ம்யூக்கஸ் பிளக் பற்றிய தகவல்கள்

cover-image
ம்யூக்கஸ் பிளக் பற்றிய தகவல்கள்

 

ம்யூக்கஸ் பிளக் என்றால் என்ன?

 

 •        ம்யூக்கஸ் பிளக் என்பது கருப்பை வாயை பிளக் இட்டது போல் அடைக்கப் பட்டிருக்கும்.
 •        கருப்பை மற்றும் கருவில் உள்ள குழந்தையை வெளியில் உள்ள கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பதே, இந்த பிளக்கின் வேலை.

 

இந்த ம்யூக்கஸ் பிளக் எதனால் உருவாகிறது?

 

 •        கர்ப்ப காலம் தொடங்கும்போது, கருப்பை வாயிலிருந்து சுரப்பு ஏற்படும்.
 •        அதனுடன் ஈஸ்டிரோஜென் மற்றும் ப்ரோஜெச்டீரோன் சுரப்பின் அளவும் அதிகமாகிவும்.
 •        இவை அனைத்தின் சுரப்புகளின் உதவியால், ம்யூக்கஸ் பிளக் உருவாகிறது

 

ம்யூக்கஸ் பிளக் இழப்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?

 

 •        குழந்தை கீழ்நோக்கி பெல்விஸ் பாகத்தின் (இடுப்பு) பகுதியில் வரும்போது, கர்ப்பை வாய் (சர்விக்ஸ்) திறக்க ஆரம்பிக்கும்
 •        இந்த கர்ப்பை வாய் மிருதுவாகி பிரசவத்திற்கு தயாராகும்போது, ம்யூக்கஸ் பிளக் தன்னிடத்தில் இருந்து நிலை மாறி வெளியே நழுவி விடும்.
 •     கர்ப்பை வாயில் இந்த மாறுதல்கள் ஏற்படும்போது நுண்குழாய்கள் வெடித்து, ம்யூக்கஸ் பிளக்கில் ரத்தக் கரை ஏற்படும்

 

ம்யூக்கஸ் பிளக் இழப்பதை பல பெண்கள் கவனிக்காமல் போய்விடுகிறார்கள். அது எப்படி?

 

 •     சில பெண்கள் ம்யூக்கஸ் பிளக்கை ஒரேடியாக இழப்பர்.
 •     சிலர் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டு இழப்பர்
 •     பல நேரமும் பெண்கள் குளிக்கும்போது இது சம்பவிப்பதால், பலரும் கவனிக்காமல் போய் விடுவர்.
 •     பிரசவம் நெருங்க நெருங்க யோனி வெளியேற்றம் அதிகமாவதால், பலரும் கவனிக்காமல் போய் விடுவர்.

 

ம்யூக்கஸ் பிளக் இழந்த எத்தனை நேரத்திற்குள் நீங்கள் பிரசவிக்க தயார் என்று அர்த்தம்?

 

 •        ம்யூக்கஸ் பிளக் இழந்தாலே நீங்கள் பிரசவத்திற்கு தயார் என்பதே அர்த்தம்.
 •        சிலருக்கு மணிநேர கணக்கு வித்தியாசம். மற்றும் சிலருக்கு நாட்கள் வித்தியாசம்தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது ஒவ்வொரு மாதிரி. இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாது.
 •        முதல் குழந்தையாக இருந்தால், பிரசவத்திற்கு நாட்கள் வித்தியாசம்தான்.
 •        இரண்டாவதாக இருந்தால், மணிநேர கணக்குதான்.

 

ம்யூக்கஸ் பிளக் இழந்தவுடன் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

 •        நீங்கள் 37-42 வார கணக்கில் இருந்தால், ம்யூக்கஸ் பிளக் இழந்துவிட்டால், வெளியேற்றம் இயல்பான நிறத்தில் இருந்தால், உங்களுக்கு சில நாட்களில் டெலிவரி என்றே அர்த்தம்
 •        ம்யூக்கஸ் பிளக் இழந்ததுடன், வயிற்று வலியும் பனிக்குடமும் உடைந்து விட்டால், நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரம் வந்து விட்டது என்றே அர்த்தம்

 

ம்யூக்கஸ் பிளக் இழந்தவுடன் டாக்டரிடம் தெரிவிக்க வேண்டுமா?

