பஞ்சொற்றிக் குளியலை எப்போது நிறுத்த வேண்டும்? குளியல் தொட்டியைப் பயன்படுத்த தொடங்கலாம்?
எப்போது புதிதாகப் பிறந்த குழந்தைகள் தனது தொப்புள்கொடி நாண் விழுந்த பகுதி குணமடைந்த பிறகு, அவர்களை குளிப்பாட்டுவதற்கு குளியல் தொட்டியைப் பயன்படுத்த தொடங்கலாம்.
குளியல் தொட்டி
- ஒரு குழந்தை தான் சுயமாக குளிக்கத் தொடங்கும்வரை, பெரிய குளியல் தொட்டியைப் பயன்படுத்த விரும்பமாட்டான். ஆதலால் முடிந்தவரை, ஒரு சிறிய பிளாஸ்ரிக் குளியல் தொட்டியை வாங்குவதே நல்லது.
- குளியல் தொட்டி வாங்கும்போது அடியில் துவாரமுள்ள சிறிய குளியல் தொட்டியை வாங்கவும்
- அப்போதுதான் குளியலுக்குப் பிறகு தண்ணீரை எளிதாக வெளியே வடித்து விடலாம்
- குளிப்பாட்டுவதற்கு முன் தங்கள் அறை வெப்பமாக இருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால், குளிர்காற்றுப் பட்டவுடன், அவர்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள்.
- குளிப்பாட்டுவதற்கு முன் உங்கள் கையில் மோதிரம் அல்லது வளையல் இருந்தால் அவற்றை அகற்றிவிடவும். இல்லையென்றால், உங்கள் குழந்தையைக் காயப்படுத்திவிடும்
தொட்டி குளியலுக்கு தேவையானவை:
- கோப்பை – 1
- குழந்தையைக் கழுவ உதவும் துணி – 1
- மென்மையான குழந்தைக்குரிய சோப்
- குழந்தைக்குரிய ஷாம்பு
- மென்மையான கம்பிளி
- குளியல் தொட்டியை கோப்பையைப் பயன்படுத்தி 5 முதல் 7 செமீ அளவு வரை வெதுவெதுப்பு நீரால் நிரப்பவும்
- மறக்காமல் உங்கள் மணிக்கட்டின் உட்பகுதியை பயன்படுத்தி தண்ணீரின் வெப்பநிலையைச் சோதிக்கவும்.
- குழந்தையின் தலை மற்றும் கழுத்தை கையால் தாங்கிப் பிடிக்கவும்
- குழந்தையின் தலையை மெதுவாகத் தண்ணீருக்குள் தாழ்த்தவும்
- குழந்தையின் முகத்தைத் துடைக்க சோப்பைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக கழுவும் துணியைப் பயன்படுத்தவும்
- குழந்தையின் உடலை சோப்பால் தேய்த்து, அலசி விடவும்.
- அதற்குப்பின் இளஞ்சூட்டு நீரால் குழந்தையின் உடலில் ஊற்றிக் கழுவவும்
- குழந்தையும் தனது குளியலை நன்றாக மகிழ்ந்தனுபவிப்பான்
- அதற்கு பின், குழந்தையின் தலைமுடியை ஷாம்புவினால் மசாஜ் செய்து, ஓரு கோப்பை நீரினால் அலசி விட்டுக் கழுவவும்
- குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டவுடன், கம்பிளியால் சுற்றி மெதுவாக உலர விடவும்
- குழந்தையின் தோல் உலராமல் இருக்க பேபி லோஷனைப் பயன்படுத்தலாம்
கவனிக்க வேண்டியவை:
- குழந்தையைக் குளிப்பாட்டும்போது நன்றாக தாங்கிப் பிடிக்கவும்
- குளிப்பாட்டும்போது குழந்தையைத் தனியே விட்டுவிடாதீர்கள். அதேபோல, வேறொரு பிள்ளையின் மேற்பார்வையிலும் விட்டுவிடாதீர்கள்.
- குழந்தைப் பராமரிப்பாளரிடம் குழந்தையைக் குளிப்பாட்டும்படி கேட்காதீர்கள்
- தண்ணீர் சூடாக இல்லையே என்று எப்போதும் கவனமாக இருக்கவும், இல்லையென்றால், குழந்தையின் மென்மையான தோல் சுட்டுவிடும்
#babycare