மார்பக முதுமையா! – என்ன செய்யலாம்?

மார்பக முதுமையா! – என்ன செய்யலாம்?

22 Apr 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

மார்பக முதுமை என்றால் என்ன?

 

மார்பக முதுமை என்பது தாய்ப்பால் ஊட்டப்படுகிற ஆரம்ப காலத்தில் காணப்படும் பிரச்சனையாகும். குழந்தை பிறந்தவுடன், உங்கள் மார்பு தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும். எப்போது உங்கள் மார்பகம் பாலால் அல்லது உதிரத்தால் வெளியில் சுரக்க முடியாமல் நிரம்பி விடுகிறதோ, அப்போதுதான் மார்பகம் முதுமை அடைகிறது என்று அர்த்தம்.

 

மார்பகம் முதுமை அடையும்போது ஏற்படும் அறிகுறிகள் என்ன?

 

 •    மார்பகம் முதுமை அடையும்போது, மிகவும் நிறைவாகவும், கடினத்தன்மையுடனும் காணப்படும்.
 •    மார்பகத்தில் வலியும் ஏற்படும்.
 •    நிப்பிள்களும் தட்டையாகவும் இறுக்கமாகவும் மாறிவிடும்.

 

மார்பகம் எப்போது முதுமை அடையும்?

 

 •    இந்நிலை தாய்ப்பால் ஊட்டுகிற ஏதொரு சமயத்திலும் ஏற்படலாம். முக்கியமாக குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் அருந்தாதபோது.
 •    குழந்தையின் தாய்ப்பால் அருந்தும் முறையில் மாற்றம் ஏற்படும்போது.
 •    மார்பக முதுமை அடைவது என்பது தற்காலிகமானதே – போக போக குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பாலே நீங்கள் சுரப்பீர்கள்.

 

மார்பகம் முதுமை அடைவதை எப்படி தடுக்கலாம்?

 

 •    முடிந்தபோதெல்லாம் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்.
 •    முதல் 24 மணிநேரத்திற்குள் முடிந்தவரை 8 முதல் 12 முறை பாலூட்டுவது நல்லது
 •    தாய்ப்பால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு நீர் ஆகாரமாக ஊட்டவும். வேறு எந்தவித நீர் ஆகாரத்தையும் தடுப்பது நல்லது.
 •    குழந்தை போதும் என்ற அறிகுறி காட்டும் வரை பாலூட்டுவது நல்லது

 

மார்பகம் முதுமை அடைந்து என்ன செய்வது?

 

 •    மிகவும் எளிதான வழி என்னவென்றால், மார்பகம் முதுமை அடையும்போது குழந்தைக்கு உடனே தாய்ப்பால் ஊட்டி விடவும்.
 •    இல்லையென்றால் மார்பகத்தை அழுத்தி விட்டாவது, பாலை வெளியே சுரக்கவும்
 •    பாலூட்டும் முன் உங்கள் ப்ரா-வை கழற்றி விடவும்
 •    மார்பகம் நன்றாக வெளியில் பால் சுரக்க, மார்பகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் துடைக்கவும்.
 •    நிப்பிளில் அழுத்தம் கூடுதலாக இருந்தால், நிப்பிளை சற்று அழுத்தி விட்டு, பாலை மறுபடியும் மார்பகத்துக்கே அனுப்பவும்
 •    பாலூட்டும்போது உங்களது மார்பகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும்
 •    ஏதேனும் வீக்கம் இருந்தால், குளிர் ஒத்தடம் அல்லது குளிர் முட்டைகோஸ் இலைகளை மார்பகத்தின் மீது வைத்து தடவும்
 •    பாலூட்டி முடிந்த பிறகும் மார்பகம் நிறைவாக இருந்தால், பம்ப் அல்லது கையால் மார்பகத்தை அழுத்தி பாலை வெளியேற்றவும்.
 •    தாய்ப்பால் நிபுணரின் உதவியால், எலக்ட்ரிக் பம்ப் உபயோகித்தும், பாலை வெளியேற்றலாம்.

 

மேற்கண்ட வழிகளைப் பின்பற்றி எந்தவித பயனும்  இல்லையென்றால், டாக்டரிடம் கலந்து ஆலோசித்து தகுந்த தீர்வை காணவும்

 

Banner Image: treatpanel

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you