 

 • ம்யூக்கஸ் பிளக் இழப்பதோடு, கிட்டத்தட்ட ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சிவந்த நிற உதிரமும் போனால், நீங்கள் உடனே டாக்டரை அழைக்க வேண்டும்
 • நஞ்சுக்கொடியில் ஏதேனும் கோளாறு இருக்க நல்ல வாய்ப்புண்டு

 

கர்ப்பிணிகள் எந்த வாரத்தில் பொதுவாக ம்யூக்கஸ் பிளக்கை இழப்பார்கள்?

 

கர்ப்பிணிகள் 37 - 42 வாரத்திற்கு இடையில் ம்யூக்கஸ் பிளக்கை இழப்பார்கள்

 

37 ஆம் வாரத்திற்கு முன்பே ம்யூக்கஸ் பிளக்கை இழந்தால் என்ன செய்வது?

 • சீக்கிரமாகவே பிரசவ தேதி நெருங்குகிறது என்றே அர்த்தம்.
 • பிரசவ வலி ஆரம்பமாகினால், பிரசவத்திற்கு தயார்
 • சிவந்த நிற உதிரம் போனால், அது கவலைக்குரியது என்பதை மறந்துவிடாதீர்கள்

 

ம்யூக்கஸ் பிளக்கை இழந்தால் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டா?

 

 • ம்யூக்கஸ் பிளக்கை இழந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. குழந்தையைச் சுற்றி கருசவ்வுப்பை (ஆம்நியோடிக் சாக்) இருக்கிறது. அதுதான் குழந்தையைச் சுற்றியுள்ள வேலி போன்றது.
 • முடிந்த வரை, இந்த சமயத்தில் உடலுறவு மட்டும் வைக்காமல் இருப்பது நல்லது. நீச்சலடிப்பதையும் தவிர்க்கவும்.

 

ம்யூக்கஸ் பிளக்கை நீங்களே வெளியில் பிடுங்கலாமா?

 

 •  கண்டிப்பாக கூடவே கூடாது. அது இயற்கையாகவே நடக்கும். நீங்கள் பிடுங்கினால், தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

 

ம்யூக்கஸ் பிளக் மற்றும் பிளடி ஷோ. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

 

 • ம்யூக்கஸ் பிளக் பிரசவத்திற்கு முன் வரும். லேசான பிங்க் கலரில் இருக்கும். லேசான ரத்தக் கரை இருக்கலாம். ஆனால் எப்போதும் இருக்காது. மிகவும் உறைந்து கெட்டியாக இருக்கும்
 • பிளடி ஷோ என்பது அப்படி அல்ல. இது பிரசவ நேரத்தில் வரலாம். யோனிக்குழாய் சோதனைக்குப் பின் வரலாம். உதிரம் மிகுதியாக இருக்கும். கெட்டித்தன்மை குறைவாக இருக்கும்

 

ம்யூக்கஸ் பிளக் குறித்து எனது அனுபவம்:

 

எனது முதல் பிரசவ நேரத்தில், ம்யூக்கஸ் பிளக் இழந்ததை நான் கவனிக்கவே இல்லை. மேலே குறிப்பிட்டது போல், நான் குளிக்கும்போது ம்யூக்கஸ் பிளக்கை இழந்தேனா என்று எனக்கு இப்போது வரை சந்தேகம்தான்.

 

உங்கள் அனுபவம் என்ன?

நீங்கள் எப்போது ம்யூக்கஸ் பிளக் இழந்தீர்கள்?  உங்களுக்குத் தெரிந்ததா? இல்லை, என்னைப் போலவே குழப்பம் தானா? நீங்கள் உங்கள் அனுபவத்தை கமென்ட் செய்யவும்.#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!