கர்ப்ப காலத்தில் எடை இழப்பது இயல்பானதா?

cover-image
கர்ப்ப காலத்தில் எடை இழப்பது இயல்பானதா?

கர்ப்பமாக இருந்தால் சிறிது எடை உயர்வது இயற்கையானது, அதற்கு பதிலாக எடைகுறைந்தால்? முதல் முறையாக நீங்கள் தாயாகிறீர்கள் என்றால், எடைகுறைவது உங்கள் அச்சப்பட அல்லது குழப்பலாம். ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது – தாய்மை அடையும்போது எடை குறைவது இயல்பே, எனினும் கர்ப்பத்தின் எந்த நிலையில் என்பதை பொறுத்தே.

 

கர்ப்பத்தின் எந்த நேரத்தில் எடையை இழப்பது இயல்பானது?

 

கர்ப்பத்தின்போது 10-12 கிலோ எடை கூடவேண்டுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான எடையானது குழந்தை, இரத்தம், திசுவின் திரவங்கள் மற்றும் உடம்பில் சேரும் கொழுப்பு. இந்த எடை அதிகரிப்பு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலிருந்து தொடங்கும். ஆனால் உங்களுக்கு குமட்டல், காலை நேர நலமின்மை போன்றவை இருந்தால், எடை அதிகரிக்காமல் மாறாக எடையை இழக்கலாம்.

 

கர்ப்பத்தின்போது எடை இழப்பது பொதுவானதே, முக்கியமாக முதல் மூன்று மாதங்களில். முன்னர் அதிக எடை கொண்ட பெண், அவளின் அதிகப்படியான உடம்பில் சேர்ந்த கொழுப்பானது வளரும் குழந்தைக்கு ஊட்டமளிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதனால் அவர்கள் எடை அதிகரிப்பதுல்லை. அதேபோல், கர்ப்பத்தின்போது அவர்கள் அதிகமாக உண்ணவில்லை என்றாலும் அதிகரிக்காது.” என்று நவி மும்பையின் கன்சல்டண்ட் கைனகாலஜிஸ்ட், டாக்டர் பாப்பியா கோஸ்வாமி முகர்ஜீ கூறுகிறார்.

 

கர்ப்பத்தின்போது நான் எடை இழப்பதால் குழந்தை பாதிக்கப்படுமா?

 

அதிர்ஷ்டவசமாக, இல்லை. முதல் மூன்று மாதங்களில், உங்களுடைய குழந்தை மிகப்பெரிய அளவு ஊட்டச்சத்துக்களை இழுத்துக்கொள்வதற்கு மிகவும் சிறியது. உங்கள் கொழுப்பு இருப்பு அவள்/அவன் வளர போதுமானதாக இருக்கும். 'உடம்பின் முதல் முன்னுரிமை குழந்தை வளர்ச்சியடைவதாகும், இதனால் தாய்வழி இருப்புகளைப் பயன்படுத்துகிறது' என்று டாக்டர் முகர்ஜி மேலும் தெரிவித்தார். எனினும், கடுமையான குமட்டல் மற்றும் காலையுணர்வு காரணமாக நீங்கள் உணவை உட்கொள்ளாமலிருந்தால், மருத்துவரை அணுகவும்.

 

நான் அதிக எடையுடன் இருக்கிறேன் என்றால் கர்ப்ப காலத்தில் எடை இழக்க வேண்டுமா? என் குழந்தைக்கு தீங்கு விளைவிக்காமல் நான் எப்படி சாதிக்க முடியும்?

 

கர்ப்பகாலத்தின் போது, உங்கள் உடலானது உடலில் கொழுப்பு இருப்புக்களை பிரசவத்திற்காக சேமித்து வைத்து கவனித்துக்கொள்கிறது. நீங்கள் அதிக எடையுள்ளவர்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் எடை இழக்க நேரிடும், ஆனால் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இதை அடைய வேண்டும். பட்டினியால் அல்லது உணவுமுறையை பின்பற்றுவது மூலம் எடை இழப்பது உடம்பிலுள்ள ஊட்டச்சத்துக்களை நீக்குவதோடு குறைபிரசவம் உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கும். 'ஆரோக்கியமான எடையை' சரியான அளவில் கொண்டிருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

 

கர்ப்ப காலத்தில் உங்கள் எடையை நிர்வகிக்கக்கூடிய சில வழிகள் இங்கே உள்ளன -

 

  • ஆரோக்கியமாக சிறிய அளவில் சாப்பிடுங்கள்: காலை நோய் இருந்தால், அடிக்கடி சாப்பிடவும், நாள் முழுவதும் சிறு சிறு அளவில் உணவை எடுத்துக்கொள்ளவும். “இஞ்சி மிட்டாய் அல்லது வீட்டில் செய்த இஞ்சி-தேன் கலந்த கலவையை குமட்டலை குறைக்க சாப்பிடலாம்” என்று டாக்டர் முகர்ஜீ பரிந்துரைக்கிறார்.

 

  • கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்: வறுத்த, அதிகமான எண்ணெய் உணவுகள் காலை நோயை மசக்கையை அதிகரிக்கும்.

 

  • உங்கள் உடல் நிறை குறியீட்டை தெரிந்துகொள்ளுங்கள்: உங்கள் பி.எம்.ஐ யினை தெரிந்துகொள்வது அவசியம். அதற்கேற்ப உணவு முறைகளை மாற்றலாம். சாதாரண பி.எம்.ஐ (18.5 முதல் 24.9 குள் இருக்கலாம்), நீங்கள் மொத்த கர்ப்பகாலத்தின்போது 10 முதல் 12 கிலோ எடை ஏறலாம். உங்கள் பி.எம்.ஐ 18க்கு குறைவாக இருந்தால் 12 முதல் 15 கிலோ ஏறலாம், உங்கள் பி.எம்.ஐ 25 முதல் 29.9 உடல்பருமனாக இருந்தால் 5-9 கிலோ வரை ஏறலாம்

 

  • வைட்டமின்களை தவிர்க்க வேண்டாம்: பிரசவத்திற்கு முன் இரும்பு / கால்சியம் சத்துக்களை வழக்கமாக எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவைப்படும்.

 

  • உடற்பயிற்சி: கர்ப்பத்தின்போது நீங்கள் எடை கூடினால், உடல் செயல்பாடு இல்லாதது போல் நீங்கள் உணரலாம். எனினும், எடை இழக்க உடற்பயிற்சி செய்யக்கூடாது மாறாக ஆரோக்கியமாக இருக்கவும் பிரசவ வலியினை தாங்கவும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

 

  • கவனமாக இருங்கள்: உங்கள் உடம்பில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து இருங்கள். முதல் மூன்று மாதங்களில் எடை இழப்பது இயல்புதான் என்றாலும் திடீரென 4-5 கிலோ இழந்தால் மருத்துவரை பார்ப்பது நல்லது . பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

  • தாயாகப்போகிறீர்கள் ஆரோக்கியமாக இருங்கள்!

 

பேனர் படம்: diabetesandmoms.com
 

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!