25 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கோரயோனிக் வில்லஸ் ஸாம்ப்ளிங் அல்லது சிவிஎஸ் என்பது கருவில் வளரும் குழந்தையின் பிறவி குறைபாடுகளை கண்டறிவதற்காக கர்ப்பகாலத்தில் பிரசவத்திற்கு முன் எடுக்கப்படும் ஒரு சோதனை ஆகும். இது கோரயோனிக் வில்லஸ் பயாப்சி என்றும் அழைக்கப்படும். இதில் கோரயோனிக் வில்லை செல்களின் மாதிரி சோதனைக்காக நஞ்சுக்கொடியிலிருந்து எடுக்கப்படும்.
கர்ப்பகாலத்தின் போது டவுன்ஸ் சிண்ட்ரோம் போன்ற பிறப்பு குறைபாடுகள், மரபனு நோய்கள் மற்றும் க்ரோமோசோம் குறைபாடுகள் ஆகியவை ஏற்படாமல் தடுக்க அல்லது கண்டறிய, பிறப்பு குறைபாடுகளுடைய குழந்தையை ஈன்றெடுக்கும் அதிக ஆபத்து கொண்ட பெண்களுக்கு கர்ப்பத்தின்போது 11 முதல் 13 வாரங்களுக்கிடையில் சிவிஎஸ் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் பிரச்சனைகளை முன்னமே கண்டறியலாம். கர்ப்பகாலத்தின் 10 வாரங்களுக்கு முன்னர் சிவிஎஸ் பரிந்துரைக்கப்படுவதில்லை.
மருத்துவர் ஏன் CVS பரிசோதனை பரிந்துரைக்கலாம் என்பதற்கான காரணங்கள்
குரோமோசோமால் குறைபாடுகளைக் கண்டறிவதில் சி.வி.எஸ் 98% துல்லியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நடைமுறையானது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துகிறது. இது, உடலுடன் தொடர்புடைய குறிப்பிட்ட பிரச்சனைகளை ஆராயவும் அல்லது கண்டறியவும் உதவுகிறது. உதாரணத்திற்கு, மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி, இது ஆண்களில் பொதுவாக காணப்படுவது, தசைகளை வலுவிழக்கச்செய்யும். மருத்துவர் உங்களுக்கு சிவிஎஸ் சோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கக்கூடிய சில சூழ்நிலைகள்.
கர்ப்ப காலத்தில் CVS எவ்வாறு வேலை செய்கிறது?
கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கருவுற்ற முட்டை அல்லது கரு முட்டை இரு பகுதிகளாக பிரிகிறது, இதில் ஒன்று குழந்தையாக உருவாகிறது மேலும் மற்ற பகுதி நஞ்சுக்கொடியை உருவாக்குகிறது. நஞ்சுக்கொடியை உருவாக்கும் பகுதி அதன் மீது சிறிய விரல்கள் போல துருத்திக் கொண்டிருக்கிறது, இது ‘கோரியோனிக் வில்லை’ என அழைக்கப்படுகிறது.
இந்த பிரிவுகளால் கருவுற்ற முட்டைப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதே டிஎன்ஏ கருவாகவும் உருபெறுவதால் அவற்றில் ஏதாவது ஒர் மரபணு சிக்கலை கொண்டிருக்கலாம். கோரயோனிக் வில்லை ஒரு மரபனு குறைப்பாடு இருப்பதை குறிப்பிடுகையில், வளரும் குழந்தையிலும் இதுவும் இருக்கும்.
சி.வி.எஸ் சோதனை எவ்வாறு நடக்கிறது?
சி.வி.எஸ் சோதனைக்கு முன்னர், மரபணு ஆலோசனையை வழங்குவது முக்கியம், இது முறை, அபாயங்கள் மற்றும் நடைமுறை நன்மைகளின் ஆழமான விளக்கத்தை உள்ளடக்கும். உங்களின் கர்ப்ப நிலையை உறுதி செய்ய ஒரு அல்ட்ரா சவுண்ட் சோதனை மேற்கொள்ளப்படவேண்டும். இதனால் உங்களிடமிருந்து பெறப்பட்ட கோரயோனிக் வில்லையின் மாதிரி முடிவுகளை வழங்க போதுமானது.
சி.வி.எஸ் சோதனைக்கு பின்னால் உள்ள யோசனை, கருப்பை வாய் அல்லது வயிறு வழியாக உங்கள் நஞ்சுக்கொடியிலிருந்து திசுக்களின் ஒரு சிறிய மாதிரியை எடுப்பது. உங்கள் நஞ்சுக்கொடியை அனுக சிறந்த வழியை மருத்துவர் தேர்ந்தெடுப்பார். அதன் பிறகு பகுப்பாய்வுக்காக அந்த மாதிரி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்படும். சில நாட்களுக்குப் பிறகு சோதனைக்காக இந்த செல்கள் ஒரு சிறப்பு திரவத்தில் வளர்க்கப்படுகின்றன.
நஞ்சுக்கொடியிலிருந்து கோரயோனிக் வில்லை செல்களை பெறுவதற்கான இரண்டு வழிகளைப்பற்றி விரைவாக பார்க்கலாம்.
அ. ட்ரான்ஸ் அப்டாமினல் சிவிஎஸ்
நோயாளிக்கு மயக்க மருந்துகளை நிர்வகித்த பின்னர், செயல்முறை அல்ட்ராசவுண்ட் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திய பின், அடிவயிறு வழியாக நஞ்சுக்கொடிக்கு மெல்லிய ஊசி செருகப்படுகிறது. ஊசி ஆம்னியோடிக் சாக்கின் வழியாக அல்லது குழந்தைக்கு அருகில் எங்கும் செல்லாது.
ஆ. டிரான்செர்விக் சி.வி.எஸ்
ஒரு ஊசி கருப்பை வாயில் யோனி வழியாக செருகப்படுகிறது. அல்ட்ராசவுண்டில் கண்காணித்து, ஒரு குழாய் நஞ்சுக்கொடி வரை சென்று ஒரு சின்ன மாதிரியை உறிஞ்சி எடுக்கிறது.
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் சி வி எஸ் மூலம் உங்கள் கருவின் சிக்கலை நீக்குங்கள்.
உங்கள் பிறக்காத குழந்தையின் பிறப்பு குறைபாடுகள் மற்றும் பிற மரபணு கோளாறுகள் ஆகியவற்றைக் கண்டறிய அல்லது அகற்ற ஒரு சி.வி.எஸ் சோதனை மேற்கொள்ளப்படுவதற்கான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும். தாமதமின்றி, உங்கள் மகளிர் மருத்துவரால் குறிப்பிடப்பட்ட காலவரைக்குள் சோதனை செய்யப்படுவதை உறுதி செய்யுங்கள்.
இந்த செயல்முறை சிறிது வலிமிகுந்ததாக இருந்தாலும் நீண்ட நேரம் எடுக்காது. சில நிமிடங்களில் மாதிரிகளை சேகரிக்கலாம். சிறிது தசைபிடிப்பு மற்றும் இரத்தப்போக்கு இந்த செயல்முறையில் இயல்பானதே அதனால் இரத்தத்தை கண்டவுடன் பதற வேண்டாம்.
செயல்முறைக்குப் பிறகு மீதமுள்ள நாள் முழுவதும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் உடல் ரீதியிலான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம். ஒருவேளை உங்கள் யோனியிலிருந்து திரவக் கசிவு போன்ற எதையும் கவனித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
பேனர் படம்: allalliedhealthschools
A