• Home  /  
  • Learn  /  
  • உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 16
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 16

உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 16

29 Mar 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

வியக்கவைக்கும் மற்றொரு கட்டம்! கூடுதலாக, உங்கள் கர்ப்பம் வெளிப்படையாக தெரியும். ஒருவேளை நீங்கள் பளபளக்கலாம்.

 

உங்கள் குழந்தை இப்போது 16 செமீ நீளமும் தோராயமாக 135 கிராம்கள் எடையையும் கொண்டிருக்கும், ஒரு நடுத்தரமான அவகோடா ( வெண்ணை பழம்) அளவுக்கு. உங்கள் கர்ப்பப்பை இடுப்புக்குழிக்கு வெளியே இருக்கும் மேலும் தொப்புளை நோக்கி வந்திருக்கும்.

 

சில வருடங்களுக்கு முன்பு வரை, மருத்துவர்கள் ஒரு அளக்கும் டேப்பை கொண்டு தாயின் வயிற்றை சுற்றி அளந்து கர்ப்பகால வயதை கண்டறிவர். கருப்பையின் சுற்றளவே கர்ப்பத்தின் வயதை விளக்க கூடியதாக கருதப்பட்டது.

 

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 

உங்கள் அடிவயிற்றில் குமிழ்களை உணரலாம். இது உங்கள் குழந்தையின் ஆரம்பகால இயக்கங்களாகும் ஆனால் விவரிக்க முடியாது!

உங்கள் குழந்தை நகர்வதை உங்களால் இன்னும் உணரமுடியவில்லை என்றால் கவலை பட வேண்டாம். சில தாய்மார்களுக்கு கிட்டதட்ட 24 வாரங்கள் வரை குழந்தையின் இயக்கங்கள் தெரிவதில்லை. இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் – வயிற்றை சுற்றி அதிக கொழுப்பு, அதிக ஆம்னியொடிக் திரவம், முன்பக்கமாக நிலைகொண்டிருக்கும் நஞ்சுக்கொடி அல்லது கவனத்தை செலுத்த தவறிய மிகவும் பிசியான தாய்!

 

உடல் வளர்ச்சி

 

உங்கள் கர்ப்பம் சரியான எடையில் ஆரம்பிதிருந்தால், கர்ப்பத்தின்போது  நீங்கள் 10-12 கிலோக்கள் எடை கூடியிருக்க வேண்டும். இந்த எடை அதிகரிப்பு விகிதாசாரமானது அல்ல.,முதல் 20 வாரங்களில் 2 கிலோ அதிகரிக்கும் மீதமுள்ளவை பின்னர் ஏறும். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கலோரி அதிகமுள்ள உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் உணவுகளை உண்ணுவதை தவிர்த்திடுங்கள்! தாயின் எடை அதிகரிப்பு என்பது குழந்தையின் எடையில் அதிகரிப்பது என்று அர்த்தமில்லை. அதனால் ஆரோக்கியமாக உண்ணவும்.

 

உணர்ச்சி மேம்பாடு

 

இரண்டாவது டிரைமஸ்டர் பயணம் செய்ய ஏற்றதாகும் ஏனென்றால் உங்கள் உடம்பு கணமானதாக விகாரமாக இருக்காது என்பதுடன் கர்ப்பத்தின் அறிகுறிகளும் சமாளிக்க கூடியதாக இருக்கும்.

உங்கள் பயண திட்டங்களை உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். எளிதாக இருக்கும் விடுமுறை இடமாக, மருத்துவ வசதிகளுடன் ஒரு கர்ப்பிணியாக நீங்கள் மகிழ்ந்திருக்கும் இடமாக தேர்ந்தெடுங்கள்.

ஜன்னல் வழியாக மலைகளை பார்க்க விரும்பினால் ஒழிய ஒரு ஸ்கை(ski) ரிசார்ட்டை தேர்ந்தெடுப்பது சிறந்ததல்ல.

 

சிவப்பு கொடிகள்

 

கர்ப்பத்துடன் பயணிக்கும்போது கவனமாக உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். விடுமுறையின் போதே பல தாய்மார்கள் உடல் எடை அதிகரிக்கின்றனர். அதனால் சாப்பிடவேண்டும் என்று தோன்றும்போது அளவாக உண்ணுங்கள்! உணவு விஷமாவதை குறைக்க பச்சையாக உண்பது, சரியாக சமைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்கவும், நீர்ச்சத்து அதிகரிப்பதில் கவனம் செலுத்தவும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 கோப்பை நீராவது பருகுவதை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் ஆம்னியோடிக் திரவ அளவுகள் உங்கள் திரவ உட்கொள்ளல் மூலம் ஓரளவு பராமரிக்கப்படுவதுடன் நீர்சத்துடன் இருப்பது ஒட்டுமொத்த நலனுக்கும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

பாட்டி கதைகள்

 

கர்ப்ப காலத்தில் நீங்கள் இனிப்புக்கு ஏங்கினால் பெண் குழந்தை என்றும், புளிப்பு, கரகரப்பான உணவுகள் போன்றவற்றிற்கு ஏங்கினால் ஆண் குழந்தை என்றும் உங்கள் நலன் விரும்பிகள் கூறுவர். உங்கள் ஹார்மோன்களினால் ஏற்பட்டவை, இது உங்கள் குழந்தையின் பாலினத்துடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you