• Home  /  
  • Learn  /  
  • உங்களின் மார்புகாம்பு (நிப்பிள்) தட்டையாகவோ அல்லது தலைகீழாகவோ இருக்கிறதா? – என்ன செய்வது?
உங்களின் மார்புகாம்பு (நிப்பிள்) தட்டையாகவோ அல்லது தலைகீழாகவோ இருக்கிறதா? – என்ன செய்வது?

உங்களின் மார்புகாம்பு (நிப்பிள்) தட்டையாகவோ அல்லது தலைகீழாகவோ இருக்கிறதா? – என்ன செய்வது?

18 Apr 2019 | 1 min Read

Sonali Shivlani

Author | 213 Articles

 

தட்டையான அல்லது தலைகீழான மார்புகாம்பு என்பது ஒரு பெரிய பிரச்சனைதான். பல தாய்மார்களுக்கும், தாயாக போகும் பெண்களுக்கும் இது சமாளிப்பதென்பது கடினம்தான்.

கர்ப்பமானதிலிருந்து, உங்கள் உடல் தாய்ப்பால் உற்பத்திக்குத் தயாராகும். ஆனால் குழந்தை பிறந்தவுடன் உங்களின் மார்புகாம்பு தலைகீழாகவோ தட்டையாகவோ இருப்பதைக் கண்டால், அதுவும் தாய்பபால் உற்பத்தி இருந்தும் குழந்தைக்கு கொடுக்க வழியில்லை என்றால் அவ்வளவுதான். சகித்துக் கொள்ளவே முடியாது. தாய்மார்களுக்கு அதுவே மிகப்பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

 

தட்டையான அல்லது தலைகீழான மார்புகாம்பு என்றால் என்ன?

 

மார்பில் ஏரியோலா என்ற ஒரு பகுதி இருக்கிறது. மார்புகாம்பைச் சுற்றியுள்ள பகுதியை ஏரியோலா என்று கூறுவர். மார்புகாம்பு ஏரியோலா பகுதிக்கு ஏற்ப தட்டையாக இருந்தாலோ, அல்லது தலைகீழாக ஏரியோலா பகுதிக்குள் நுழைந்திருந்தாலோ, அதற்கு தட்டையான அல்லது தலைகீழான மார்புகாம்பு என்று பெயர். சில பெண்களில் தூண்டுதல் மூலமாக நிப்பிள் என்ற மார்புகாம்பு தானாகவே வெளியில் பிதுங்கி வரும். சில பெண்களில் அப்படி பிதுங்காமலும் போய்விடும். குழந்தை தாய்ப்பால் அருந்த தயாராகும்போது, தனது சிறிய வாயை நன்றாக திறந்து ஒரு பெரும்பகுதியான தாயின் ஏரியோலா பகுதியை தன் வாயால் சூப்ப ஆரம்பிக்கும். அப்படி செய்யும்போது தன் நாக்கைப் பயன்படுத்தி, நிப்பிளை அழுத்தி, அதன் வாயிலாக நல்ல பிடி கிடைக்கும். அப்படி செய்யவே, குழந்தையால் நல்ல படியாக தேவையான அளவு தாய்ப்பால் அருந்த முடிகிறது.

 

அதே நேரம் அந்த நிப்பிள் தட்டையாகவோ தலைகீழாகவோ இருந்தால், குழந்தைக்கு பால் அருந்த ஒரு பிடி கிடைக்காமல் போகும். அதன் விளைவோ, தேவையான அளவு தாய்ப்பால் அருந்த முடியாமல் போகும்.

 

இது ஒரு பிரச்சனையா? கர்ப்ப காலத்திலேயே கண்டறிய முடியுமா?

 

பல வல்லுனர்களும் ஆராய்ச்சிகளும், நிப்பிள் என்பது வெறும் ஒரு தாய்ப்பால் வெளியேறும் பாதை தான் என்று தெரிவித்துள்ளனர். தாய்மார்களுக்கு இந்த கோளாறு இருந்தாலும், அவர்களால் நல்லப்படியாக தாய்ப்பால் கொடுக்க முடியும். ஆனால் அவர்களுக்கு சிறிய உதவி தேவைப்படும். சற்று பொறுமையும் அவசியப்படும்.

 

எதுவாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் கண்டறிவதே நல்லதாகும். இந்த கோளாறு கண்டறிய பட்டாலும், உங்களை நீங்களே தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.

 

இதைக் கண்காணிக்க 36-37 வாரங்கள் வரை காத்திருப்பதே உத்தமம். கர்ப்ப காலத்தில் நிப்பிள் தூண்டுதல் என்பது கர்ப்பப்பை சுருங்குதலையும் தூண்டிவிடும். ஆதலால் டெலிவரி சமயத்தில் தான் இந்த செயலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

நிப்பிளை சற்று தீண்டிப் பார்க்கவும். அல்லது அப்பகுதியில், ஐஸை தடவவும். நிப்பிள் நிமிர்ந்திருக்க வேண்டும். அதற்குபின், உங்கள் விரல்களால் லாட்ச் உருவாக்க பாருங்கள். அதாவது மெதுவாக மார்பை குழந்தைக்கு பாலூட்டுவது போல் சுருக்கிப் பாருங்கள். அப்படி செய்யும்போது உங்களின் நிப்பிள் நிமிர்ந்திருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால், அதாவது நிப்பிள் தட்டையாகவே இருந்தால், பின்வரும் குறிப்பை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

 

மார்பை எப்படி மசாஜ் செய்வது?

 

கர்ப்ப காலத்தில், ஒவ்வொரு நாளும் சில தடவையாவது உங்கள் மார்பை மெதுவாக மசாஜ் செய்யவும்.

  • குழந்தை பிறந்த பிறகு, ஒவ்வொரு தடவை பாலூட்டும் முன்பு, நிப்பிள் வெளியில் பிதுங்கும் வண்ணம் மசாஜ் செய்யவும். அப்போதுதான் உடனே தாய்ப்பால் ஊட்ட எளிதாக இருக்கும்.
  • தாய்ப்பால் ஊட்டும் முன், நிப்பிள் சரியான வடிவில் இருக்க நிப்பிள் புல்லர் அல்லது மார்பின் பம்ப்இதில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்
  • ஏரியோலாவைVஎன்ற வடிவில் பிடித்துக் கொள்ளவும். அப்போதுதான் குழந்தையால் எளிதாக தாய்ப்பால் அருந்த முடியும்.
  • தாய்ப்பால் ஊட்டுதலுக்காக, ஒரு தாய்ப்பால் வல்லுனரிடம் இருந்து தகுந்த ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.

 

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை  முறைகளையும் பிரயோகித்த பிறகு, நீங்கள் நிப்பிள் ஷீல்ட் என்பதையும் குழந்தைக்குப் பாலூட்ட பயன்படுத்தலாம். ஆனால் ஒரு குறிப்பை மட்டும் ஞாபகத்திற்கு வைத்துக் கொள்ளவும். இந்த நிப்பிள் ஷீல்ட் உபயோகிக்க நீங்கள் உங்கள் குழந்தையைப் பழக்கப்படுத்தி இருந்தால், அந்த குழந்தையால் அப்பழக்கத்தை எளிதில் விட முடியாமல் போகும். நீங்களும் இதை தாய்ப்பால் ஊட்டும் காலம் வரை பயன்படுத்த வேண்டி வரும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.