என் அறுவைசிகிசையிலிருந்து குணமாக உதவி செய்த 5 விஷயங்கள்

cover-image
என் அறுவைசிகிசையிலிருந்து குணமாக உதவி செய்த 5 விஷயங்கள்

ஒரு தாயாக இருப்பது பல உணர்வுகளுடன் நிரம்பிய அனுபவம். கவலை மற்றும் பயம் ஆகியவற்றுடன் நிறைய மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு இருக்கிறது. முதல் முறையாக உங்கள் குழந்தையைப் பார்க்கும்போது அவன் / அவளை உங்கள் கைகளில் ஏந்தும்போது அந்த உணர்வு விவரிக்க இயலாதது. என் கர்ப்பம் முழுவதும், என் பிரசவம் எப்படி நடக்கும் என்பது பற்றிய கவலை இல்லை, என்னுடைய 9 வது மாதத்தில் தான் கவலை தோன்றியது. கவலைகளுக்கு அப்பால், குழந்தை அவசரமாக சிசேரியன் மூலம் பிறந்தது. என் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரசவ தேதி 2 வாரங்கள் தள்ளியிருந்தது. ஆனால் வழக்கமான ஸ்கேனின்போது மருத்துவர் ஏதோ சிக்கலை கண்டறிந்ததால் அன்றைக்கு இரவே குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.

 

எனக்கு எல்லாமே திடீரென நடந்தது, நான் அதற்கு தயாராகவும் இல்லை. ஆனால் குழந்தை பாதுகாப்பாக பிரசவிக்கப்பட்டவுடன் ஒன்றை புரிந்துகொண்டேன், அதாவது “சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது வலியற்றது” என்று மக்கள் கூறுவது வெறும் கட்டுக்கதை. உண்மையில் அது ஒரு பெரிய அறுவைசிகிச்சை, இதில் நோயாளி மீண்டு வர 6 முதல் 8 வாரங்கள் ஆகின்றன.

 

மருத்துவமனையில் 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னும் கூட, வீட்டிற்கு திரும்பினால், நீங்கள் பலவீனமாக உணர்வீர்கள். உங்கள் தையலால் இயங்குவது கடினமாகவும் அசௌகரியமாகவும் இருக்கும். சில நேரங்களில் கழுத்து மற்றும் கீழ் முதுகில் வலி உண்டாகும். இதைத்தவிர நம்மையும் குழந்தையையும் கவனித்துக்கொள்ள யாராவது வேண்டும். எப்போது மீண்டு வருவோம் என்கிற நிலை உண்டாகிறது. அதனால், இதிலிருந்து நான் மீள எனக்குதவிய இந்த 5 விஷயங்களை பகிர்ந்துகொள்வதால் குழந்தை பிறக்க இருப்பவர்கள் அல்லது குழந்தை பிறந்தவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 

அ. தையல் இட்ட இடத்தை பராமரிப்பது:

 

சிசேரியனில் கிட்டத்தட்ட 20-22 தையல்கள் உங்களுக்கு போடப்பட்டிருக்கலாம், அதனால் அதை கையாள்வது மிக முக்கியம். அறுவை சிகிச்சை முடிந்தவுடன், சில மணிநேரங்களுக்கு மயக்க மருந்தின் தாக்கம் இருக்கும் ஆனால் வெட்டி தையலிட்டு பாண்டேஜ் போடப்பட்டிருக்கும் இடத்தில் வலி இருக்கும். காயம் வேகமாக குணமாகவும் வலி இல்லாமல் இருக்கவும் மருத்துவர் பொதுவாக வலி நிவாரணிகளையும் ஆண்டிபயோடிக்களையும் கொடுப்பர். இருந்தாலு, திரும்பும்போது, உட்காரும்போது எழுந்துகொள்ளும்போதும் கூட தையலிட்ட இடத்தில் வலியும் அசௌகரியமும் இருக்கும். இருமல் தும்மலின்போது உள்ள சிறு அதிர்வு கூட வலிமிகுந்ததாக இருக்கும். அதனால், கவனமாக இருக்கவும். தையல் சீக்கிரம் குணமாக தலையணையை வைத்துக்கொள்ளலாம், அடிக்கடி எழுந்து நடப்பதை, மாடி ஏறுவதை, அதிக எடையை தூக்குவதை தவிர்க்கலாம்.

 

ஆ. சுகாதாரமாக இருப்பது:

 

குழந்தையின் சுகாதாரத்தை பராமரிப்பது தவிர, தாயின் சுகாதாரத்தின் மீதும் கவனம் வேண்டும். தையல் மேல் போட்ட பேண்டேஜ் நீக்கப்பட்டவுடன் அந்த இடத்தை பருத்தி பஞ்சினை டெட்டாலில் முக்கி எடுத்து அந்த இடத்தை, வீட்டில் யாரையாவது உதவிக்கு அழைத்து மெதுவாக துடைக்கவும். இதனால் தையலில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிலநேரங்களில் யோனியில் கத்தீட்டர் பயன்படுத்தியதால் அறிப்பு ஏற்படலாம், சிலருக்கு லேசான சிறுநீர் தொற்று ஏற்படலாம். அதனால், வெஜினல் வாஷ் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்யலாம், அடிக்கடி நாப்கின்களை மாற்றலாம், கைகளை பல முறை கழுவலாம், அனுமதிக்கப்படும்போது நல்ல சூடான நீரில் குளிக்கலாம், தலையை சுத்தமாக அலசி எண்ணெய் வைப்பதால் தொற்றுக்களை தடுப்பதோடு உங்களையும் நன்றாக உணரச்செய்யும். நல்ல தூக்கம் வரும்.

