குழந்தைகளில் பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது அவசியம்

cover-image
குழந்தைகளில் பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது அவசியம்

 

பல் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் என்பது பெற்றோருக்கு முக்கியமான ஒரு கவலையாக இருக்கிறது. குழந்தை பல் பராமரிப்பு இல்லை எனில் குழந்தை உடல் மற்றும் மன நலத்தை பாதிக்கிறது. பல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதால் பிள்ளைகள் உணவுகளை நன்றாகக் சாப்பிட முடியாமல் போகிறது, வலி ஏற்படுவதால் உணவை கடித்து உண்ணமுடியாமல் போகலாம்.

 

போதுமான பல் பராமரிப்புடன், பல் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக உங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் பல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

 

எந்த வயதில் குழந்தையின் முதல் பல் பராமரிப்பு பரிசோதனை இருக்க வேண்டும்?

 

ஆரம்பத்தில், முதல் பல் முளைத்த உடன் குழந்தை பற்களை பற்பசை கொண்டு தேய்த்து கவனிப்பை ஆரம்பிக்க வேண்டும். 6 வயதில்  ஏற்படும் பல் பிரச்சினைகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.குழந்தைகளுக்கு 3 வயதிற்குள் 20 பால் பற்கள் முளைக்க வேண்டும்.6 முதல் 11 வயதிர்குள் இந்த பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கிறது.

 

குழந்தைகளின் பற்கள் ஆரோக்கியத்திற்கான குறிப்புகள்.

 

6 மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

 

 

குழந்தைகளில் பல் சிதைவு: காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

 

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) படி, ஆரம்பகால குழந்தை பருவ பல் சொத்தை 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் காணப்படும் நீண்டகால குழந்தை பருவ நோயில் மிகவும் பொதுவான வடிவம் ஆகும். ஒரு பல்மருத்துவரை பார்ப்பதற்கு  மிகவும் பொதுவான காரணம், குழந்தைகளில் உள்ள பல் சொத்தை ஆகும். இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், தொற்றுநோயையும் வலியையும் ஏற்படுத்தும்.

 

பல் சொத்தை ஆகும்போது பற்கள் மேற்பரப்பில் உள்ள இனாமலை சேதப்படுத்தும்.சேகரிக்கப்படும் பாக்டீரியாவால் தயாரிக்கப்படும் அமிலங்கள் காரணமாக பற்சிதைவை விளைவிக்கும். 5 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளில் பல்மருத்துவ பிரச்சினைகள் பொதுவாக காணப்படுகின்றன, பெரும்பாலும் போதிய வாய்வழி கவனிப்பு இல்லாமை காரணமாக குறைந்த சமூக-பொருளாதார பின்னணியில் இருப்பவர்களிடையே இது காணப்படுகிறது. நீரிழிவு, பிரீ டேர்ம் பர்த் போன்ற நிலைகள் குழந்தைகளில் பல் சொத்தை ஏற்படுத்துகின்றன.

 

குழந்தைகளில் பிற பொதுவாக காணப்படும் பல் பிரச்சனைகள் பற்கள் முளைக்கும் போது ஃவுளூரின் அதிகப்படியான உட்கொள்ளல் விளைவாக எனாமல் ஹைப்போமினெரலிஸம் அல்லது  ஃவுளூரோசிஸ் (பளிச்சென்ற பற்சிப்பி) ஏற்படுகிறது. இதனால் எனாமலில் கடினத்தன்மை குறைந்து எளிதில் உடைந்து போகிறது.

 

குழந்தைகளில் பல் பிரச்சனைகளைத் தடுக என்ன வழி.

 

சரியான நேரத்தில் எடுக்கப்படும் பொருத்தமான நடவடிக்கைகள்  பல்லில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுக்கலாம்.

 

டெண்டல் சீலேண்ட் பயன்படுத்தி குழந்தைகளில் பல் சிதைவை தடுக்க முடியும்.  இது ஒரு திரவ வடிவில் பயன்படுத்தப்படுகிறது, இதன் காரணமாக பற்களின் குழி மற்றும் விரிசல்களில் அது எளிதாக பரவுகிறது. ஃவுளூரைடு வார்னிஷ் என்பது பல் எனாமலை வலு படுத்தும்.

 

குழந்தை பல் பராமரிப்பு குறிப்புகள்

 

○பல் முளைக்கும் முன், குழந்தையின் ஈறுகளை சுத்தமான, மென்மையான மற்றும் ஈரமான துணியால் குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும்.

 

○ஒரு மென்மையான தூரிகை மூலம் முதல் பல் முளைத்த பிறகு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு சிறிய பட்டாணி அளவிலான ஃவுளூரைடு பற்பசையால் உங்கள் 3 வயது சிறுகுழந்தையின் பற்களை குறைந்தது ஒரு நாளுக்கு இரண்டு முறை துலக்க வேண்டும். பல்மருத்துவர் அறிவுறுத்துவதால் 3 வருடங்களுக்கும் குறைவான குழந்தைகளில் ஃவுளூரைடு பல் பசைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

 

○குழந்தைககள் பாட்டிலை பால் குடிக்கும் போது வாயில் வைத்தபடியே தூங்குவதை தவிர்க்க வேண்டும்

○தாய்ப்பால் பாதுகாப்பானது என்றாலும், 4 முதல் 6 மாதங்கள் வரை தி உணவு பொருட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இரவு நேர பாலூடலை படிப்படியாக குறைக்க வேண்டும்.

முறையான பல் பாதுகாப்பு உங்கள் குழந்தைக்கு போதியளவு ஊட்டச்சத்துடன் தொடங்குகிறது. காய்கறிகள் மற்றும் பழங்கள், பால், இறைச்சி, பாலாடை போன்ற சமச்சீர் உணவுகள் உங்கள் பிள்ளையின் பற்கள் வலுவாக வைக்க உதவும்.

பிஸ்கட், ரொட்டி மற்றும்  பாஸ்தா போன்ற சர்க்கரை உள்ளடக்க உணவை உட்கொள்வதை கட்டுப்படுத்தவும்.

குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கு மற்றவர்களால் பயன்படுத்தப்படும் கரண்டி மற்றும் தட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இது குழந்தைகளின் தொற்றுநோயை அதிகரிக்கிறது.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!