எபிஸியோடோமி எப்பொழுது தேவைப்படுகிறது?

cover-image
எபிஸியோடோமி எப்பொழுது தேவைப்படுகிறது?

உங்கள் குழந்தையை இயற்கையான பிறப்பு மூலம் பெற்றெடுக்கும்போது உங்கள் மகப்பேறாளர் செய்ய வேண்டிய சிறிய அறுவை சிகிச்சைகளில் எபிஸியோடோமி ஒன்றாகும். யோனி மற்றும் ஏனஸ் இடையே உள்ள பகுதி வெட்டப்பட்டு,  குழந்தை எளிதாக இந்த பாதையின் மூலம் வெளிவர செய்யப்படுகிறது. இது நார்மல் டெலிவரியின் போது மட்டுமே செய்யப்படுகிறது.

 

இது ஒரு திட்டமிடப்படும் அறுவை சிகிச்சை அல்ல.  பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மருத்துவர்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள், அவை

 

உங்களுக்கு டெலிவெறியின் போது அதிக இரத்தம் வெளியேறும் அபாயம் இருந்தால் செய்யப்படும்.

உங்கள் யோனியில் அதிகம் விரிந்து காயம் ஏற்படும் அபாயம் இருந்தால் செய்யப்படும்.

உங்கள் குழந்தையின் தலை பெரிய அளவில் இருந்தால் செய்யப்படும்.

உங்கள் குழந்தையின் நிலையோ அல்லது உங்கள் நிலையோ சிறிது கவலைக்கிடமாக இருந்தால் செய்யப்படும்.

உங்களுக்கும், குழந்தைக்குமான காயத்தை குறைப்பதற்காக செயல்படுத்தப்படலாம்.

உங்கள் குழந்தை பெரியதாக இருந்தால் செய்யப்படும்.

 

எபிஸியோடோமி எப்படி செய்கிறாராகள்?

 

 

எபிஸியோடோமி நடைமுறையானது லோக்கல் அநேஸ்தீசியா மருந்துகளின் கீழ் செயல்படுகிறது, நீங்கள் வலியை உணரமுடியாது, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு,சிறிய கீறல் செய்து நிகழ்த்தப்படும். உங்களுடைய மருத்துவர்களால் நிர்ணயிக்கப்பட்ட நிலைமைகளைப் பொறுத்து, இரண்டு வகைகளில் இந்த வெட்டு போடப்படலாம்.  செங்குத்து வெட்டு (Median கீறல் அல்லது மிட்லைன் எபிசோடோட்டமி) அல்லது பக்கவாட்டு வெட்டு (Mediolateral கீறல்) என இரண்டு வகைப்படும். மிட்லைன் எபிசோட்டோமி என்பது ஒப்பீட்டளவில் எளிமையானது, குறைந்த வலியுடையது எனினும் மலகுழாயில் சிக்கல்கள் ஏற்படலாம். மாறாக,  mediolateral எபிஸியோடோமி பக்கவாட்டில் வெட்டபட்டால் வலி அதிகமாக இருக்கும்,எனினும் மலகுழாயில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

 

 

எபிஸியோடோமி எனக்கு எப்படி உதவுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்ன?

 

தாய்க்கும், குழந்தைக்கும் காயம் குறைக்க எபிஸியோடோமி பரிந்துரைக்கப்படுகிறது, இது யோனி திறப்புகளை விரிவுபடுத்துகிறது மேலும் குழந்தையை எளிதாக வெளியே வர இந்த பாதை அனுமதிக்கிறது.

 

தாய்மார்களுக்கு எபிஸியோடோமி நன்மைகள் பின்வருமாறு:

 

நரம்பு நீட்சி மற்றும் சிறுநீரக காயத்தை குறைக்கிறது

இடுப்பு உறுப்புகளின் வீழ்ச்சியைக் குறைக்கிறது

சிறுநீர் இடைநீக்கத்தை குறைக்கலாம்,குடல் ஒத்திசைவை குறைக்கிறது.

ஏனஸ் காயப்படுவதிலிருந்து குறைக்கலாம்.

பாலியல் செயலிழப்பைக் குறைக்கிறது

 

பின்வருமாறு குழந்தைகளுக்கு எபிஸியோடோமி நன்மைகள்:

 

மூச்சுத் திணறலை தடுக்கிறது

மூளைக்கு ஏற்படும் காயங்களை தடுக்கிறது.

மூளை இரத்த அழுத்தத்தை தடுக்கிறது

தோள்பட்டை காயம் ஏற்படாமல் தடுக்கிறது.

 

எபிஸியோடோமியின் முரண்பாடுகள் என்ன?

 

எபிசோடோட்டமி என்பது மிகவும் எளிதான  செயல்முறையாக இருந்தாலும், உங்கள் ஒப்புதலை எடுத்தபின் மட்டுமே இது செய்யப்படுகிறது.

அழற்சி குடல் நோய் (கிரோன் நோய் அல்லது அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி)

சிறுநீர் முடக்கம்

கழிவிட செயலுழப்பு

 

எபிசோடோட்டமியின் சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் என்ன?

 

எபிசோடோட்டமி செய்யப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வலி இருக்கலாம். குறிப்பாக நடைபயிற்சி அல்லது உட்கார்ந்து அல்லது ஸ்ஃவாட்டிங் செய்யும் போது வலி ஏற்படலாம்.  

 

எபிசோடோட்டமியின் சிக்கல்கள் பின்வருமாறு:

 

கடுமையான காயம்

பாலியல் செயலிழப்பு அல்லது டிஸ்பரேனியா

இடுப்பு பகுதி உறுப்புகளின் வீழ்ச்சி

சிறுநீரக நோய்த்தொற்றின் அதிகரித்த ஆபத்து.

 

என் எபிசோடோட்டமியின் காயத்தை நான் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்?

 

எபிசோடோட்டமியின் காயத்தை  பின்வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்:

எப்சியோட்டோமியின் வலிக்கு உதவுகின்ற வகையில் குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுக்கலாம்.

டையூரியாவைக் குறைப்பதற்கு சிறுநீர் கழிக்கும் போது மிதமான சூடான நீரைப் பயன்படுத்துதல்.

நோய் தொற்றை தவிர்ப்பதற்கு மலம் கழிக்கும்போது  உங்கள் காயத்தை மூடி வைக்கவும்.

உங்கள் மருத்துவரால் கொடுக்கப்பட்ட வலி நிவாரணி கிரீமைப் பயன்படுத்தவும்.

சில நேரங்களில்  எப்சியோட்டோமியின் செயல்முறையால் வடு ஏற்படலாம், எனவே நீங்கள் வடுவை குறைக்க  கிரீம்கள் பயன்படுத்த வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!