29 Mar 2019 | 1 min Read
Sonali Shivlani
Author | 213 Articles
இந்த வாரத்தில் புலன்கள் மேம்பாடு மற்றும் அதிக வளர்ச்சியை பற்றியே! இப்போது உங்கள் குழந்தை 200 கிராம்கள் மற்றும் அவள்/அவனின் மொத்த நீளம் தலை முதல் பிட்டம் வரை 15சென்டிமீட்டர் ஆகும். இப்போதிலிருந்து பிறப்பு வரையும் உங்கள் குழந்தையின் எடை 15 மடங்கு அதிகமாகும்! கர்ப்பத்தினால் உங்கள் எடை கூடும் என்று சொல்ல தேவையில்லை. உங்கள் குழந்தையின் மூளை ஒரு அற்புதமான வேகத்தில் தொடர்ந்து வளர்கிறது. அடுத்த 20வாரங்களில், வளர்ச்சியடைந்த நியூரான்களுக்கிடையே மூளை பல இணைப்புகளை உருவாக்கும். இந்த செயல்முறையானது சைனாப்டோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பக் காலத்தில் சுமார் 17% சைனாப்டோஜெனிசிஸ் ஏற்படுகிறது மற்றும் சுமார் 83% பிறந்த பின் நடைபெறுகிறது.
உங்கள் குழந்தையின் புலன் வளர்ச்சியை உண்மையில் உங்களால் மேம்படுத்த முடியும். உங்கள் குழந்தையுடன் தொடர்ந்து பேசி, பாடிக் கொண்டிருங்கள் அல்லது இனிமையான இசையை ஒலிக்க விடவும்.
அடையாளம் மற்றும் அறிகுறிகள்
உங்கள் முகம், உள்ளங்கைகள், கழுத்து அல்லது அக்குளில் சரும நிற மாற்றத்தை கண்டால், கவலைப்பட வேண்டாம், இது மிகவும் சாதாரணமான மாற்றம் கர்ப்ப ஹார்மோன்களின் விளைவாகும். ஹார்மோன்கள் சீரானவுடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உங்கள் சருமம் பளபளக்கும்.
உடல் வளர்ச்சி
இப்போது நீங்கள் கர்ப்பத்தை பார்க்கவும் முடியும், உணரவும் முடியும், உங்கள் வயிறு மற்றும் பிட்டத்தில் கண்கூடான வளர்ச்சி தெரியும். குழந்தை கருவறையில் வளர போதுமான இடம் இருப்பதை உறுதி செய்ய பிட்டத்தின் அளவு அதிகரிக்கிறது.. இப்போது நீங்கள் இரண்டு மிக முக்கியமான உடற்பயிற்சியினைத் தொடங்க வேண்டும்- கீகல்கள் மற்றும் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி. கீகல்கள் உங்கள் இடுப்புப்பகுதி தசைகளை வலுப்படுத்தும் மேலும் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி நுரையீரல் திறனை உருவாக்கவும் வயிற்றை வலுப்படுத்தவும் செய்யும்; இரண்டுமே பிரசவம் மற்றும் பிறக்கும் போது மிக முக்கியமான இரண்டு விஷயங்களாகும்.
உணர்ச்சி மேம்பாடு
உங்களுக்கு பிடித்த இனிமையான பாடல்களை ஒவ்வொரு நாளும் இசைக்க விடுங்கள், குறிப்பாக நீங்கள் ஓய்வெடுக்கும் போது. குழந்தை பிறந்ந உடன், புதிதாக பிறந்த குழந்தை கூட, அதே பாடல்களை அவள்/அவனால் அடையாளம் காண முடியும் என்பதை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்! அதனால் பிரசவத்திற்கு பின், நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ அமைதியாக வேண்டும் என்றால், அந்த இசையை இசைக்க விடவும். நல்ல குறிப்பு தானே!
சிவப்புக் கொடிகள்
உங்கள் உள்ளங்கைகளில் அல்லது கால் பாதத்தில் அரிப்பு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். நீங்கள் சீக்கிரம் பணக்காரராகப் போகிறீர்கள் என்பது இதற்கு அர்த்தமல்ல, இது கல்லீரல் செயல்பாட்டின் ஒரு பிரச்சனையை குறிக்கலாம் மேலும் இது மருத்துவர் கவனிக்க வேண்டிய ஒன்று.
பாட்டி கதைகள்
மிகவும் பிரபலமான பாட்டி கதைகள் ஒன்று சொல்கிறது, பிட்டத்தின் வளர்ச்சி அதிகரித்தால் பெண் குழந்தை என்றும் அதுவே வயிற்றின் வளர்ச்சி அதிகரித்தால் ஆண் குழந்தை என்றும் கூறுவர். பொறுமையாக இருங்கள், இது முற்றிலும் கட்டுக்கதை. பிட்டத்தின் அளவு எந்தக் குழந்தையாயிருந்தாலும் கர்ப்பத்தின் போது அதிகரிக்கவே செய்யும். வயிற்றின் வடிவம் மற்றும் அளவு கருவில் குழந்தை எந்த வாக்கில் இருக்கிறது என்பதை பொறுத்தே.
A