சேமிக்க கற்றுத் தரவும்

சேமிக்க கற்றுத் தரவும்

22 Apr 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

 

இளைய தலைமுறையானது தொழில்நுட்பத்தின் தலைமுறையில் வாழ்ந்து வருகின்றனர். இப்படி வளர்வது வரம் மற்றும் சாபம் இரண்டையுமே கொண்டது என்பதே ஏன் கருத்து. நாம் மானசீகமாக பொருளியல் சார்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதே இதற்கு காரணம். விலைவாசி ஏறி வரும் இந்த காலக்கட்டத்தில், நம்முடைய குழந்தைகளுக்கு பணத்தினது  அருமையை மதிக்கவும், அதை வாழ்நாள் முழுதும் புரிந்து கொள்வதற்கான அடிப்படையையும் பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது மிகவும் அவசியமானதாகும்.

 

ஆனால், நம் குழந்தைகளுக்குப் பணத்தின் அருமையை எப்படி கற்றுத் தர வேண்டும்? பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

 

மனம் விட்டு பேசவும்:

 

அதிகமாக உங்கள் குழந்தை செலவு செய்தால், வெறும் கோபப்படுவதாலோ, சண்டை போடுவதாலோ எந்த வித பயனும் இல்லை. நிர்பந்திப்பதன் மூலமும் எதையும் உணர்த்த முடியாது. மாறாக பணத்தை சம்பாதிக்க நாம் இடைவிடாது செய்யும் உழைப்பையே அவர்களுடன் திறந்த மனதுடன் தெளிவாக உரையாடி புரியவைக்கவும். உழைப்பின் மகத்துவத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கவும். உழைத்தால் தான் பணம் கிடைக்கும் என்ற தாரக மந்திரத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கவும். வீட்டில் சேமிப்பு பெட்டி ஒன்றை வாங்கி வைக்கவும். நீங்கள் அவர்களுக்குப் பாக்கெட் பணம் கொடுப்பீர்களா? அதில் எத்தனை பணத்தை சேமித்து வைக்க வேண்டும்? என்று படிப்படியாக விவரிக்கவும். வங்கி என்றால் என்ன? உழைப்பால் கிடைக்கும் பணத்தை எப்படி வங்கியில் சேமிக்க வேண்டும்? அப்படிப்பட்ட பற்பல கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும். குழந்தைகளுக்குப் பற்பல கேள்விகளும் எழும். அவை அனைத்தையும் பொறுமையாக அவர்களுக்கு விவரிக்கவும். முடிந்தால் ஒரு நாள் உங்கள் குழந்தையை நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு கூட்டிக்கொண்டு செல்லவும். நீங்களும் உங்கள் துணையும், எப்படி வேலை செய்கிறீர்கள் என்பதைக் காட்டிக் கொடுக்கவும். அப்படி செய்யும்போது,  முறை தவறி குழந்தைகள் செலவு செய்ய மாட்டார்கள்.

 

சம்பாதிக்க பழக்கவும்:

 

குழந்தைகளை எப்படி சம்பாதிக்க அனுப்புவது? இப்படி நீங்கள் விநோதமாக எண்ணுவீர்கள். சம்பாதிப்பது என்றால் நீங்கள் பெற்ற பொருளைப் பத்திரமாகவும் பொக்கிஷமாகவும் நினைக்க வைக்கும். பொதுவான எண்ணம் என்னவென்றால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த ஒன்றை நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள் என்பதாகும். எந்த குழந்தைக்கு செலவு செய்ய மனம் வருகிறதோ, அவர்களை சம்பாதிக்க வையுங்கள். அதாவது, வீட்டில் அவர்கள் செய்யும்படியான சிறிய வேலை ஏதேனும் இருந்தால், அவர்களைச் செய்ய வைக்கவும். கடையிலிருந்து 1-2 பொருள் வாங்கிக் கொண்டு வருதல், டேபிள் துடைத்தல் போன்ற வேலைகளைக் கொடுக்கவும். அதற்குபின் அன்பளிப்பாக பணத்தைக் கொடுக்கவும். அவர்களுக்கு நல்ல இப்படி செய்யும்போது, பிள்ளைகள் மனதில் மூன்று எண்ணங்கள் முளைக்கும்.

 

  • உழைத்தால்தான் பணம் கிடைக்கும். இது முதல் எண்ணம்.  
  • இரண்டாவதாக, வேலையை நேர்மையுடன் செய்ய தொடங்குவார்.
  • இறுதியாக, உழைத்து கிடைத்த பணம் என்பதால் வீண் செலவும் செய்ய மாட்டார். சேமிப்பையும் தானாகவே கற்றுக் கொள்வர்.

 

குழந்தைக்குப் பொறுப்புணர்ச்சியை வளர்க்கவும்

 

நீங்கள் எத்தனை தான் பாக்கெட் மணி கொடுத்தாலும் சரி, அவர்கள் எத்தனை சேமித்தனர், எத்தனை செலவு செய்தனர், ஏன் செலவு செய்தனர், என்ற கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில் இருக்க வேண்டும்.அப்போதுதான் பணத்தை அலட்சியமாக கருதாமல் இருப்பார்கள்.

 

பெற்றோர்களே வழிகாட்டி

 

பெற்றோர்களைப் பார்த்து தான் பிள்ளைகள் ஏதொரு பழக்கத்தையும் கற்றுக் கொள்கின்றனர். முக்கியமில்லாத பொருட்கள் மீது செலவு செய்வதைத் தவிர்த்தால் பிள்ளைகளும் அப்படியே பார்த்துக் கற்றுக் கொள்வர். அளவுக்கு மீறி சிக்கனமாகவும் இருக்காமல், அதே நேரம் ஊதாரியாகவும் இல்லாமல் பெற்றோர்கள் இருந்தால், பிள்ளைகள் புரிந்து கொள்வர்.

 

சிறிய குழந்தை என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். ‘தொட்டில் பழக்கம், சுடுகாடு வரை’, என்பதை எல்லா பெற்றோர்களும் நினைவில் வைத்துக் கொள்ளவும். இந்த வளரும் பருவத்தில் நீங்கள் சொல்லித் தரும் ஒவ்வொரு பாடமும் அவர்கள் மனதில் ஆழமாக பதியும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you