பள்ளி விடுமுறையை குழந்தைகள் எவ்வாறு கழிக்க வேண்டும்?

cover-image
பள்ளி விடுமுறையை குழந்தைகள் எவ்வாறு கழிக்க வேண்டும்?

 

விடுமுறை காலம் தொடங்கி விட்டது. கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கே நீடிப்பதால் இந்நேரம் குழந்தைக்கு தேவையான இன்றியமையாத கலைகளைக் கற்க இது சரியான சமயம். நாம் பள்ளிக்கூடத்தில் கற்கும் கல்வி குழந்தைகளின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிற பயிற்சிகளைக் கற்பிப்பது இல்லை. அந்த தேவையைப் பூர்த்தி செய்ய சில பல மிகைப்படியான கலைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். குழந்தைகள் என்னென்ன பயிற்சியில் பங்கு பெறலாம் என்று கீழ்வருமாறு அறிந்து கொள்ளவும்.

 

 

ஓவியம்:

 

குழந்தைக்கு வரைவதில் ஆர்வம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். சில குழந்தைகள் பேப்பரில் ஏதேனும் கிறுக்கிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்களுக்கு ஆர்வம் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், மறக்காமல் ஓவிய பயிற்சி கொடுக்கவும். புதியவற்றைப் படைக்கும் ஆற்றலை இத்திறன் மேம்படுத்தும்.

 

 

நீச்சல்:

 

இக்கலையை ஒரு மாதத்திற்குள் பழகலாம். ஆனால் இக்கலையைத் தொடர்ந்து பழக்கத்தில் வைக்க வேண்டும். எப்படி பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்த மறந்து விடாதீர்கள்.

 

 

சமையல் மற்றும் சுத்தப்படுத்தல்:

 

குழந்தைகளுக்கு இது மிகவுமே கடினம்தான். ஆனால் சிறு சிறு சமையல் முறைகளைப் பாதுகாப்புடன் கற்றுக் கொடுக்கலாம். எப்படி பிரட் ஸ்நாக்ஸ் தயாரிப்பது என்று படிப்படியாக கற்றுத் தரலாம்.  அதே போல, எப்படி பாத்திரம் கழுவுவது என்று கற்றுத் தரலாம். மெல்ல மெல்ல கிண்ணங்களைக் கொடுத்து அவர்களைக் கழுவச் சொல்லி பழக்கவும். அதே போல், மேசை சுத்தம் செய்வது, சிறிய துணி துவைப்பது இப்படி படிப்படியாக குழந்தைகளைப் பழக்கப்படுத்தவும்.

 

வீட்டில் தோட்டம் அமைத்தல்:

 

இக்கலையும் ஒரு எளிதான கலைதான்.  பொறுமையும், பக்குவமும் தான் தேவை. அவ்விரு குணங்களும் இக்கலை கற்பதன் மூலம் மேம்படும். தக்காளி, பீன்ஸ், மிளகாய், எலுமிச்சை, மற்றும் வெங்காயம் ஆகியன மிகவும் எளிதாக நடலாம். உங்கள் குழந்தைக்கு ஆரம்ப காலத்தில் கற்றுத் தரலாம். உணவின் மகத்துவத்தையும் இக்கலை கற்றுத் தரும்.

 

இவையல்லாது, மற்ற விளையாட்டுகள், ஆடல், பாடல் போன்ற கலைகளையும் கற்கலாம். ஆனால் இவை அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற அதிக நேரமும் காலமும் தேவைப்படும்.

 

ஆனால் ஒரு கருத்து. எந்த கலையைக் கற்கலாம் என்று முடிவு எடுக்கிறீர்களோ, அதை முடிந்த வரை முழுமையாக கற்க முயற்சிக்கவும். அதற்கும் மேலாக, உங்கள் குழந்தைக்கு அக்கலை படிக்க ஆர்வம் இருக்கிறதா என்பதை முக்கியமாக கவனிக்கவும். பெற்றோர்கள் தேர்தெடுக்கும் கலையில் தான் பிள்ளைகள் தேர்ச்சி பெற வேண்டும் என்று அடம் பிடிப்பது கொஞ்சம் கூட சரியில்லை. அவர்களின் ஆசைக்குத் தான் முக்கியத்துவம். இல்லை என்றால் பிள்ளைகள்  அக்கலையை சரியாக படிக்காமல் போகவும் வாய்ப்புண்டு. அந்த கருத்தை பெற்றோர்கள் ஒரு காலமும் மறந்து விட கூடாது.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!