புதிதாகப் பிறந்த குழந்தை எப்போதுமே அனைவரின் ஈர்ப்பையும் கவருகிறது. ஒரு அம்மாவின் முழு உலகமும், மகிழ்ச்கியும் குழந்தையை சுற்றியே சுழல்கிறது. குழந்தை பிறப்பை எதிர்பார்கும் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன்கூட்டியே ஷாப்பிங் தொடங்குவதோடு, தங்கள் வீட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், அது இன்னும் குழந்ததைக்கு ஏற்ற சுழலாக மாறுகிறது. ஒரு அம்மா தன் கவனம் முழுவதையும் தனது குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் செலுத்துகிறாராகள், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார். பார்லர் செல்வது அல்லது ஸ்பா செல்வது சாத்தியம் இல்லை. எனவே, ஒவ்வொரு புதிய அம்மாவும் தன்னை நன்றாக கவனித்துக்கொள்வதற்கு உதவும் சில பொருட்கள் இங்கு உள்ளன.
1
பேசியல் ஸ்க்ரப்
ஓட்ஸ், மூலிகைகள், கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகளால் தயாரிக்கப்பட்டு, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கிறது. இது தோல் ஈரபதத்தை பராமரித்து மென்மையாக வைத்திருக்கும். ஓட்ஸ், குறிப்பாக, இறந்த சரும செல்களை அகற்றும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
.
2
பேசியல் சோப்
ஏ சி அறையில் நிறைய நேரம் செலவிடுகிறீர்களா? இந்த சோப் உங்கள் தோல் உலர்வதை தடுக்க உதவுகிறது. தயிர், ஷியா வெண்ணெய், முல்தானி மிட்டி, மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை கொண்டு தயாரிக்கபட்டது.
3
நீம் வுட் சீப்பு
இது இயற்கை பொருட்களால் செய்யப்பட்டது. மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது மற்றும் தலை பொடுகை நீங்குவதாக அறியப்படுகிறது. அது நிலையானதாக இருப்பதால், முடி உதிர்வதைத் தடுக்கிறது. இந்த சீப்பை வாங்குவதன் மூலம், கார்பன் தடத்தை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது இயற்கை வேப்ப மரத்திலிருந்து செய்யப்பட்டதாகும்.
4
சந்தன உட்பான் தூள்
லிகோரிஸானது மிகவும் பிரபலமான தோல் நிறமூட்டல் முகவர்களில் ஒன்றாகும். இது தவிர, சந்தனத் தூள்,பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு, சந்தன பொடி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த தூள் பயன்படுத்திவர வித்யாசம் தெரியும்.
5
மோரிங்கா மற்றும் கருவேப்பிலை ஹேர் பேக்
மோரிங்கா அதிசய மரம் என அழைக்கப்படுகிறது, இது பல உடல் நலன்களைக் கொண்டுள்ளது. கறிவேப்பிலை இலைகளோடு கலந்து செய்யப்பட்ட இந்த பேக் முடிக்கு ஊட்டமளித்து முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியான கூந்தலை தரும்.