22 Apr 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
ஆமாம். நீங்கள் கேட்டது சரிதான். ஆட்டிசம் ஆண்களுக்காக ஒரு ஆன்லைன் மேட்ரிமோனி தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர் யார் என்று தெரியுமா? ஐந்து மாம்களால் சேர்ந்து துவங்கப்பட்ட சைட். இந்த ஐந்து மாம்கள் மும்பை, சென்னை, கோயம்பத்தூர், மற்றும் பெங்களூரில் வசிக்கின்றனர். இவர்கள் ஐந்து பேரும் சமூக வளைத்தளம் மூலம் தமது படித்து முடித்து சம்பாதிக்கும் மகன்களுக்காக மணமகள் தேடுகின்றனர்.
முதலில் இந்த ஐந்து மாம்கள் ஒரு வாட்சப் குரூப் மூலம்தான் தொடங்கினர். அதற்கு பின் ஃபேஸ்பூக்கில் ஒரு மேட்ரிமோனி குரூப்பைத் தொடங்கினர். அதிசயம் என்னவென்றால் இரண்டே வாரத்திற்குள் நூறு ஃபாலோவேர்ஸ் இந்த குரூப்புக்குக் கிடைத்து விட்டது. முதலில் ஒவ்வொரு மெம்பர்களின் கடந்த காலத்தை நன்றாக ஆய்வு செய்த பிறகே, மெம்பராக முடிகிறது. “கிட்டத்தட்ட 90% மெம்பர்களும், ஆடிசம் குழந்தையின் பெற்றோர்கள்தான். தன் குழந்தையின் எதிர்காலத்திற்க்காக இப்போதே இந்த க்ரூப்பில் சேர்ந்துள்ளார்”, என்று பெங்களூரில் உள்ள 56- வயதுள்ள ஸ்ரீதேவி கூறினார். ஸ்ரீதேவியின் மகன் வங்கியில் வேலை பார்க்கிறான். அவன் மிகவும் பாசமுள்ள மகன். சுயாதீனமானவன். ஆனால் சரியாக பேசி பழக முடியாது.
மும்பையிலிருந்து விமலா கூறியது என்னவென்றால், ‘இந்தத் தளம் துவங்கியதன் காரணம் நம் குழந்தைகளுக்கு நல்லதொரு துணை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே.’ விமலாவுக்கு 30 வயதுள்ள ஒரு மகன் இருக்கிறான். அவன் எம்என்ஸி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் துறையில் வேலைப்பார்க்கிறான். தற்போது அவன் பெங்களூரில் வசித்து வருகிறான். எப்படி தன் ரூம் மேட்டுடன் சேர்ந்து விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று அவன் கற்றுக் கொண்டு வருகிறான்.
இப்படி அத்தனை அம்மாக்களுக்கும் தனது நன்றாக படித்து, பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன்களுக்காக தொடங்கின தளம் இதுதான்.
ஆட்டிசம் திருமணத்திற்கு ஒரு தடையா?
ஆட்டிசம் ஒரு வியாதி அல்ல. வளர்ச்சியில் ஒரு இயலாமை. அவ்வளவுதான். போக போக நிச்சயமாக நல்லவிதமான மாற்றம் காணலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அது போல, ஒவ்வொருவரின் அறிகுறி வெவ்வேராக இருக்கும். சிலருக்கு உடல் தோற்றத்தில் அசாதாரணம் இருக்கும். சிலருக்கு முக பாவத்தில், சிலருக்கு குரலில், கண்பார்வையில். அப்படி வேறுபாடுகள் இருக்கும். சிலருக்கு பேசுவதில் தாமதம் இருக்கும், படிப்பதை உட்கொள்ள தாமதம் ஏற்ப்படும். சிலருக்குப் பேசி பழகுவதில் தாமதம் ஏற்படும். என்னதான் இருந்தாலும் அவர்களால் முடியாதது ஒன்றுமே இல்லை. அவர்களிடம் இருந்து நல்லவிதமான எதிர்ப்பார்ப்பை யாராலும் பறித்தேரிய முடியாது. ஒன்றில் குறைவு இருந்தால், மற்றொன்றில் அவர்களின் திறமை அதிகமாக இருக்கும். தெய்வத்தின் விளையாட்டே அதுதான். ஆதலால், திருமணத்திற்கு ஆட்டிசம் என்றுமே ஒரு தடையாக இருக்க முடியாது.
இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆன்லைன் மேட்ரிமோனியைத் தொடங்கின இந்த ஐந்து அம்மக்களுக்கு நமது வணக்கம்!!
A