புதிதாகப் பிறந்த குழந்தையின் உடனடி உடல் நலப் பராமரிப்பு

cover-image
புதிதாகப் பிறந்த குழந்தையின் உடனடி உடல் நலப் பராமரிப்பு

 

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடனடியாக செய்ய வேண்டிய உடல் நலப் பராமரிப்பு, மற்றும் வரும் வாராங்களில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னவென்று கற்றுக் கொள்ளவும்.

 

  • குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்கு அவனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கருப்பைத் திரவம் ஆவியாவதால் வெப்ப இழப்பு நடைபெறும். அதைக் குறைப்பதற்காக, குழந்தையின் தோல் தட்டி உலரவைக்க வேண்டும். அந்நேரம் அவனது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.
  • புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தைக்கு, கண் தொற்றுநோய் வராமலிருக்க, அவன் பிறந்த இரண்டு மணி நேரங்களுக்குப் பின், எறித்றோமைஸின் என்ற கண் பூசு மருந்து கொடுக்கப்படும்.
  • இரத்தம் சரியாக உறைகிறதா என்று உறுதி செய்ய, குழந்தைக்கு விற்றமின் K ஊசி அளிக்கப்படும்.
  • பிறந்த குழந்தைக்கு ஹெப்பட்டைடிஸ் B நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால், அதற்கான தடுப்பூசியைக்  குழந்தைக்குப் போடப்படும்.
  • குழந்தையின் மலம் மற்றும் சிறுநீரின் வெளியேற்றங்களும் கண்காணிக்கப்படும்.
  • ஏதேனும் மஞ்சள்காமாலைக்கான அறிகுறிகள் இருந்தால், தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

 

பிறந்த குழந்தையின்  ஆரோக்கியத்தை கண்காணிக்க, அக்குழந்தை பிறந்தவுடன், பற்பல மதிப்பீடுகளுக்கு உட்படுவான்.

 

  • அப்கர் ஸ்கோர்: ஒரு நிமிடம் மற்றும் ஐந்து நிமிட வயதுக் குழந்தையாக இருக்கும்போதே, அப்கர் ஸ்கோர் என்ற முதல் மதிப்பீடு செய்யப்படும். இதில் இதயத் துடிப்பின் வேகம், சுவாசம், தசைகளின் நிலை, தோலின் நிறம், மற்றும் அனிச்சைச் செயல்கள் ஆகிய ஐந்து காரணிகளைப் பயன்படுத்தி புதிதாகப் பிறந்த குழந்தையின், உடல் நல அம்சங்களை டாக்டர் மதிப்பீடு செய்வார்.
  • பிறந்த குழந்தையின் உடல்நலப் பராமரிப்பாளர், குழந்தையின் உயரம், எடை, தலைச்சுற்றளவு, தொப்புள்நாண் ஆகியவற்றைப் பரிசோதிப்பார்.
  • உங்கள் பிறந்த குழந்தைக்கு உடற்பரிசோதனை மற்றும் கண் பார்வை மற்றும் காது கேட்டல் போன்ற பல்வேறு பிறப்புறுப்பு ஒழுங்கின்மையை திரைப் பரிசோதனை மூலம் கண்டறிவார்.
  • குழந்தை பிறந்து சற்று நேரத்தில், இரசாயன மாற்றத்தால் ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய திரைப் பரிசோதனை செய்யப்படும். அப்படி கண்டறிந்தால், தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படும். இவற்றால் ஏற்பட வாய்ப்புள்ள சிக்கல்களும் தவிர்க்கப்படும்.

 

​இவ்வத்தனை பரிசோதனைகளும்  செய்து குழந்தையின் உடல்நலன் சரியாகத்தான் இருக்கிறது என்று தீர்மானித்த பிறகுதான், தாயையும் சேய்யையும் மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்புவர்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!