உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? வாரம் 13

cover-image
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? வாரம் 13

இப்போது நீங்கள் டிரைமஸ்டரில் அடியெடுத்துவக்கிறீர்கள்! உங்களை எரிச்சலூட்டும் முதல் மூன்று மாதத்தின் கர்ப்பகால அறிகுறிகள் குறைந்திருக்கும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

 

இப்போது உங்கள் குழந்தை வேகமாக வளர்கிறது. அவள் / அவன் இப்போது 14 முதல் 20 கிராம்கள் எடையுடன் 8 செ.மீ. நீளமும் கொண்டிருப்பர். இமைகள் முழுமையாக உருவாகி இருக்கும் ஆனால் கண்களை மூடியே இருப்பர் மேலும் சில வாரங்களுக்கு திறக்க மாட்டார்கள். கைரேகையும் இந்த வாரத்தில் உருவாக தொடங்கும்.  

 

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 

குமட்டல் கொஞ்சம் குறைந்திருப்பதால், பசிக்க தொடங்கும். இப்போதிலிருந்து ஆரோக்கியமாக உண்பதில் கவனம் செலுத்தவும். கர்ப்பப்பை இப்போது சிறுநீர் பையிலிருந்து தள்ளி இருப்பதால் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். இருப்பினும் அடிக்கடி மயக்கமாக நீங்கள் உணரலாம், குறிப்பாக நிரைய உணவு உண்ட பின். உங்களை சக்தியுடன் வைத்துக்கொள்ள 5-6 சிறு சிறு உணவுகளாக பிரித்து உண்ண முயற்சிக்கலாம்!

முடிந்தால், பகல் நேரத்தில் குட்டி தூக்கம் போடலாம், ஏனெனில் நீங்கள் ஓய்வுவெடுக்கும்போது உங்கள் குழந்தை அதிகம் வளர்கிறது. நீங்கள் வேலைபாக்கும் கர்பினியாக இருந்தால் அடிக்கடி ஓய்வுவெடுக்க முடியாது, அநேரங்களில், கண்களை மூடி, அவ்வபோழுது ஆழ்ந்த மூச்செடுத்து விடவும்.  

 

உடல் வளர்ச்சி

 

இப்போது, உங்கள் அடிவயிறு நிச்சயமாக தனித்து தெரியும். உங்களுக்கு வேண்டுமென்றால் தளர்வான ஆடை அணிந்து உங்கள் கர்பத்தை இன்னும் மறைக்கலாம்.

 

உணர்ச்சி மேம்பாடு

 

உங்கள் கர்பத்தை பற்றி அறிந்தால் உங்களை சுற்றியுள்ள மக்கள் வித்தியாசமாக நடந்து கொள்ளலாம். நண்பர்களும் குடும்பத்திணரும் அடிக்கடி சிரிக்கலாம், கதவுகளை திறந்து விடலாம், உங்கள் நலனை பற்றி விசாரிக்கலாம். இந்த மாற்றம் சிறிது விசித்திரமாக இருந்தாலும், இனி அப்படித்தான் இருக்கும்!

 

சிவப்பு கொடிகள்

 

உங்கள் உடம்பு செமித்ததிலிருந்து உங்கள் குழந்தை ஊட்டச்சத்தை உறிஞ்சுவதால் அடுத்த சில வாரங்களில் உங்கள் ஹீமோகுளோபின் அளவுகள் குறையலாம். இதனால் நீங்கள் சோர்வாகவும் தளர்ச்சியாகவும் உணரலாம். மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் இரும்பு சத்துணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளலாம். கூடுதலாக, கீரை, பீன்ஸ், வருத்த நட்ஸ், திராட்சைகள், அப்ரிகாட் மற்றும் கடலுணவுகள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவை நிறைய சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்வதால் இரும்பு சத்தை உறிஞ்ச உதவுகிறது.  நெல்லி (இந்திய நெல்லிக்காய்) பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், தக்காளி போன்றவை வைட்டமின் சி நிறைந்த சில உணவுகளாகும். உங்கள் உணவில் போதுமான அளவு புரதம் மற்றும் கால்சியம் இருப்பதையும் உறுதி செய்யுங்கள். புரதம் அனுக்கள் மற்றும் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது மற்றும் கால்சியம் உங்கள் குழந்தையின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. உங்கள் உணவை திட்டமிட உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் கர்பத்திற்கான ஊட்டச்சத்து ஆலோசகரிடம் கலந்தோசிக்கவும்.

 

பாட்டி கதைகள்

 

உங்கள் உணவுடன் ஒவ்வொரு நாளும் பல கோப்பைகள் முழு கொழுப்பு நிறைந்த  பாலை பருகுமாறு உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் சொல்லலாம். பால் புரதம் மற்றும் கால்சியமின் நல்ல மூலப்பொருள்தான், கர்பக்காலத்தில் இவ்விரண்டு ஊட்ட சத்துக்களும் தேவையான அளவு அவசியம்தான் எனினும், முழு கொழுப்பு கொண்ட பால் தேவையில்லை, கொழுப்பு அகற்றிய அல்லாது கடைந்த பாலில் அதே அளவு கால்சியமும் புரதமும் உள்ளது. உங்களுக்கு பால் பிடிக்காதெனில், கொழுப்பு நீக்கிய பாலிலிருந்து தயாரித்த தயிர் அல்லது மோர் எடுத்துகொள்ளாலாம்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!