இஸ் நாடுறல் பர்த் பாசிபில் வித் ப்ரீ-எக்கிலாம்சியா

cover-image
இஸ் நாடுறல் பர்த் பாசிபில் வித் ப்ரீ-எக்கிலாம்சியா

 

ப்ரீ ஏக்கலாம்சியா இருந்தால் நார்மல் டெலிவரி சாத்தியமா?

 

ப்ரீ ஏக்கலாம்சியா என்றால் என்ன?

 

கர்ப்பம் தொடங்கி 20 வாரங்களுக்குப் பின், சில பெண்களுக்கு ப்ரீ ஏக்கலாம்சியா ஏற்படலாம். இது உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதங்கள் வெளியேறுதல்,உடல்  வீக்கம், எடிமா போன்றவைகாளை ஏற்படுத்தும். இது பொதுவாக குழந்தை பிறந்த பிறகு மறைந்துவிடும். சில பெண்களுக்கு தங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டரில் கூட உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். அனைத்து உயர் ரத்த அழுத்தமும் ப்ரீ ஏக்கலாம்சியாவாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

 

இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. தாயின் மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கும், வலிப்பும் வரக்கூடும், குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை இழக்க நேரிடும்.

 

ப்ரீ எக்கலாம்சியா ஏற்பட காரணம் என்ன?

 

ப்ரீ ஏக்கலாம்சியா ஏற்பட காரணம் தெரியவில்லை. நஞ்சுக்கொடியானது கருப்பை சுவர்களில் உள்ள ஆழமான இரத்த நாளங்களின் பொதுவான முறையில் வளராவிட்டால், நஞ்சுக்கொடியைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டம் குறையும் . மேலும், கர்ப்பிணிப் பெண் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், ப்ரீ ஏக்கலாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

 

ப்ரீ எக்ளாம்ப்ஸியாவின் ஆரம்ப அறிகுறிகளில் சில மேலும் அது எவ்வாறு கண்டறியப்படுகிறது?

 

கை, கால்களும் முகமும் வீங்கியிருக்கும். மேலும் விரைவான எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது. சில நேரங்களில் அது கடுமையான தலைவலிகளுக்கு வழிவகுக்கும், பார்வை மற்றும் மூச்சு விட சிரமம் தரும். இதற்கு வயிற்று வலி மற்றும் அசௌகரியம், மேலும் அதிகரித்த சிறுநீர் கழித்தலும் ஒரு அறிகுறிதான்.

 

உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் பிரச்சினையின் முதல் அறிகுறியாகும். புரதங்களை சரிபார்க்க சிறுநீர் சோதனை உடனடியாக உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.


ப்ரீ எக்ளாம்ப்ஸியாவிற்கு சிகிச்சை என்ன?

 

இதற்கான சிகிச்சை ஒரு மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இதில் ஓய்வு எடுத்தல்,  இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள், தாயின் நிலைகள் மற்றும் கருவின் இதய துடிப்பு கண்காணிக்கபடுகிறது. அல்ட்ராசோனோகிராஃபி, வழக்கமான ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகள் நடத்தப்படுகிறது. கடுமையான ப்ரீஎக்ளாம்ப்ஷியாவில், டெலிவரி தேதி நேருங்காவிட்டாலும், பிரசவம் செய்யப்படுகிறது.

 

கற்பிணிக்கு 37 வாரங்கள் அல்லது அதற்கு மேல்  இருந்தால், பிரசவ வலி உண்டாக்குவதற்கான செயற்கை முறையை தேர்தெடுகல்லாம்  அல்லது ஆப்பரேஷன் செய்யப்படுகிறது. இதை செய்வதால் ப்ரீ எக்ளாம்ப்ஸியா , எக்ளாம்ப்ஸியாவாக மாறுவதை தடுக்கலாம்.

 

இயற்கை பிறப்பு கூட சாத்தியமாகும். குழந்தை முழுமையாக வளரும் வரை,  மருத்துவர்களால் மருத்து கொடுத்து சிகிச்சையளிக்கப்படுகிறது.

 

ப்ரீ எக்ளாம்ப்ஸியாவின் அறிகுறிகள் பொதுவாக குழந்தை பிறப்புக்கு பின் 1 முதல் 6  வாரங்களுக்குள் மறைந்து விடுகின்றன.

 

மேலே குறிப்பிட்ட அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உங்கள் மருத்துவரிடம் உடனே பேசுங்கள்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!