• Home  /  
  • Learn  /  
  • உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 18
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 18

உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 18

29 Mar 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

உங்கள் குழந்தை வேகமாக வளர்கிறது,உங்கள் தொப்பையும் தான்! உங்கள் குழந்தை இப்போது 20 செ.மீகள் நீளமும் தோராயமாக 150கிராம் எடையினையும் கொண்டிருக்கும். இந்த திடீர் வளர்ச்சி உங்கள் குழந்தையின் கொழுப்பு அடுக்குகள் வளர்வதால் தான் மேலும் இது சாதாரணமானது.

 

உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக,வலுவாக வெளிப்புற உலகிற்கு உணர்திறனோடு இருப்பதை  தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.உட்புற காதுக்கு செல்லும் ஒலி ஊடுருவும் எலும்புகள் வளர்கிறது,மேலும் உங்கள் குழந்தை அதிக ஒலிக்கு மறுமொழியளிக்கிறது.

 

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மிக விரைவாக உள்ளது.நரம்பு செல்கள் மற்றும் இணைப்புகளை உருவாக்குவதை தவிர, இந்த இணைப்புகளைச் சுற்றி மயலின் ஷீத் என்று அழைக்கப்படும் ஒரு கூடுதல் அடுக்கு உருவாகிறது.

 

மயலின் ஷீத் நரம்பு இணைப்புகளைப் பாதுகாக்கிறது மற்றும் நரம்பு செல்கள் வலுவாக மற்றும் வேகமாக செய்திகளைப் பரிமாறுகிறது. பிறந்த பிறகும் முதல் சில மாதங்களுக்கு மயலின் ஷீத் தொடர்ந்து வளர்கிறது.

 

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 

பல கர்ப்பமான பெண்கள் அடிக்கடி சிற்றுண்டி சாப்பிட விரும்புவர். மேலும் எது கிடைத்தாலும் சாப்பிடுவர்! அதைத் தவிர்க்க, உங்கள் குளிர்பெட்டியில் ஆரோக்கியமான பொருட்களை வைத்திடுங்கள்.

 

பெரிய ஒலி கேட்கும் போது உங்கள் குழந்தை பயப்படலாம் அது உங்களுக்கும் தெரியும்,அது உதைக்கும்! எனினும் அவர்கள் பறப்பது போல் தோன்றும்.

 

இது நீங்கள் மட்டுமே உணரக் கூடிய மாயாஜாலத் தருணமாகும். இன்னும் சில வாரங்களில் உங்கள் குழந்தையின் இயக்கங்கள் தெளிவாக தெரியும்.அதுவரை, பொருத்திருக்கவும்!

 

உடல் வளர்ச்சி

 

உங்கள் கர்ப்பம் இப்போது தெளிவாக தெரியும். கர்ப்பத்தினை படம்பிடிக்க இது சரியான தருணம்!

 

உங்கள் தினசரி உடற்பயிற்சியில் கீகல்களை சேர்த்து கொள்ளும் நேரமிது. இந்த பயிற்சிகள் மூன்றாம் மாதத்தில் இடுப்பு எலும்புகளை வலுவாக்கி, சிறுநீர் கட்டுப்படுத்தலைத் தடுக்கிறது (சிறுநீர் கட்டுப்பாடு இழப்பு)

 

பிரசவத்தின் போது இடுப்பு எலும்பு தள்ளிக்கொடுக்க இந்த கீகல் பயிற்சி உதவுகிறது. வலுவான இடுப்பெலும்பு பிரசவத்துக்குப் பின் நீங்கள் மீளவும் விரைவில் உங்கள் உருவம் பழைய நிலைக்கு மாறவும் உதவுகிறது.

 

உங்கள் மருத்துவருடன் கூடுதல் பயிற்சி பற்றி கலந்தாலோசிக்க மேன்மையான திட்டத்துடன் ஒட்டுமொத்தமாக வலுவடைதலில் கவனம் செலுத்தும் பயிற்சிகளைத் தொடங்குங்கள்.

 

உணர்ச்சி மேம்பாடு

 

உங்கள் குழந்தையால் உங்களை உணர முடியும், உங்கள் மகிழ்ச்சி, சோகம், மன அழுத்தம் அல்லது நிம்மதி ஆகியவற்றை உணர முடியும்! உங்கள் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு வாசிப்பது,இசையை கேட்பது அல்லது நண்பர்களுடன் இருப்பது போன்று ஏதாவது மகிழ்ச்சி தரும் செயலில் ஈடுபடலாம்!

 

மோசமான ஹார்மோன்களால் ஏற்படும் மன நிலை மாற்றங்களை சரி செய்ய சில அமைதியாகும் பயிற்சி வழக்கங்களைக் கொண்டிருப்பது உங்களை அமைதிப்படுத்தவும் தளர்வுறவும் உதவும்.

 

சிவப்புக் கொடிகள்

 

உங்கள் மருத்துவர் உங்களை பக்கவாட்டில் படுக்குமாறு அறிவுறுத்துவார். கருப்பைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாளங்கள் கருப்பையின் அடியில் செல்லும் போது போதுமான இரத்தம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இரு பக்கமும் படுப்பது நல்லது. எனினும் எப்போதாவது நேராக படுப்பது அல்லது ஓய்வெடுப்பது நன்றாக இருந்தால் கவலைப்பட வேண்டாம்.

 

இரவில் தூங்கும் போது உங்கள் தலை, தொப்பை, தொடை மற்றும் முதுகிற்கு ஆதரவாக இருக்கும் கர்ப்பத்திற்கான தலையணையை  வாங்கி உபயோகிக்கலாம். இந்த தலையணையை பாலூட்டும் போதும் பயன்படுத்தலாம்.

 

பாட்டி கதைகள்

 

கர்ப்ப காலத்தின் போது ஒரு தாயைப் பொறுத்தவரை கடுமையான குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் இருந்தால் குழந்தை நிறைய முடியுடன் பிறக்கும் என்று சொல்வர்.நிறைய முடியுடன் கூடிய பிறந்த குழந்தை அழகாக இருக்கும், ஆனால் முடி வளர்ச்சிக்கும் தாயின் குமட்டலுக்கும் தொடர்பில்லை.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you