18 Apr 2019 | 1 min Read
Mausam Pandya
Author | 24 Articles
பெற்றோரின் அன்பு தன் குழந்தையிடம் எவ்வளவு இருக்கிறது? அதன் ஆழம் யாராலும் அளக்க முடியாது. அதிக அன்பு இருந்தால், அதிக பலன் உண்டு. அன்பான வார்த்தை தைரியத்தைக் கூட்டுவது போல, கடுமையான வாக்குகள் நல்ல உறவை முறியடிக்கவும் செய்யும். உங்களுக்குரிய சக்தி என்ன என்பதை இந்த கட்டுரையில் கண்டறியவும்.
உணர்ச்சி பூர்வமான பந்தம்
குழந்தைகளுக்கு எப்போதுமே அதிகமாக மனநிலை ஊஞ்சலாடும். ஒரு நேரம் கலகலவென சிரித்துக்கொண்டே இருந்தாலும், மறுநேரம் தேம்பி தேம்பி அழவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான ஒரு ஆதரவு நிறைந்த ஒரு சூழலை உண்டாக்க முடியும். உணர்வு பூர்வமாக நல்ல ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ வளர்வதற்கு, அவர்கள் நம்மிடம் எல்லா கருத்தையும் தெரிவிக்க முழு சுதந்திரம் தர வேண்டும். நாம் முடிந்த அளவு அவர்களை, நல்ல செயல் செய்யும்போதெல்லாம் பாராட்ட வேண்டும். அப்போதுதான், அவர்கள் தவறு செய்தாலும் நாம் அவர்களை சரியான வழியில் வழி நடத்த முடியும். நன்றாக கலகலப்பாக பேசி பழகுவதன் மகத்துவத்தை நாம் அவர்களுக்குப் படிப்படியாகக் கற்றுத்தர வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் அவர்கள் மனதில் வேர் போல பதிந்துவிடும். ஆதலால், நம் ஒவ்வொரு வார்த்தைகளும் மெதுவாகவும், ஆக்கபூர்வமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
கல்விநிலை
கற்றல் என்பது பெரும்பாலும் ஸ்கூலுக்கு வெளியில் தான் நடக்கும். படிப்பதற்கான ஆசை பிள்ளைகளின் மனதில் வர, பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். முடிந்தவரை அவர்களுடன் நீங்கள் நேரம் கழிக்க வேண்டும். ஸ்கூலில் என்ன நடந்தது, எப்படி வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டனர், அதே போல அவர்களுடன் இருந்து அவர்கள் பேசுவதை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். பெற்றோராக நமக்கு படிக்கும் பழக்கம் இருந்து, புதிதாக எதையும் கற்க விரும்பினால், நம் பிள்ளைகளும் நம்மை போலவே படிப்பதிலும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுவர்.
உணவு பழக்கம்
பெற்றோராக நம் பிள்ளைகளின் உணவு பழக்கத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறோம். சரியான நேரத்தில் சரியான அளவு சத்துள்ள உணவை அருந்துகிறோமா? நாம் எப்படியோ, அப்படிதான் நம் குழந்தைகளும். குடும்பத்துடன் சேர்ந்து உட்கார்ந்து வீட்டு சாப்பாடு சாப்பிடுவதையே கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடல் நிலை
நாம் எப்படி நம் உடம்பைப் பத்திரமாக பார்த்துக் கொள்கிறோமோ, அப்படிதான் நம் குழந்தையும் தனது ஆரோக்கியத்தைக் கண்காணித்துக் கொள்ளும். நாம் சோம்பேறி என்றால், நம் குழந்தையும் சோம்பேறியாகவே வளரும். நாம் சுறுசுறுப்பாக நடக்கவும், சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், நம் குழந்தைகளும் நம்மைப் பின்பற்றுவர்.
பிரச்சனை தீர்க்கும் திறமை
நாம் நம் குழந்தைகளை எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும். எப்படி பிரச்சனையை நேரிடுவது, எப்படி தீர்ப்பது. எல்லாம் அவர்களையே நேரடியாக எதிர்கொள்ள வைக்க வேண்டும். அவர்கள் தவறாக நேரிட்டாலும் சரி. ஆனால், தவறாமல் நேரிட வேண்டும். அவர்கள் எப்படி ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறார் என்று நாம் கண்காணிக்க வேண்டும். அவர்களைத் தனித்து நேரிடுமாறு கற்றுத் தந்தால் அவர்களுக்கு மனதிலே ஒரு தைரியம் பிறக்கும். எதையும் சமாளித்து விடலாம், சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உடனடியாக பயப்படாமல் தீர்வு காணும் திறனை வளர்த்துக் கொள்வர். தன்னம்பிக்கையும் தலைத்தூக்கும்.
அணுகுமுறை
ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியின்படி, வெற்றி என்பது 88% அணுகுமுறையும் 12% கல்விநிலையும் சேர்ந்ததாகும். அதற்கு அர்த்தம் கல்விக்கு மதிப்பில்லையா? அதன் அர்த்தம் அப்படியல்ல. அணுகுமுறைக்கு சற்று முக்கியத்துவம் அதிகம். அவ்வளவுதான். நம் குழந்தைக்கு சரியான அணுகுமுறை இருந்தால், அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்று நீங்கள் மனதில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
ஆன்மீகம்
பெற்றோராக நம் குழந்தையின் வாழ்வில் நாம் மிக பெரிய பங்கை வகிக்கிறோம். நாம் தேர்வு செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். நாம் சரியாக பிரார்த்தனை செய்தாலோ, கோவிலுக்குப் போனாலோ, நேரான வாழ்கையை மேற்கொண்டாலும், நம் குழந்தை நாம் செய்வதையே பழகிக்கொள்ளும்.
குழந்தைகள் கூடு கட்டும் மரமாக பெற்றோர்கள் தங்களைக் கருதிக் கொள்ள வேண்டும். வானத்தை எட்டிப் பிடிக்க உதவும் மலையாக நாம் அவர்கள் கண்ணில் தெரிவோம். குழந்தையின் எதிர்காலத்தை நாம் உருவாகுகிறோம். அவர்கள் கண்முன் நாம் ஒளிவட்டமாக தெரிய வேண்டும். அதுதான் நம் சக்தியும் கூட.
A