார்) அதனாலேயே பிடிபட்டார்.

இது எப்படி வேலை செய்கிறது?

 

  • பிறக்காத குழந்தையுடன் தொடர்பாடல் / இணைப்பு:

 

தாய் மற்றும் குழந்தைக்கு இடையே உள்ள நேரடி தொடர்பு தொப்புள் கொடியாகும். தாயுடன் தொடர்பு கொள்வது குழந்தையுடன் தொடர்பு கொள்வது போல். மன வளர்ச்சி பொருத்தமட்டிலும் கூட அந்த ஒன்பது மாதங்கள் மதிப்பில்லாதவை. உணர்ச்சி, பசி, உணர்வுகள், மன அழுத்தம் எல்லாமே தாயிலிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு செல்கிறது. தாய் தன் குழந்தையிடம் பேச கையினை அவளின் தொப்பையில் வைத்து தடவியபடி அவன்/அவளிடம் பேசலாம். இது அற்புதத்தை செய்யும், நம்புங்கள். இதை தாய் –சேய் பிணைப்பு என்றும் கூறலாம்.

 

  • சத்வ குணம்:

 

தாய் கருவுற்றது முதல் நல்ல குணங்களை (’சத்வ குணம்’) குழந்தைக்கு புகட்டலாம். கருவிலிருக்கும் சிசுவிடம் கருனை, பெருந்தன்மை, உன்னதமான, கண்ணியமான, அன்பான, அக்கறையுடனான, பகிர்வு போன்ற உங்களுக்கு பிடித்த அத்தனை பற்றியும் ஒவ்வொரு நாளும் பேசலாம்.

 

  •  'கர்பா சன்ஸ்கர்'இன் மூன்று M

 

இசை, மந்திரம் மற்றும் தியானம்/Music, Mantra, Meditation

 

இனிமையான இசையை கேட்பது குழந்தையை இயற்கையிலேயே அமைதியாக்கும். இது தாய் மற்றும் கருவிலிருக்கும் குழந்தைக்கு நிறைய நிம்மதி தருகிறது. நீங்கள் பக்தி மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளைச் சிந்திப்பதன் மூலம் தானாகவே 'சத்வ குணத்தை' வழங்குகிறீர்கள். இது தாயின் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை தடுக்க உதவுகிறது. கர்ப்பத்தில் குழந்தைக்கு எதிர்மறையான எண்ணங்கள் நல்லதல்ல - இது அவர்களுக்கு பயம் மற்றும் பதட்டம் ஆகிய உணர்வுகளைக் கொடுக்கிறது, அவர்கள் இந்த உலகில் வந்ததும், அவை சேர்ந்து கொள்கிறது. தியானம் மனதையும் உடலையும் தளர்த்த உதவுகிறது, தாயையும்  குழந்தையையும் கவனம் செலுத்துவதன் மூலம் தாய்க்கு வலுவான மனநிலையுடன் பிரசவத்திற்கு தயார்படுத்துகிறது.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!