உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 15

cover-image
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 15

இப்போது மெதுவாக கர்ப்பத்திற்கு நீங்கள் பழகிவிட்டிருப்பீர்கள். இந்த கட்டத்தை நீங்கள் அனுபவித்து மகிழலாம். இந்த வாரம் உங்கள் குழந்தை 10 செ.மீ கள் நீளம் மற்றும் தோராயமாக 50 கிராம்கள் எடையை கொண்டிருக்கும். அவள் / அவனுக்கு மெலிதான சருமமும் அதில் இரத்த நாலங்களின் வெளிக்கோடும் உருவாகி இருக்கும். உங்கள் குழந்தையின் கண்கள் இன்னும் அகலமாக இருக்கின்றன, மேலும் அவை நெற்றியின் பக்க வாட்டில் இருப்பது போல் தோன்றும். இந்த கட்டத்தில் உங்கள் குழந்தை முகவும் துரு துருப்பாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கும். முழங்கை, மணிக்கட்டு மற்றும் முழங்காலை மடக்க முடியும். ஜாக்கிரதை, அவர்கள் இப்போது கராத்தே பயில்கிறார்கள்!

 

குழந்தையின் கண்கள் மூடி இருந்தாலும் அவர்களை இப்போது ஒளியை உணர முடியும். வயிற்றில் வெளிச்சமான ஒளியை பாய்ச்சினால், ஒளியிலிருந்து உங்கள் குழந்தை விளகும். குழந்தையின் காதுகளும் இப்போது வளர்ந்து வருகிறது, இருப்பினும் இன்னும் ஒளிகளுக்கு அவள் / அவன் மறுமொழி அளிபதில்லை. எனினும், உங்களை உங்கள் குழந்தை கேட்க முடியும் என்பதால், குழந்தையுடன் நீங்கள் பேச தொடங்கலாம்.

 

அடையாளங்கள் மற்றூம் அறிகுறிகள்

 

குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இந்த வாரம் எதும் இல்லை. ஹார்மோன்கள் உங்கள் ஈருகள் பொங்கி, வீக்கத்துடன் இரத்த கசிவு இருக்கலாம், அதனால் பல் மருத்துவரிடம் சரிபார்த்து கொள்ளலாம். உங்கள் பற்களில் பிளேக் மற்றும் டர்டர் வர அதிக வாய்ப்புள்ளது. பல் பரிசோதனை மற்றும் சுத்தம் செய்தல் கர்ப்பகாலத்தில் பாதிபேர்படுத்தாது. எனினும் கூடுதல் பல் சிகிச்சை தேவைப்பட்டால், மருத்துவரிடம் கலந்தோசிக்கவும்.

 

உடல் வளர்ச்சி

 

தொப்பை தெரிய ஆரம்பித்திருக்கும் நேரமிது! இருக்கமான ஆடை அணிந்தால் எளிதாக வெளியில் தெரியும். உங்களுக்கு வசதியான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டியது அவசியம்.

 

உணர்ச்சி மேம்பாடு

 

தொப்பையுடன் பேசுவது விசித்திரமாக இருந்தாலும் பழகிவிடும், குழந்தை உதைக்கும்போது பிணைப்பு கூடும். குழந்தைக்கு நீங்கள் வாசித்துக் காட்டலாம்., நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று விளக்கலாம் அல்லது அவள் / அவனுக்கு பாடலாம். குழந்தையின் அப்பாவும் அதனுடன் பேச வேண்டியது அவசியம். உங்கள் துணைவரை தொப்பையுடன் பேச வைப்பது சிரமம் என்றாலும் அவரது குரல் குழந்தைக்கு பரிட்ச்சயமாக இது உதவும் என்று சொல்லுங்கள்.

 

உங்கள் குழந்தை உள்ளே கேட்கும் மற்ற ஒலிகள் உங்களது இதய துடிப்பு, அம்னியோடிக் திரவம் சுழல்வது மற்றும் உங்கள் செரிமான பாதை உணவை செரிப்பதாகும்.

 

சிவப்புக் கொடிகள்

 

இப்போது உங்கள் இரட்டை, மூன்று அல்லது நான்கு மடங்கு சோதனை முடிவுகளை பெற்றிருப்பீர்கள். இந்த சோதனைகள் உங்கள் உடலில் பல்வேறு ஹார்மோன் அளவை அளவிடுகின்றன. முடிவுகள் அசாதாரனமாகவோ அல்லது உங்கள் வயது 35க்கு மேல் இருந்தாலோ அல்லது மரபணு குறைபாடு கொண்ட குடும்ப வரலாறு இருந்தாலோ, உங்கள் மருத்துவர், அம்னியோசென்டோசிஸ் அல்லது குரோனிக் வில்லஸ் சாம்பிலிங்க் (சி.வி.எஸ்) என்றழைக்கப்படும் மேலும் ஊடுருவக்கூடிய சோதனையை மேற்கொள்ள சொல்லலாம்.

இந்த சோதனைகள் 5% கருச்சிதைவு ஆபத்தை கொண்டிருப்பதால் இதை மேற்கொள்ளும் முன் இதன் சாதக பதகத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.

 

பாட்டிக் கதைகள்

 

அழகான, வெண்மையான குழந்தைகளை பார்த்தால் அதே போல் குழந்தை பிறக்கும் என மக்கள் கூறுவர். உங்கள் குழந்தையின் தோற்றம் உங்கள் மரபணு சார்ந்த்தாகும். குழந்தைகளின் புகைப்படம் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் அதை பாருங்கள். எப்படி இருந்தாலும் குழந்தை  கொள்ளை அழகுடன் இருப்பது உருதி.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!