முதல் பிரசவமா? பிரசவத்திற்கான நேரம் நெருங்கிவிட்டதா? என்ன பொருட்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்? என்பதை விரிவாக காண்போம்.
எப்போது நாம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை மூட்டை கட்ட வேண்டும்?
- என்னதான் டாக்டர் உங்கள் பிரசவ தேதி குறித்துக் கொடுத்திருந்தாலும், கடைசி நிமிடம் வரை பொருட்களை மூட்டைக் கட்டாமல் இருக்க வேண்டாம். கடைசி நேரம் வரை தள்ளிப் போட்டால், பதற்றம் ஏற்படலாம். பின்பு நாம் சில பொருட்களை எடுத்துச்செல்ல மறந்து விடவும் வாய்ப்பு உண்டு.
- அதனால், 35 முதல் 37 வாரத்திற்கு இடையிலேயே மூட்டைக் கட்டி விடலாம்.
எத்தனை நாட்களுக்கு தேவையான பொருட்களை மூட்டைக் கட்ட வேண்டும்?
- யோனி வழி பிரசவத்திற்கு 1-2 நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டால் போதும். சிசேரியன் என்றால் மூன்று அல்லது நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும்.
- ஆதலால், நீங்கள் ஒரு நான்கு நாட்களுக்குரிய துணிகளை எடுத்துக் கொள்வது நல்லது.
- வீடு பக்கத்தில் தான் இருக்கிறது என்றால் மூன்று நாட்களுக்கு வேண்டிய துணிகளை மட்டும் கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள் என்ன?
- புகைப்பட ஐடி (பான் கார்டு / அல்லது ஆதார் கார்டு)
- மெடிக்கல் இன்சுரன்ஸ் கார்டு மற்றும் ஆவணங்கள்
- மொபைல் ஃபோன் மற்றும் சார்ஜெர்
- இரண்டு அல்லது மூன்று சாக்ஸ்
- வேண்டுமென்றால் ஒரு ஸ்வெட்டர்
- லிப் பாம்
- தலை முடி செரி செய்ய கோம்ப் மற்றும் பான்ட், தலைமுடி கிளிப்பைத் தவிர்க்கலாம்
- பிஸ்கட் பாக்கெட்
- மேட்டர்நிட்டி பிரா
- சானிடரி நாப்கின்கள்
- ஜட்டி
- டவல்
- காற்றோட்டமான உடை (நைட்டி என்றாலும் சரி)
- செருப்பு – சப்பல் இருந்தால் சரி
- பெர்சனல் பொருட்கள் (சோப், சீப், சிறு கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், ஷாம்பூ, பவுடர், பாடிஸ்ப்ரே)
- தாய்ப்பால் ஊட்டுவதற்கு எளிதான பில்லோ, மற்றும் நைட்டி / சாரி / பிளவுஸ்
- தினசரி மருந்துகள்
- வேண்டுமென்றால் – புத்தகம்/மியூசிக் பிளேயர்
வரப்போகும் குழந்தைக்காக எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள் என்ன?
- பிறந்த குழந்தைக்கான உடை
- பிறந்த குழந்தையைப் போத்த போர்வை மற்றும் தொப்பி
- குளிர்காலம் என்றால் வுல்லன்ஸ் மறக்காமல் எடுத்துக் கொள்ளவும் (ஸ்வெட்டர், தொப்பி, சாக்ஸ்)
- பிறந்த குழந்தைக்கான கார் சீட்
கணவருக்கு வேண்டி எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள் என்ன?
- இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான உடைகள் / நைட் டிரெஸ்
- மொபைல் ஃபோன் மற்றும் சார்ஜெர்
- பிஸ்கட் பாக்கெட்
- தேவையான உள்ளாடைகள்
- டவல்
- செருப்பு – சப்பல் இருந்தால் சரி
- பெர்சனல் பொருட்கள் (சோப், சீப், சிறு கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், பாடிஸ்ப்ரே)
- தினசரி மருந்துகள்
- வேண்டுமென்றால் – புத்தகம்/மியூசிக் பிளேயர்
இவையில்லாமல் வேறு ஏதேனும் இருந்தால் மறக்காமல் கமென்ட் செய்யலாம். உங்கள் அனுபவமே மற்ற கர்ப்பிணிகளுக்குப் பாடம்!
பேனர் படம்: moneycrashers
#babychakratamil