கிரோத் ஸ்பர்ட் என்றால் என்ன?

கிரோத் ஸ்பர்ட் என்றால் என்ன?

12 Apr 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

குழந்தை பிறந்த 2 நாட்களிலேயே கிரோத் ஸ்பர்ட் ஏற்படலாம்.

 

குழந்தை பருவத்தில், குழந்தைகள் மிகவும் வேகமாக மாற்றங்களை நிறைய கடந்து வருகின்றனர். இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை வளர்ச்சியை அதிகரிக்கின்றன. அத்தகைய மாற்றங்களுக்கு பெற்றோர் தயாராக இருப்பதில்லை, அத்தகைய மாற்றங்கள் சாதாரணமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை புரிந்துகொள்ள சில உதவி தேவைப்படலாம்.

 

கிரோத் ஸ்பர்ட் எப்போது ஏற்படுகிறது?

 

ஒவ்வொரு குழந்தைக்கும் இது வேறுபடுகிறது. குழந்தைகள் அனைவரும் ஒரே விகிதத்தில் வளருவார்கள் என்று கருதுவது நியாயமற்றது. அவர்கள் நாள்காட்டி அல்லது கடிகாரங்களுடன் வரவில்லை; எனவே, அவர்களின் வளர்ச்சி விகிதம் நிலையான தரவரிசைகளிலிருந்து வேறுபடலாம். எனவே அது அசாதாரண அறிகுறி என்று அர்த்தம் இல்லை.

 

பொதுவாக, குழந்தைகளுக்கு கிரோத் ஸ்பர்ட் பின்வரும் காலங்களில் ஏற்படும்:

 

நாள் 2: இது ஒரு குழந்தைக்கு தாயின் கர்ப்பத்தை விட்டு வெளியேறியபின்னர் ஏற்படும். பொதுவாக எதிர்ப்பு அடையாளம் என்று கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில், குழந்தைகளின் குடலில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் ஏற்படும்.

 

பொதுவாக கிரோத் ஸ்பர்ட் ஏற்ப்படும் நேரம்

 

2-3 வாரத்தில்

4-8 வாரத்தில்

3 மாதத்தில்

6 மாதத்தில்

9 மாதத்தில்

1 வருடத்தில்

 

 

கிரோத் ஸ்பர்டின் போது போது என்ன நடக்கிறது?

 

இந்த முக்கிய அறிகுறிகளை நீங்கள் பார்க்கலாம்.

 

பசி அதிகரிக்கும்:

 

குழந்தையின் நீளம் மற்றும் எடை அதிகரிப்பதனால் அதிக கலோரி தேவைப்படுகிறது.குழந்தை அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்று நினைக்கும், சில நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் உண்ண வேண்டும் என்று நினைக்கலாம். முதல் ஆறு மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் பரிந்துரைக்கப்படுவதால், குழந்தையின் வளரும் பசிக்கு தாய்ப்பால் போதுமானதாக இருக்காது என்று ஒருவர் கவலைப்படலாம். இருப்பினும், பால் உற்பத்தியும் விகிதத்தில் தேவைக்கேற்ப அதிகரிக்கும்.

 

அதிகரித்த அசௌகரியம்:

 

பெற்றோர்கள் அடிக்கடி தங்கள் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது என்று புகார் செய்யலாம், மேலும் பசி ஆற்றவும் கடினமாக உள்ளது என்றும் நினைக்கலாம். தாய்ப்பாலூட்டும் போது சில குழந்தைகள் பால் குடிக்க மறுக்கலாம்.

 

தூக்க வழக்கத்தில் மாற்றங்கள்:

 

கிரோத் ஸ்பர்டின் முடிவின்போது,  பல குழந்தைகள் நீண்டநேரம் தூக்கத்தில் செலவிடுகின்றன. ஏனென்றால்  குழந்தைகளுக்கு ஓய்வெடுக்கும் போது எண்டோகிரயின் அமைப்பு ஹார்மோன்களை வெளியிடுகிறது. அந்த நேரத்தில் குழந்தையை எழுப்பக்கூடாது என்பது அவசியம். இந்த காலகட்டங்களில், குழந்தைகளுக்கு 1 செ.மீ. நீளமும், 24 மணிநேரங்களில் 1 முதல் 3 பவுண்டுகள் வரை எடையும் கூடும்!

 

கிரோத் ஸ்பர்ட் ஒரு சாதாரண, உடலியல் நிகழ்வு.எனினும் இந்த அறிகுறிகள் வளர்ச்சியைத் தூண்டுவதா, இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள குழந்தைப் நல மருத்துவரை  பார்க்க வேண்டியது  அவசியம்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you