கர்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள்

cover-image
கர்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள்

ஒவ்வொரு தாயும், குறிப்பாக 35 வயதுக்கு மேலான பெண்களுக்கு கர்ப்பகாலத்திற்கு முன்புபோ,கர்ப காலத்தின்போதும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது. கர்ப காலத்தின் எந்த கட்டத்திலும் இது நிகழலாம் என்றாலும், கர்ப்பத்தின் பிற்பகுதியில் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமானது.

 

கர்ப்பகால நீரிழிவு நோய் என்றால் என்ன?

 

கர்ப்பகால நீரிழிவு கர்ப்ப காலத்தில் உருவாகக்கூடிய நீரிழிவு நோயின் ஒரு வடிவமாகும். தாயின் இரத்த குளுக்கோஸ் அளவு சாதாரண அளவை விட அதிகமாக இருக்கும். இரத்தக் குளுக்கோஸின் உயர்ந்த அளவு  தாய்க்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கலாகும்.

 

கர்ப்பகால நீரிழிவு நோய் பொதுவாக  24-28 வாரங்களுக்கு இடையே கண்டறியப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதற்கு போதுமான அளவிற்கு  ஹார்மோன் இன்சுலின் தற்காலிகமாக குறைந்து கார்போஹைட்ரேட்டுகளின் அளவை கட்டுப்படுத்த இயலாததே இதற்கு காரணம். இது குளூக்கோஸ் இன்டாலரென்ஸ் எனவும் கூறப்படுகிறது.

 

கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட காரணம் என்ன?

 

 

இன்சுலின், கணையம் சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை அது ஒழுங்குபடுத்துகிறது. கர்ப்ப காலத்தில், உடல் கூடுதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது மற்றும் அதிக எடை போன்ற பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறது. இந்த தவிர்க்க முடியாத மாற்றங்கள் காரணமாக,  இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்ற நிலை ஏற்படுகிறது.

 

அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில்  இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் வருகின்றது. போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யமுடியாத பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.  அதிக எடை கொண்ட பெண்கள் ஏற்கனவே கர்ப்பத்திற்கு முன்னர் சில இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் கொண்டிருந்திருக்கலாம். மேலும், நீரிழிவு நோய் வலுவான குடும்ப வரலாறு மற்றும் மரபணுக்கள் சமந்தப்பட்டதுமாகும்.

 

கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன?

 

 

அறிகுறிகள் பின்வருமாறு:

 

மற்ற கர்ப்பிணிப் பெண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான பசி மற்றும் தாகம்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

குமட்டல்

அடிக்கடி சிறுநீர் மற்றும் யோனி நோய்த்தொற்றுகள்

சிறுநீரில் சர்க்கரை இருப்பது

பார்வை மங்கலாகுதல்

தீடிரென வரும் சோர்வு உணர்வு.

 

கர்ப்பகால நீரிழிவு நோயினால்  தாய்க்கும் குழந்தைக்குமான ஆபத்துக்கள் என்ன?

 

 

கர்ப்பகாலத்தின் போது உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குழந்தைக்கு தீங்கிழைக்கலாம்.

 

மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்:

 

குடுத்த தேதிக்கு முன் குழந்தை பிறப்பது.

குழந்தை அதிக எடை கொண்டு பிறக்கலாம்.இது டெலிவரியை கஷ்டமாகவும், காயத்திற்கும் வழிவகுக்கும்.

பிரசவத்திற்கு பிறகு உடனடியாக குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவு இருத்தல்

சுவாசிக்க சிரமம் ஏற்படுதல்

கருச்சிதைவு அல்லது  குழந்தை இறந்து பிறக்கும் ஆபத்து

குழந்தைக்கு  டைப் 2 வகை நீரிழிவு நோய் எற்படும் ஆபத்து.

 

கர்ப்பகால நீரிழிவு நோயை எப்படி எதிர்கொள்ளலாம்?

 

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கலாம். இரத்த சர்க்கரை அளவை  சரியான உணவு முறையை கடைப்பிடித்து, உடற்பயிற்சி செய்தால் கட்டுப்படுத்த முடியும். உணவு மற்றும் உடற்பயிற்சிகள் போதவில்லையானால் சில பெண்களுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த மருந்துகள் தேவைப்படலாம்.

 

மேலே உள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!