• Home  /  
  • Learn  /  
  • ஊட்டச்சத்து மிக்க அரோகியமான குழந்தைகளுக்கான உணவு பொருட்கள்
ஊட்டச்சத்து மிக்க அரோகியமான குழந்தைகளுக்கான உணவு பொருட்கள்

ஊட்டச்சத்து மிக்க அரோகியமான குழந்தைகளுக்கான உணவு பொருட்கள்

29 Mar 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 
1

இன்ஸ்டன்ட் ஸ்ப்ரௌட்டட் ராகி மிக்ஸ்

செயற்கை உப்பு, சர்க்கரை,சுவைகள் சேர்க்கப்படாத,இந்த கலவை ஆறு மாதங்களுக்கு மேல் உட்பட்ட குழந்தைகளுக்கு சிறந்தது. ராகி ஒரு சிறந்த தானியமாகும், கால்சியம் மற்றும் இரும்பின் அளவு அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு நல்லது. இது ஊட்டச்சத்து மிக்க அரோகியமான குழந்தைகளுக்கான உணவு.
2

சல்பர் ஃப்ரீ ஆர்கானிக் டிரை ஆப்ரிகாட்டுகள்

ஆப்ரிகாட்டுகள் அனீமியாவை தடுக்கும், எளிதாக செரிமானமாகும்.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மிதமான சூடு நீரில் ஊறவைத்து உண்ணலாம்.  இயற்கை சர்க்கரை உள்ளதால் இது ஒரு அருமையான சிற்றுண்டி உணவு வகை.
3

மல்டிக்ரைன் ஹெல்த் ட்ரிங்க்

ராகி, ஜவார், பஜ்ரா, எள் விதைகள், பாதாம், முந்திரி பருப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்து உணவுகள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இந்த தூள் ஒரு சக்தி நிரம்பிய பானம்.ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி பொடியை சேர்த்து கொடுப்பது உகந்தது.
4

ஓட்ஸ், தேன், வாழை மற்றும் ரெய்ஸின் குக்கீகள்

இயற்கை பொருட்கள் மற்றும் உண்மையான வெண்ணெயை கொண்டு செய்யப்பட்ட, இந்த குக்கீஸ், ஒரு முழுமையான உணவு. நீங்கள் உங்கள் குழந்தையுடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்த ருசியான குக்கீகள் கொண்டுச் செல்ல ஒரு நல்ல ஸ்னாக்.
5

இன்ஸ்டண்ட் கிச்சடி மிக்ஸ்

சூடான நீரில் இந்த கலவையை சமைப்பதன் மூலம் உங்கள் குழந்தைக்கு சத்துள்ள ஒரு உணவு வகை. இந்த  கலவையில் அரிசி மற்றும் பருப்பு உள்ளது. நீங்கள் வேண்டுமானால் இத்துடன் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளாம்.
6

சீரியல், ஓல் வீட் ,மூங்கு, ரைஸ்,ஸ்பினாச்,டுமாட்டோ வித் மில்க்

பாலில் இந்த கலவையை சேர்த்து உங்கள் குழந்தையின் தினத்தைத் தொடங்குங்கள். முழு கோதுமை, அரிசி மற்றும் காய்கறிகளின் கலவை உங்கள் குழந்தையை சில மணிநேரதிற்கு பசிக்காமல் வைத்திருக்கும்.  இந்த தானியத்தில் எந்த செயற்கை சுவைகளும் சேர்க்கப்படவில்லை. மேலும் பழுப்பு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
7

மில்லெட் பான் கேக்

குழந்தைகள் சாக்லேட்டை நேசிக்கிறார்கள். இந்த ருசியான பான்கேக்கை சாப்பிட ஒருபோதும் நோ என்று சொல்ல மாட்டார்கள். இந்த கலவை கம்பு, வாழை, ஓட்ஸ், மற்றும் ஜொவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மிகவும் ஆரோக்கியமான உணவு வகை.
8

ஆர்கானிக் ஆஜவேய்ன் ஜாகெரி டீதிங் ஸ்டிக்ஸ்

இந்த டீதிங் குச்சிகளில் மைதா கிடையாது, முழு தானியங்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்த கலவை வெண்ணெய் மற்றும் நிலக்கடலை  எண்ணெய் கொண்டிருக்கின்றன. எனவே,  குழந்தைக்கு ஆரோக்கியமான ஒரு ஸ்னாக்ஸ்.
9

பாஜ்ரா மற்றும் பூசணி விதைகள் கஞ்சி

கஞ்சி உங்கள் நாளை தொடங்க சிறந்த உணவுகளில் ஒன்று. இதில் உப்பு, சர்க்கரை அல்லது பால் பவுடர் சேர்க்கப்படவில்லை.இதை தயாரிப்பதற்கு வெறும் 5 நிமிடங்கள் ஆகும். அரிசியை விட பாஜ்ரா 5து மடங்கு அதிகம் என்பதால், இது உங்கள் குழந்தைகளின் எடையை உயர்த்த உதவுகிறது.
10

ஓட்மீல் மிக்ஸ்

ஓட்ஸ் ஃபைபர் நிறைந்தது.உங்கள் குழந்தையின் செரிமான திறனை உயர்த்தும். இந்த டிஷ்ஷை பழங்கள் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து உண்ணும்போது ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது.
11

அஸோர்டெட் வெஜ் சூப்

1 1/2 டீஸ்பூன் சூப் கலவையில் (14 கிராம்) 250 மில்லி தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் ஒரு துண்டு வெல்லம் அல்லது  பேரிச்சை தூள் சேர்த்து பருகவும்.

  #babychakratamil

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you