ASD க்கான சிகிச்சை முறைகள்

ASD க்கான சிகிச்சை முறைகள்

2 Apr 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 

உங்கள் குழந்தை வளர்ச்சியில் தாமத அறிகுறிகளுடன்  கண்டறியப்பட்டால்,உங்கள் பிள்ளையின் மருத்துவரை அணுகவும். அவர் குழந்தைக்கு ஆட்டிஸம் இருக்கும் என்று கருதினால் ஆட்டிஸம் டிஸ் ஆர்டர் ஸ்பெக்டரம் பரிசோதனைகளுக்காக நிபுணர்களை பரிந்துறைக்கலாம். ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே சிகிச்சை அளிக்கும்போது குழந்தைகள் தங்களது மைல்கற்களை சரியாக அடையவும் விரைவான வளர்ச்சி பெறவும் உதவுகிறது.

 

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் (ASD) பரவலான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.சில குழந்தைகள் கடுமையான புலனுணர்வு தாமதங்களைக் காட்டலாம், மற்றவர்கள் அத்தகைய சிக்கல்களைக் காட்டாமல் அன்றாட நடவடிக்கைகளை நன்றாக செய்வதுபோல் தோன்றலாம்.

 

ASD நோய் இருக்கிறது என்பதை அறிய ஒரு குழந்தை நடத்தையில் காண்பிக்கும் வளர்ச்சியின் அறிகுறிகளை முதன்மையாகக் கொண்டுள்ளது. எனவே குழந்தை நல மருத்துவர் , ஒரு உளவியல் நிபுணரின் ஆலோசனையை பரிந்துறைக்க நேரிடலாம். அவர் ஆட்டிசதிர்கென தனிப்பட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறையை பரிந்துறைப்பார்.

 

ஆட்டிஸத்திற்கான கண்டறிதல் சோதனைகள் பின்வருமாறு:

 

உடல் மற்றும் நரம்பியல் பரிசோதனை

குழந்தையின் அறிவாற்றல் திறன்களின் மதிப்பீடு

பிள்ளைகள் தங்கள் வயதிற்கேற்ற பேச்சு மற்றும் மொழி திறமைகள் ஒப்பீடு.

நோயாளி நடத்தை மற்றும் குடும்ப வரலாற்றைப் பற்றிய கேள்விகள்

தனித்தன்மை வாய்ந்த பலம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆழமான மதிப்பீடு செய்யப்படுகிறது

குழந்ததைக்கு ASD க்கான சிகிச்சை முறையை தீர்மானிக்க இந்த மதிப்பீடு மிக முக்கியம்.

சிகிச்சை முறைகள்

 

உங்கள் பிள்ளையின் புரிந்துணர்வுக்குப் பிறகு ,திறமைகள் மற்றும் தாமதங்களுக்கு ஏற்றாற்போல் ASD சுற்றியுள்ள சிகிச்சை முறைகள் பரிந்துறைக்கப்படுகின்றன.உங்கள் பிள்ளையின் பலத்தைச் உணர்ந்து அவர்களின் பலவீனங்களைப் பற்றிப் யோசித்து ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக, உங்கள் குழந்தைகள் ஏன் வித்யாசமாக நடந்துகொள்கிறரர்கள் என்பதை புரிந்து கொண்டு பின்னர் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை காற்றுக்கொடுப்பார்.உங்கள் மருத்துவ உளவியலாளர்  இந்த விஷயங்களைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பார். உங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் செய்ய பயிற்சிகள் பரிந்துறைப்பார்.

 

நீங்கள் இந்த சிகிச்சைகள் பற்றி மேலும் அறிய www.autismconnect.com

 

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.