25 Mar 2019 | 1 min Read
Sonali Shivlani
Author | 213 Articles
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்களுடன் யோனி வழியாக குழந்தை பெற்ற பெண்களை ஒப்பிடுகையில் சிறுநீர் அடக்கமுடியாமை பின்னவருக்கு அதிகம் இருக்கிறது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சிறந்தது என்பது இதற்கு அர்த்தமல்ல. சிறுநீர் அடக்க முடியாமையை பற்றி உண்மை உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை கையாள பல்வேறு வழிகள் உள்ளன. அதைப் பற்றி அறிய பின்வருவதை படிக்கவும்…
சிறுநீர் அடக்க முடியாமை என்றால் என்ன?
உங்கள் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழக்கும்போது சிறுநீரை அடக்க இயலாமை ஏற்படுகிறது, இது மகப்பேற்றுக்குப்பின் 50% பெண்களை பாதிக்கும். இது சிறிதளவே ஆன கட்டுப்பாடில்லாத கசிவுதான், எனினும் இது எல்லா நேரத்திலும் ஏற்படக்கூடாது. இது வருடத்திற்கு ஒரு சில முறை மட்டுமே கூட ஏற்படலாம். இரண்டு வகையான அடக்கமுடியாமை உள்ளன.
தும்மல், இருமல், சிரிப்பது அல்லது குதிப்பதால் முதலாவது வகை ஏற்படுகிறது. இது ஸ்ட்ரெஸ் இன்காண்டினென்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பப்பை கனமாகி சிறுநீர் பையை அழுத்துவதால் மூன்றாம் மூன்று மாதம் முதலே சில பெண்கள் அனுபவிப்பர். கூடுதலாக உங்கள் திசுக்கள் மற்றும் மூட்டுகள் உங்கள் உடலை பிரசவத்திற்கு தயார்படுத்தி மிகவும் மீள்தரும் வகையில் உருவாக்கும் ஹார்மோன்கள் உள்ளன, இதனால் சிறுநீர்ப்பை அதன் ஆதரவை இழக்கிறது.
இரண்டாவது வகை அடக்கமுடியாமை என்பது உங்கள் சிறுநீர் பை செயலில் இருக்கும்போது அதாவது நடைமுறையில் உங்களுக்கு மிகவும் அவசரமாக கழிவறை பயன்படுத்தவேண்டிய சூழலில் உள்ளே செல்லும் முன் கசிவது. இது அர்ஜ் இன்காண்டினன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.அழைக்கப்படுகிறது.
பிரசவத்திற்கு பின் அழுத்தம் மற்றும் அவசரத்தால் அடக்கமுடியாமை இரண்டையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
எனக்கு நானே உதவிக்கொள்ள என்ன செய்வது?
சிசேரியன் செய்துகொள்வது அதற்கான விடையல்ல, ஏனென்றால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்த சில பெண்கள், வாழ்நாளில் பின்னர் வேறு பல சிக்கல்களால் அவதிப்படுவர். உங்கள் இடுப்பெலும்பு தசைகளை கர்ப்பத்தின்போதும் அதன் பிறகும் வலுவடையச் செய்வது பற்றி யோசிக்க வேண்டியது முக்கியம்.
வயிற்றையும் புட்டத்தையும் பிரசவத்திற்கு பிறகு வலுவாக்க பல பெண்கள் கெகில் (Kegel) பயிற்சியை மேற்கொள்ளலாம். கெகில்ஸ், சரியாக செய்தால் அழுத்தம் மற்றும் அவசரத்தால் ஏற்படும் அடக்கமுடியாமையை குறைக்கலாம். நான்காவது மாதம் தொடங்கி பிரசவத்திற்கு பிறகும் கெகில் செய்வதை தொடரலாம்.
ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பிரச்சனை தொடர்ந்தால் அல்லது உங்கள் தினசரி செயல்பாடுகளை உங்களால் செய்ய முடியவில்லை எனில் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை பெறலாம்.
A