 

இ. உணவு மற்றும் நீர் உட்கொள்ளுதல்:

 

என் குழந்தை கோடையின் உச்சத்தில் பிறந்தது. என் மருத்துவர் என்னை நிறைய தண்ணீர் குடிக்குமாறு கூறினார். நான், காய்ச்சி ஆறிய நீரை (சீரகம் போட்டு கொதிக்கவைத்தநீர்) குறைந்தது ஒரு மாதத்திற்கு குடித்தேன். சில்லென்று இருக்கும் பொருட்களை தவிர்த்தேன். சில நேரங்களில் உணவு உட்கொண்ட பிறகு இந்த நீரை வெதுவெதுப்பாக்கி குடித்தேன், இதனால் என் உடல் எடை குறைய உதவியது.  என் உடம்பின் வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க உதவியதோடு ஜீரணத்தை மேம்படுத்தி நச்சு நீக்கியது. என் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கவும் என் சக்தியை மீட்கவும் வீட்டில் செய்த சூப், காய்கறிகள், பருவத்திற்கேற்ற பழங்கள், தானியங்கள், பருப்புகள் போன்றவற்றை பயன்படுத்தி வீட்டில் சமைக்கப்பட்ட லேசான உணவுகளை எடுத்துக்கொண்டேன். நன்றாக பாலூட்டவும் விரைவில் மீண்டு வரவும் பருப்புகளுடன் பாலையும் எடுத்துக்கொண்டேன். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டேன், வாயு, நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்தேன்.

 

ஈ. கீழ் முதுகு மற்றும் கழுத்து வலி:

 

மகப்பேறுக்கு பிறகு சில பெண்களுக்கு கீழ் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படலாம். இது பல மாதங்கள் குழந்தையை சுமந்ததாலும், மருத்துவமனையில் நாட்கணக்கில் படுத்து இருந்ததாலும், மகப்பேறுக்கு பின் இரத்த போக்கினாலும் இருக்கலாம். எனக்கு வலி மிகவும் அதிகமாக இருந்ததால் மருத்துவரை அனுகினேன். அவர் என்னை சரியான் நிலையில் அமரச்சொன்னார் (L வடிவத்தில்) தூங்கும்போது தலையனையை வைக்க வேண்டாம் என்றும் கூறினார். அதற்கு பதிலாக பக்கவாட்டில் ஆதரவாக தலையணையை காலுக்கடியில் வைத்துக்கொள்ளுமாறு கூறினார். அதோடு நான் பாலூட்டுவதால் லேசான பாதுகாப்பான வலி நிவாரணியை பரிந்துரைத்தார். தாங்கமுடியாத வலியிலிருந்து நான் விடுபட இது எனக்கு உதவியாக இருந்தது. உட்கார்ந்து பாலூட்டும்போது என் மடியில் தலையணையை வைத்து அதன் மேல் குழந்தையை வைத்து சிரமமில்லாமல் பாலூட்டினேன்.

 

உ. நிறைய ஓய்வு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின்கள்:

 

சிசேரியனிலிருந்து மீண்டு வர நேரமெடுக்கும். அறுவை சிகிச்சையின்போது இரத்த இழப்பு ஏற்படுவதால் இரத்த சோகை ஏற்படலாம். பிற முக்கிய அறுவை சிகிச்சை போல் இதற்கும் நிறைய ஓய்வு தேவை. “குழந்தை தூங்கும்போது நீயும் தூங்கு” என்பது எல்லா நேரங்களிலும் முடியாது எனினும் தூங்கும் நேரத்தை (அந்த நேரத்தில் குடும்பத்தினர் யாரிடமாவது குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு) நாம் உருவாக்குவதால் உறங்குவதால் மீண்டு வர சுலபமாக இருக்கும், குழந்தைக்கும் நல்லது. அதோடு பரிந்துரைக்கப்பட்ட ஆண்டிபயோடிக்குகள், வைட்டமின் மற்றும் மினரல் சத்து மாத்திரைகள், கால்சியம் போன்றவற்றை எடுத்துக்கொள்வதால் மீண்டு வர இயலும்.

 

இந்த 5 விஷயங்கள் தவிர, லேசான மசாஜ் (தையலிடப்பட்ட பகுதி தவிர கால்,  பாதம், கை, தோள்கள் உட்பட) வீக்கம் மற்றும் வலியை குறைக்கிறது. அதோடு, குழந்தையுடன் பேசி, சிரித்து, மகிழ்ந்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவளித்து, ஓய்வெடுத்து, நடை மற்றும் சிறு வேலைகளை செய்வதால் இந்த கட்டத்திலிருந்து விரைவில் மீண்டு வரலாம்

.

ஒரு புது வாழ்க்கையை பிரசவிப்பது அவ்வளவு எளிதல்ல. இது கர்ப்பத்தில் தொடங்கி குழந்தை பிறப்பு என்னும் நீண்ட கடினமான பாதையில் பயணிக்கிறது. இதில் மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய செய்கிறது. ஒரு தாய் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அதிலிருந்து மீண்டு பலத்தையும் உற்சாகத்தையும் பெற்று குழந்தையையும் அவளே பார்த்துக்கொள்வது எவ்வளவு அற்புதமான விஷயம். அது தான் தாய்மை. இதை நடத்தச்செய்வது நம்முடைய வலுவான நம்பிக்கை, ஆதரவு மற்றும் குடும்பத்தினரில் அக்கறை மற்றும் மருத்துவரின் சிறந்த அறிவுரையால் என்பதை நம்புங்கள்.

 

என் அனுபவம் தேவைபடுபவருக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!